மிக அபூர்வமான சங்கான முத்து சங்கை பற்றி "பிரம்ம வைவர்ட்ட புராணம்" மகாலட்சுமி இதில் வாசம் செய்கிறாள் என்கிறது. ஜைன தந்திரத்தில் வரும் "பத்மாவதி சாதனை"யிலும் முத்து சங்கே பெரும் பங்கு வகிக்கிறது. மேலும் சந்திரனின் பூரண ஆகர்ஷன சக்தியையும் உள்ளடக்கியது இந்த முத்து சங்கு. நிரூபிக்கப்பட்ட முறைப்படி, இது உடல் கோளாறுகளையும் சரி செய்ய கூடியது. இரவு முழுதும் இதில் நீர் விட்டு வைத்து விட்டு மறு நாள் காலை அந்த நீரை உடலில் தோல் பிரச்னை உள்ள இடங்களில் தேய்த்து வர தோல் வியாதிகள் நீங்கும். முக வசீகரத்திற்கு முகத்தில் தினசரி இதை தேய்த்து வரலாம்.மேலும், கண்ணனுக்கு கீழே கரு வளையம் உள்ளோர், அந்த பக்கத்தில் இதை தேய்த்து வர, கரு வளையம் நீங்கி, கண் பொலிவு பெரும்.
வியாபாரத்தில் உள்ளோர், வியாபார ஸ்தலம் மற்றும் வீட்டில் என்று முறையே இரண்டு சங்குகள் வைத்து வழிபட்டு வர, பண முடை இல்லாமல் வியாபாரம் செழித்து வளரும்.
கீழ்க்கண்ட தாந்த்ரீக சாதனையின் மூலம் மிக நல்ல செல்வசெழிப்பை நம் வாழ்வில் உண்டாக்கி கொள்ள முடியும்-மிக எளிமையாக.
இதை திங்கள் அன்று இரவு 8.12 க்கு தொடங்கவும். தினசரி ஒரே நேரத்தில் தொடர்ந்து 20 நாட்கள் செய்யவும்.
தேவை : முத்து சங்கு, மஞ்சள் கலந்த அரிசி (அர்ச்சிக்க) , நெய் விளக்கு, ஒரு வெள்ளை துணி, சிறிது குங்குமம்
குளித்து முடித்து சுத்தமான உடையுடன், பூஜை அறையில் ஏதேனும் ஒரு விரிப்பில் அமர்ந்து எதிரே முத்து சங்கை வைத்து அதற்கு மஞ்சள் மற்றும் சந்தனம் இடவும்.
நெய் விளக்கேற்றி வைக்கவும் . பின்பு அதன் முன்னே குங்குமத்தால் 'ஸ்ரீம்' என கோலமிட்டு கீழ்க்கண்ட மந்திரத்தை கண் மூடி தியானித்து நிதானமாக கூறவும்-ஒவ்வொரு முறை கூறும் பொழுதும் மஞ்சள் கலந்த அரிசி சிறிது சங்கிற்கு அர்ச்சிக்கவும். இதில் அரிசியை தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை. முனை உடையாத அரிசியாக இருக்க வேண்டியது முக்கியம்.இப்படி இருபது முறை கூறி விட்டு பூஜையை முடித்து கொள்ளலாம். அனைத்தும் அப்படியே இருக்க மறு நாள், கோலம் புதிதாக இட்டு, புதிய அரிசியை கொண்டு மந்திரம் கூறி அர்ச்சிக்கவும்-29 நாட்கள் முடிந்ததும் அனைத்து அரிசியையும் மூட்டையாக கட்டி வீடு அல்லது தொழில் செய்யும் இடங்களில் கட்டி வைக்கவும். சங்கை பூஜை அறையில் வைத்து வழிபட்டு வரவும்.வருடம் ஒரு முறை இந்த 'தாந்த்ரீக சாதனை' செய்து வர, செல்வம் மென் மேலும் பெருகி நம்மை வாழ்வாங்கு வாழ வைக்கும்.
மந்திரம் :
"ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் தாரித்ரிய விநாஸின்யை தன தான்ய ஸம்ருதிம் தேஹி தேஹி நமஹ "

Post a Comment

Previous Post Next Post

Get in touch!