சென்ற பதிவில் யக்ஷினிகளை பற்றி அறிந்து கொண்டிருப்பீர்கள். இனி  அவர்களில் ஒவ்வொருவரும் (ஒவ்வொரு வகையும்) என்னென்ன தன்மையை கொண்டவைகள் என்பதை பாப்போம். இதில் சிலவற்றை சூட்சுமமாய் சொல்லியுள்ளேன். காரணம், சிலவற்றை வெளிப்படையாக கூற, தகாத விடயத்திற்கு தவறான நபர்களால் உபயோகப்படுத்தப்படின், கேடு விளையும். தனி நபர் ஆலோசனைக்கு வருவோருக்கு கூட, அவர்களின் உண்மையான நோக்கம் கண்டு மட்டுமே, முழு வழிபாட்டு முறையும் விளக்கப்படுவதுண்டு. மேலும், இதில் பல வழிபாட்டு முறைகள், மிக கடுமை நிறைந்த ஒன்றாகும். பலனும் மிகப்பெரிதல்லவா ??

விசித்ரா : அன்பானவள் - அன்பை நம் சொந்தங்களிடம் / பிறரிடம் பெற இந்த யக்ஷிணியை உபாஸிக்க, காரியம் சித்திக்கும்.

விப்ரமா : மோகம்கொண்டவள்- காதலில் வெற்றி பெற மேலும் கணவன் மனைவி ஒருவொருவர் பரஸ்பரம் மோகிக்க செய்ய, தாம்பத்திய தேவைகளுக்கு பூஜிக்கப்படுபவள்.

ஹம்ஸி : அண்ணப்பறவையை போல தோற்றம் கொண்டவள் - வேலை இடத்தில் இடையூறு, கோர்ட்டில் வழக்குகள் வெற்றி பெற, எதிரிகள் தொல்லையில் இருந்து விடுபட வழிபாடு செய்யப்படுபவள்.

பிஷாஷினி : திகிலூட்டும்  தோற்றம் கொண்டவள் - பெயர் ஒன்றே போதுமே இவளை வர்ணிக்க..

ஜனரஞ்சிகா : ஆண்களுக்கு மகிழ்ச்சியை ஆனந்தத்தை தருபவள்

விஷாலா : கருத்த பெரும் விழிகள் கொண்டவள் - பெரும் தனத்தை தர வல்லவள் - எனினும் மிகுந்த கோபம் கொண்டவள்.

மதனா : காமம் கொண்டவள் - மாயமாய் மறையச்செய்யும் சக்தி கொண்ட யக்ஷினி இவள்.

கண்ட்டா : மணியானவள் - தம்மை வழிபடுவோரை உலகமே மோகிக்க செய்யும் தன்மை கொண்ட யக்ஷினி.

கலகர்ணி : கலச குண்டலங்களை அணிந்தவள் - அனைத்து வெற்றியையும் அள்ளித்தருபவள்.

மஹாபயா ; மிகவும் பயமுறுத்தும் தோற்றம் கொண்டவள்

மஹேந்திரி : மிகவும் சக்திகொண்டவள் - தம்மை பூஜிப்போரை காற்றில் பறக்கவைக்கும் சக்தி இவளுக்கு உண்டு.

ஷங்கினி : சங்கின் தோற்றமுடையவள் - அனைத்து தேவைகளையும்  பூர்த்தி செய்பவள்.

சந்திரி : நிலவின் தோற்றமுடையவள் -  கேட்டதை கொடுப்பவள்.

ஷ்மஷனா : மயானத்தில் வசிப்பவள்.

வடயக்ஷினி : பொன்  பொருள் ஆபரணங்களை அருள்பவள். மாய மந்திர வித்தைகளில்  தேர்ச்சி தருபவள்.

மேகலா : காதலை அள்ளித்தருபவள்

விகளா : உணவு, தானியங்களை தருபவள்.

லக்ஷ்மி : பொன்,பொருள், ஆடை ஆபரணங்கள் அனைத்தும் தருபவள்.

மாலினி : பூவை போன்றவள் - எவ்வித எதிர்ப்பையும் இவள் ஆசி இருந்தால் அடித்து நொறுக்கலாம்.

ஷடபத்ரிகா : நூறு பூக்களின் தோற்றமுடையவள்

ஷுலோச்சனா : அழகிய கண்களை கொண்டவள் - எவ்வித இடத்திற்கும் நொடிப்பொழுதில் நம்மை சேரவைக்கும் சக்தி கொண்ட யக்ஷினி.

ஷோபா : அழகிய தோற்றம் மற்றும் வேண்டியதை தரும் யக்ஷினி தேவி.

கபாலினி : மண்டை ஓட்டை மாலையாய் கொண்டவள் - கபால  மோட்சம் கொடுக்க வல்லவள்.

வரயக்ஷினி : கேட்கும் வரத்தை அளிப்பவள்.

நடி : நடிகையானவள் - மறைந்திருக்கும் புதையலை இவள் ஆசி கொண்டு எடுப்பது வழக்கம்.

காமேஸ்வரி : காமத்தை கொடுப்பவள்.

மனோஹரா : கண்கவர் தோற்றம் கொண்டவள்- தம்மை பூஜிப்போரை அவளை போன்றே தோற்றமுறச்செய்பவள்.

ப்ரமோதா : நறுமணமானவள் : வாழ்வில் வசந்தம் தருபவள்.

அனுராகினி : உணர்ச்சிமிக்கவள்- பொன்னை தரும் தேவி.

நாககேஷி : சர்ப்பங்களின் சக்தியை அளிப்பவள்.

பாமினி : பெண்களை வசீகரிக்கவும்
, புதையலை தேடி எடுக்கவும் உதவும் யக்ஷினி.

பத்மினி : பொன் பொருள் வீடு பேறு தருபவள்.

ஸ்வர்ணவதி : இவளை பூஜிக்க அஷ்டமாசித்தும் கைகூடும்.

ராத்ரிப்ரியா : காதல் கொண்டவள்- அன்பானவர்கள் ஒன்று சேர வழிபடப்படுபவள்.

வேறு ஒரு பதிவில் இவர்களின் ஒவ்வொருவருக்கும் உண்டான மந்திரங்களை விளக்குகிறேன். 

Post a Comment

Previous Post Next Post

Get in touch!