ஹோமங்களில் முதன்மையானதும் முக்கியமானதும் கணபதி ஹோமமாகும். சில நூறு முறைகள் மந்திரத்தை ஓதி செய்யும் ஹோமமே தடைகளை நீக்கி, கிரகங்களின் துர் தாக்கத்தை குறைக்கும் எனில், கற்றுணர்ந்த இருபதிற்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்களால் லக்ஷம் முறை ஜெபிக்கப்பட்டால்  ??

பலன்கள் பல்லாயிரம்...அப்படிப்பட்ட பலன்கள் தான் புத்தாண்டு பரிசாக உங்களுக்கு கிடைக்க போகிறது ஜனவரி முதல் தேதியன்றே.

பல் விதமான ஹோமங்கள் நடத்துவதை  பரம்பரையாக கைவரப்பெற்ற, என் உடன் பிறவா சகோதரர்
திரு. பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்-ன் 'ஸ்ரீ வித்யா அறக்கட்டளையின் மூலம் நடத்தப்படும் இந்த மகா யாகத்திற்கு நம் 'ருத்ர பரிகார ரக்க்ஷா சென்டரின்' சிறு பங்களிப்பும் உண்டு.

ஹோமத்தின் சிறப்புகள் :

காலை 7  முதல் மாலை 6 மணிவரை இடைவிடாது ஒரு லக்ஷம் முறை மந்திரங்கள் கூறி செய்யப்படும் ஹோமத்தின் பொழுது அவ்விடத்தின் ஆற்றல்கள் அளவிடமுடியாததாக இருக்கும். எதிர்மறை சிந்தனைகள் மற்றும் எவற்றிலும் தோல்வி என்ற நிலையில் இருப்போருக்கு உடனடி நிவாரணம் இந்த ஹோமத்தில் கலந்து கொள்வது எனலாம்.

ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடும்பத்துடன் கலந்து கொள்வோருக்கு ஏதுவாக இருக்கும்.

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம், ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் மற்றும் திருபுகழ் பாராயணம் தொடர்ந்து நடைபெறும்.

அதியற்புத மூலிகைகளை கொண்டு செய்யப்படும் மஹா ஹோமம் இது. ஆங்கில வருடத்தின் முதல் நாளில் வருவதால் அனைவரும் கலந்து கொண்டு வாழ்வில்  நன்மைகள் பெறுக செய்வோம்.

ஹோமத்தில் கலந்து கொள்ள எவ்வித கட்டணமும் இல்லை. எனினும், பொதுவாக ஹோமத்திற்கு நல்லெண்ணெய், அரிசி, தேங்காய், நெய் போன்றவை கொடுப்பதால் நமக்கு நன்மைகள் பெருகும். முடிந்தோர் செய்து பயன் பெறலாம். பொருளுதவியாக கொடுக்க நினைப்போர் தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

உங்கள் குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நேரிடையாக சங்கல்பம் செய்து கொள்ளக்கூடிய ஒரே யாகம் இது மட்டுமாக தான் இருக்கும். ஆகவே சந்தர்ப்பத்தை நழுவ விடாதீர்,

வெளியூர் அன்பர்களே, தங்கள் குடும்பத்தினர் அனைவரின் பெயர், நட்சத்திரம் மற்றும் கோத்திரம் இருப்பின் அவற்றின் தகவல்களை தனி தபாலில் இட்டு, ஒரு சுய விலாசமிட்ட தபால் தலையுடன் கூடிய கவரை அனுப்பி வைக்குமாறு கேட்டு கொள்கிறோம். அனைவருக்கும் ஹோம பிரசாதம், தன ஆகர்ஷணத்தை ஏற்படுத்தும் சிகப்பு சந்தன செட் மற்றும் மந்திரித்த முடிக்கயிறு அனுப்பி வைக்கப்படும்.

ஹோமம் நடைபெறும் இடம் : ராமு கல்யாண மண்டபம், தெற்கு பூங்கா தெரு, அம்பத்தூர், சென்னை -காலை ஏழு மணி முதல்.

கவர்கள் அனுப்ப முகவரி :


Rudra Parihaar Raksha Centre, 69, AF Plaza,1st Flr, Arya Gowda Road,West Mamblam, Chennai 600033.ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
69, AF பிலாசா, முதல் மாடி,
ஆரிய கவுடா ரோடு, மேற்கு மாம்பலம், ஸ்ரீ கிருஷ்ண சுவீட்ஸ் எதிரில், சென்னை 33.

பூ, பழங்கள், அரிசி, தேங்காய், நல்லெண்ணெய், நெய் அல்லது பொருளுதவி செய்ய விருப்பமுள்ளோர் +918754402857 




Post a Comment

Previous Post Next Post

Get in touch!