Friday, 9 December 2016

கேட்டதை அள்ளித்தரும் தத்தாத்ரேயர் (13.12.16 ஜெயந்தி )

தன்னை உள்ளன்போடு உபாசிப்போருக்கு உடனடி வசமாகி, கேட்டதை அள்ளித்தரும் கலியுக கடவுள் தத்தாத்ரேயர். இவரின் ஜெயந்தி விழா 13.12.16 அன்று உலகெங்கும் விமர்சையாக கொண்டாடப்படும். இந்த நாளில் அவரின் கோவிலுக்கு சென்று கர்ப கிரக விளக்கிற்கு தூய நெய் சேர்த்து வழிபட்டு வர நன்மைகள் வந்து சேரும். மேலும், அன்னதானமிடுவோரை இவருக்கு மிகவும் பிடிக்கும். திருமண தடை அல்லது திருமணம், மண வாழ்வு சார்ந்த பிரச்சனைகள் உடையோர், இந்த தினத்தில் இவரை வழிபட்டு குறைந்தது 9 நபர்களுக்கு மதிய வேளையில் (1 :15 - 2 மணிக்குள் ) எலுமிச்சை சாதம் தானமாக அளிக்க, தடைகள் விலகுவதை கண் கூடாக காணலாம். மேற்கண்ட திருமண பிரச்சனைகள் இல்லாதோரும் தானமளிப்பின், அன்றாட வாழ்வின் தடைகள் நீங்கும். இவரின் 'வஜ்ர கவசத்தை' கூறி வர கிரங்களால் ஏற்படும் இடையூறுகள் நீங்கும்.

Thursday, 8 December 2016

அவரவர் ராசிக்குரிய பீஜ மந்திரங்கள்



பீஜ மந்திரங்கள் மிக சக்தி வாய்ந்தவை. அவற்றுடன் பிரணவ மந்திரமும் சேரும் பொழுது மிக சக்திவாய்ந்த ஒன்றாகிறது. கிரந்தங்களில் கொடுக்கப்பட்டுள்ள அவரவர் ராசிக்கு  உரிய மந்திரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இதை தினசரி எண்ணிக்கை வைக்காமல் எவ்வளவு முறை மனதினுள் கூறி வர செய்கிறோமோ, அதற்குரிய நன்மைகள் வந்து சேரும். 

மேஷம் :                  ஓம் ஐம்  க்லீம் சௌம் 
ரிஷபம் :                  ஓம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் 
மிதுனம் :                ஓம் ஸ்ரீம் ஐம்  சௌ
கடகம் :                  ஓம் ஐம்  க்லீம் ஸ்ரீம் 
சிம்மம் :                 ஓம் ஹ்ரீம் ஸ்ரீம்  சௌ
கன்னி :                  ஓம் ஸ்ரீம் ஐம் சௌ
துலாம் :                 ஓம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம்  
விரிச்சிகம் :          ஓம் ஐம் க்லீம் சௌ
தனுசு :                   ஓம் ஹ்ரீம் க்லீம் சௌ
மகரம் :                 ஓம் ஐம் க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌ
கும்பம் :               ஓம் ஹ்ரீம் ஐம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் 
மீனம் :                 ஓம் ஹ்ரீம் க்லீம் சௌ

Tuesday, 6 December 2016

கீதை ஜெயந்தி-10.12.16



கிருஷ்ணா பரமாத்மா அர்ஜுனருக்கு கீதையை உபதேசித்த தினம்-கீதை பிறந்த நாள். இவ்வருடம் இது சனிக்கிழமையான 10.12.16 அன்று வருவது மிகவும் சிறப்பான ஒன்று. அன்றைய தினம் கிருஷ்ணருக்கு நெய் விளக்கேற்றி,பகவத் கீதையின் முதற் சர்க்கத்தை படித்து நிவேதனம் செய்து வழிபட, சனி கிரகத்தினால் ஏற்படும் அனைத்து துன்பங்களும் முடிவுக்கு வரும். தடைகள் நீங்கும். அன்றைய தினம் பசுவிற்கு தங்களால் முடிந்த உணவை கொடுப்பதினாலும் பலன் பன்மடங்காகும். விருச்சிக, தனுசு ராசியினர் அவசியம் செய்ய வேண்டிய ஒன்று.