மேற்கண்ட நாள் தை அமாவாஸ்யை மட்டுமல்ல, அனைவரும் அமைதியாக மௌன விரதம் கடைபிடிக்க வேண்டிய 'மௌனி அமாவாஸ்யை' ஆகும். இந்நாளில் அனைவரும் ஒரு வார்த்தை கூட பேசாமல் மௌன விரதத்தை கடைபிடிக்க வேண்டுமென நம் புராதன கிரந்தங்கள் கூறுகின்றன. இந்த மௌன விரதம் வரும் ஆண்டு முழுதும், நமக்கு பிறரிடம் சண்டை சச்சரவுகள் இல்லாமலும், தெளிவான முடிவுகள் எடுக்கவும் உதவும். அதிகாலையில் எழுந்து முடிந்தோர் கடல் ஸ்நானம் அல்லது புனித ஆற்றில் ஸ்நானம் செய்து, (இவ்விரண்டும் முடியாதோர் குளிக்கும் நீரில் 'ஹிமாலயன் ராக் சால்ட்' இட்டு குளிக்கவும்) பித்ருக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை செய்து, காக்கை மற்றும் பசுவிற்கு உணவிட்டு அமைதியாக மறு நாள் காலை ஆறு மணி வரை, பகவான் கிருஷ்ணரின் நாமத்தையோ அல்லது மகா காளியையோ நினைத்து அமைதியை கடைபிடித்து நம் மனதின் ஓட்டங்களை கவனித்து வரலாம். வருடத்தில் ஒரு முறை வரும் அருமையான நாள் இது. இந்த மௌன விரதத்தின் முக்கியத்துவமே, நம் வாழ்வின் துன்பங்களை கலைவதற்காகும். எனவே, மௌன விரதம் மேற்கொள்வோர், இணையத்தில் நேரத்தை செலவிட்டும்
, தொலைக்காட்சியில் செலவிட்டும் வீணாக்க வேண்டாம்.

மௌனத்தை கடைபிடித்து நம்மை அறியும், தெய்வீக நிலைக்கு அழைத்து செல்லும் ஒரு சுலப மூச்சு பயிற்சி முறையை விரைவில் வீடியோவாக பதிய இருக்கிறோம்.

ஹரி ஓம் தத் சத் :

Post a Comment

Previous Post Next Post

Get in touch!