விநாயகர் சதுர்த்தி நாளில் நன்மை சேர்க்கும் நவ விநாயக வழிபாடு
வெள்ளெருக்கன் வன்னி விநாயகரை பற்றி குறிப்பிட்டிருந்தோம், வருடத்தில் ஒரு முறை மட்டுமே கிடைக்க கூடிய அறிய வாய்ப்பான இந்த விநாயகர் சதுர்த்தியில் மேற்கண்ட வெள்ளெருக்கன் வன்னி விநாயகரை வைத்து அவர் முன் , வீட்டிலேயே எட்டு வகை பிள்ளையாரை பிடித்து வைத்து வழிபட எல்லா வித நன்மைகளும் வந்து சேரும். அவற்றை இப்பொழுது பார்ப்போம்.

வெள்ளெருக்கன் வன்னி விநாயகர் அனைத்து வித வாழ்வியல் தடைகளையும் நீக்க வல்லவர். இவர் முன் மஞ்சள் பிள்ளையாரை  பிடித்து வைக்க, திருமண மற்றும் சுபதடைகள் நீங்கும். அதனுடன் வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வைக்க, சௌபாக்கியம் சேரும், அதனுடன் உப்பில் பிள்ளையார் பிடித்து வைக்க, எதிரிகளால் தொல்லை மற்றும் கடன் தொல்லை அகலும், அதனுடன் வேப்பம் இலைகளை குழைத்து பிள்ளையார் பிடிக்க, அனைத்திலும் வெற்றி உண்டாகும், மேலும், பசுஞ்சாணத்தில் பிள்ளையார் பிடிக்க, நினைத்த காரியங்கள் நிறைவேறும், அதனுடன் வெண்ணையில்  பிள்ளையார் பிடிக்க, தீராத வியாதிகள் தீரும், எட்டாவதாக பச்சரிசி மாவு கொண்டு பிள்ளையார் பிடிக்க, வீட்டில் உணவு பொருட்களுக்கு குறையேதும் வராத வண்ண இருக்கும், கடைசியாக மண் பிள்ளையார் பிடித்து வைக்க, ராஜ யோகங்களை பெறலாம்.

இது போன்று ஒன்பது பிள்ளையார்களை வைத்து வழிபட்டு, நிவேதனம் செய்து, பின் மறுநாள் அஷ்ட பிள்ளையார்களை மட்டும் ஆற்றிலோ அல்லது நீர் நிலையிலோ சேர்த்து விட்டு வழிபட்டு வரலாம்.

தனிப்பட்ட முறையில், தெருவோரங்களில் வாங்கப்படும் கலர் பிள்ளையார்களை வைத்து வழிபாடு இந்நாளில் செய்வது தகாத ஒன்றாகும். வண்ணம் சேர்க்கப்படாத களிமண் பிள்ளையார்கள் வாங்கலாம். அவரவர்கள் தங்கள் கைகளால் மறு நாள் மறு பூஜை செய்து, நிவேதனமிட்டு, பின் கடலில் அல்லது நீர் நிலைகளில் சேர்ப்பது மட்டுமே பலன் தரும். பலர், தெருக்களில் காட்சிக்காக வைக்கப்படும் பிள்ளையார் சிலைகளுடன்,தாங்கள் பூஜித்த பிள்ளையாரை சேர்த்து விடுகின்றனர். இது பாவச்செயலாகும். 

Post a Comment

Previous Post Next Post

Get in touch!