திருமண தடை, காரிய தடை நீக்கும் கணேச சங்குஅதிசயங்களில் அதிசயமான சங்குகள் மிக நல்ல பலன்களை மிக வேகமான முறையில் தர வல்லவை. அதில் ஒன்று தான் கணேச சங்கு. இயற்கையிலேயே கணேச முக வடிவுடன் காணப்படுவதால் மட்டுமல்லாமல் திருமண தடை, எங்கும் எதிலும் காரிய தடை, ஏழரை, கர்ம, கண்டக, அஷ்டம சனி காலங்களில், லக்னத்தில் அல்லது அஷ்டமத்தில் கேது அல்லது சனி இருப்பின் இதை வைத்து பூஜித்து வர அனைத்து தோஷங்கள் மற்றும் கஷ்டங்கள் விலகி நன்மைகள் பெருகும். காலையில் குளித்து முடித்ததும் சுத்தமான நீரை இதில் ஊற்றி கைகளில் வைத்து கொண்டு 'ஓம் கணேசாய நமஹ' என 70 முறை கூறி பின் அந்த நீரை குடித்து விட்டு சென்றால் அன்றைய தினம் மிகவும் வெற்றிகரமாக இருபது கண்கூடு. மேலும் அடிகடி விபத்துக்குள்ளாகும் வாகனங்களில் இந்த சங்கை வைத்து வழிபட்டு வர வாகன விபத்துகள் நேராமல் அந்த கணேசர் நம்மை காப்பாற்றி அருள் புரிவார்.

Post a comment

0 Comments