#தடை செய்யப்பட்ட தாந்த்ரீக பொருட்கள் 1சாமுண்டியின் ரூபமாக, தான் இருக்கும் இடத்தை சர்வ வசீகரம் செய்ய கூடிய சக்தியை பெற்றது தான் 'ஹத ஜோரி" பண வசீகரம் மற்றும் ஜன வசீகரம் செய்யும் அபூர்வ மூலிகை இது. "ஹத ஜோரி" எடுக்கப்படும் 'பிர்வா' மரங்களை வெட்டப்பட தடை போட்டு விட்டதால்,ஒரு சில வருடங்கள் முன் அபூர்வமாக கிடைத்து கொண்டிருந்த ஹத ஜோரி யை  தற்சமயம் காண்பதே அரிதாக உள்ளது.

2014 ஆம் ஆண்டு இதை பற்றிய கீழ்கண்ட கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

"ஹத ஜோரி" யின் வீரியத்தை அதிகரிக்கும் முறை அல்லது உயிர்ப்பிக்கும் முறையை பார்ப்போம்.
வெள்ளி டப்பியில் வைத்திருப்பது மிகுந்த நன்மை தரும்-சிறிய குங்கும சிமிழ் வெள்ளியில் உள்ளது கூட போதும். டப்பியின் உள் சிறிது மஞ்சள் மற்றும் குங்குமம் போட்டு வைத்திருக்கவும். இதை ஞாயிறு அன்று நல்ல நேரத்தில் கடல் நீரில் கழுவி சிகப்பு துணியில் (பட்டு துணி மிக சிறந்தது) வைத்து இதனுடன் சிறிது கிராம்பு, மற்றும் சிறிது பச்சை அரிசி வைத்து சிகப்பு துணியில் முடிந்து வைத்து, தொடர்ந்து 21 நாட்கள் கீழ்க்கண்ட மந்திரத்தை அதை திறந்து வைத்தவாறே கூறி விட்டு பின்பு மூடி அதே இடத்தில் வைத்து விடவும்-இடம் மாறக்கூடாது. 21 நாட்கள் முடிந்ததும் அதை தினசரி பார்த்து விட்டு அன்றாட வேலையை தொடங்கலாம். முக்கிய சமயங்களில் மட்டும் தன்னுடன் எடுத்து செல்லலாம்.

மந்திரம் : ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் சாமுண்டாயை நமஹ " -

Post a comment

0 Comments