Saturday, 3 December 2016

திருமண தடை, மண வாழ்வில் பிரச்சனைகளை நீக்கும் விவாஹ பஞ்சமி வழிபாடு 4.12.16ஸ்ரீமான் ராமருக்கும் புண்யவதி சீதைக்கும் திருமணம் ஆன தினமே விவாஹ பஞ்சமியாக கொண்டாடப்பட்டு வருகிறது, தொன்று தொட்டு. அப்படிப்பட்ட புண்ய தினம் நாளை-4.12.16.

இத்தினத்தில் திருமணம் வேண்டி காத்திருப்போர், தன் மகன் மகளை திருமணம் செய்ய பொருள் இல்லாது தவிப்போர், மற்றும் தன் பெண்,ஆண் பிள்ளைகள் தவறான மணமுடிக்காது, நல்ல வரனை கைப்பிடிக்க வேண்டியிருப்போர், மண வாழ்வில் நிம்மதியற்று இருப்போர் அனைவரும் மாலை குளித்து, துவைத்த ஆடை அணிந்து ராமரின் பட்டாபிஷேக படத்தை வைத்து, கோலமிட்டு , தனி மண் அகலில் நெய் தீபமேற்றி, ராமாயணத்தின் சீதா ராம விவாஹ சர்க்கத்தை படித்து முடித்து நிவேதனம் செய்து வழிபட, மேற்கண்ட துன்பங்கள் தீர்ந்து நல்வழி பிறக்கும். அப்படி செய்ய முடியாதோர் ராமரின் சன்னதி கர்ப கிரக விளக்கிற்கு தூய  நெய் கொடுத்து , சன்னதியில் ஒன்றரை மணி நேரம் இருந்து மனமுருகி வேண்டி வர மேற்கண்ட அதே பலன் உண்டு. வருடத்தில் ஒரு முறையே வரும் இந்த கிடைத்தற்கரிய நாளை பயன்படுத்தி நல் வழி பெற எல்லாம் வல்ல அந்த சீதாராமரை பிரார்த்திக்கிறேன்.

"ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே"

                ஹரி ஓம் தத் சத்

Friday, 2 December 2016

தனத்தை அள்ளித்தரும் "தனாத யக்ஷிணி"

மேற்சொன்ன "தனாத யக்ஷிணி"யானவள் 22 வயதேயுடைய இளம் யக்ஷிணி ஆவார்.நீல நிற கண்களையுடையவள். சுலபமான பூஜை முறைகளால் சாதகருக்கு தன தேவைகளை பூர்த்தி செய்வது என்றால் இந்த ஒரே யக்ஷிணி தான் எனலாம். 18 வயது பூர்த்தியடைந்த இருபாலரும் வழிபாடு செய்யலாம். யக்ஷிணிகளை பற்றிய கட்டுரைகளை தொடர்ந்து பலரும், யக்ஷிணி உபாசனைகளை கற்று உணர ஆர்வம் காட்டி வருகின்றனர். எனினும் சாதகருக்கு எவ்வித தொல்லைகளும் இல்லாத வண்ணம் எந்த யக்ஷிணி உபாஸனையை கொடுக்க வேண்டுமோ அதை மட்டுமே கொடுக்க வேண்டியது, ஒருவரின் கடமை. வரும் வாரம் முதல் இந்த யக்ஷிணி சாதனை தனிதனியாக (One to One) கொடுக்க இருக்கிறோம். மேலும் தன ஆகர்ஷண தேவதைகள் பயிற்சி அனைவருக்குமாக, பயிற்சியாக அமையும். அதன் அறிவிப்பு விரைவில் வெளிவரும். 

Wednesday, 30 November 2016

ஏவலை விலக்கும் சூலினிமேற்கண்ட சூலினியானவள் சரபேஸ்வரரின் ஒரு இறக்கையாக தோன்றியவர். ஏவல், பில்லி, சூனியம் அல்லது மாடனின் தொல்லைகள் தமக்கு இருப்பதாக தோன்றினாலோ, அல்லது எவரேனும் கூறியிருப்பின், 9 செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் ராகு வேளையில், இவரின் படத்தை ஒரு    மரப்பலகையில் வைத்து, மா கோலமிட்டு ,வேப்பிலைகளை தூவி அதன் முன் மண் அகலில் நல்லெண்ணெய் தீபமேற்றி கீழ்கண்ட மந்திரத்தை கூறி, முடிந்த நிவேதனம் செய்து  வழிபட்டு வர, மேற்கண்ட பிரச்சனைகள் விலகும். இதே பரிகாரத்தை  சரபேஸ்வரர் சன்னதியிலும் மேற்சொன்ன விதத்தில் செய்து வரலாம். மேற்சொன்ன சூலினியானவள், கலிகாலத்தில் எதிரிகள் தொல்லை, கிரக கோளாறுகள் போன்ற அனைத்தையும் நீக்க வள்ளால்.

வழிபடும் முறை : கிழக்கு முகம் பார்த்து மந்திரம் கூறி வழிபடவும். முடிந்த நிவேதனம் செய்யலாம்.

மந்திரம் எவ்வளவு முறை??

108  அல்லது 1008 என பாதிப்பின் கடுமையை பொறுத்து செய்யவும். மேற்கண்ட முறைக்கு மாற்று எதுவும் இல்லை.
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ச்ரௌம் தும்
ஜ்வல ஜ்வல சூலினி
துஷ்ட க்ரஹ ஹூம் பட் ஸ்வாஹா

Monday, 28 November 2016

விரும்பியவர் வசப்பட

வீட்டில் ஆண்,பெண் குழந்தைகள் அல்லது வயதுக்கு வந்தோர் பெற்றோர் சொல் கேளாமல் தன்னிஷ்டப்படி இருந்து வந்தாலோ, சகோதர சகோதரிகள் மேற்கண்ட விதம் இருந்தாலோ, அல்லது கணவனோ மனைவியோ ஒருவருக்கொருவர் சொல் பேச்சு கேளாமல் இருந்து,அதனால் குடும்பத்தில் சலசலப்பு இருந்து வரின் கீழ்கண்ட மாதங்கி மந்திரத்தை, படத்தின் முன் நெய் தீபம் ஏற்றி வைத்து, தினசரி முடிந்தளவு கூறி நிவேதனம் செய்து வரின், மேற்கண்டோர் வசப்படுவர். அதீத சக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை, தவறான செயல்களுக்கு உபயோகிப்பின், பின் விளைவுகள் மிக மோசமானதாக இருக்கும்.

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம்  க்லீம் சௌ
ஓம் நமோ பகவதீ ஸ்ரீ மாதங்கேஸ்வரி
சர்வஜனமனோஹரி சர்வமுகரஞ்சனி
க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம் சர்வஜனஷங்கரி
சர்வாஸ்திரீபுருஷவஸங்கரி  
ஸர்வதுஷ்டாம்ருகவஸங்கரி  ஸர்வஸத்வவஸங்கரி
ஸர்வலோகவஸங்கரி ______________ நமணம் மே
வசமானய ஸ்வாஹா :

மேற்கண்ட கோடிட்ட இடத்தில நபரின் பெயர் சேர்த்து கொள்ளவும். நபர் பெண்ணாகில் 'நமணம்' பதில் "நமணீம்"
என உச்சரிக்கவும்.

குறிப்பு : படம் தேவைப்படின் கொடுக்கப்பட்டுள்ளதை பதிவிறக்கம் செய்து உபயோகிக்கவும். 

Sunday, 27 November 2016

உடல் நலமற்றிருப்போர் மற்றும் மருத்துவர்களால் கைவிடப்பட்டோர்


மேற்கண்ட நிலையில் இருப்போர் மற்றும் மிகுந்த வியாதிகளுக்கு உள்ளாகி அவதிப்படுவோர், அமாவாசை நாளன்று தங்களின் உடுப்பு ஏதாவது ஒன்றிலிருந்து, சிறுது கிழித்து (உடுப்பு, உடுத்தி துவைத்ததாக இருக்க வேண்டும்) நூலாக திரித்து, அதை ஒரு மண் அகலில் நல்லெண்ணெய் தீபமாக ஆஞ்சநேயர் அல்லது பைரவர் சன்னதியில் ஏற்றி வழிபட, ஆச்சரியத்தக்க முன்னேற்றம் ஏற்படும். மாலை நேரம் ஏற்றி வரலாம். இவற்றை குறிப்பிட்ட நபருக்காக அவரின் இரத்த சொந்தங்கள் செய்யலாம்.  மிகுந்த சக்தி வாய்ந்த பரிகாரம் இது.

வரும் அமாவாசை 28.11.16  திங்கள் நான்கு பத்திற்கு துவங்கி செவ்வாய் 29.11.16 ஆறு மணியுடன் முடிவடைவதால், திங்களன்றே மேற்கண்ட பரிகாரத்தை செய்யலாம். முடியாதோர், செவ்வாய் காலை வேளையில் செய்யவும்.


Saturday, 26 November 2016

செவ்வாய் அமாவாசை சிறப்பு பரிகாரம் - 29.11.16வரும் செவ்வாய் மாலை ஆறுமணிக்குள் பசுக்களுக்கு மாம்பழம் மற்றும் அன்னாசிப்பழம் அல்லது ஏதேனும் ஒன்று இயன்ற அளவு தம் கைகளால் கொடுத்து உண்ண செய்யின், நம்மை வாட்டி வதைக்கும் வறுமை, பிணிகள், முன்னோர் சாபங்கள் விலகி சுபிட்சம் ஏற்படும்.

எந்த நிற மாட்டிற்கும் கொடுக்கலாம்-செந்நிற மற்றும் கருப்பு மாடுகளுக்கு கொடுப்பின், கூடுதல் பலன் தரும்.

குறிப்பு : இந்நாளில்
தோல் பொருட்கள் உபயோகம் செய்தல் மற்றும் அசைவம் தவிர்த்தால் மட்டுமே பலன்-முட்டை உட்பட. 

Friday, 25 November 2016

சனி த்ரியோதசி மஹா பிரதோஷம்-26.11.16


நாளை 4:30 மணியளவில் சிவன் சன்னதி சென்று பச்சரிசி மாவினால் அபிஷேகம் செய்வித்து, கர்ப்ப கிரக விளக்கிற்கு தூய நெய் சேர்த்து, பின் சண்டிகேஸ்வரர் சன்னதியில் ஓர் மண் அகலில் நல்லெண்ணெய் தீபமும் நந்தியெம்பெருமானுக்கு ஒரு நெய் விளக்கும் இட்டு, பின் வெளி பிரகாரத்தில் 8 மண் அகலில் கருப்பு திரி கொண்டு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி 5 :30 மணிவரை கோவிலில் இருந்து வழிபாடு செய்து வர தீராத கடனும் தீரும்-கிடைத்தற்கரிய அற்புத நாள் இன்று.
வேறு முறை : சுவாதியும் சேர்ந்தே வருவதால், மாலை 5 :30 - 6 மணிக்குள் லட்சுமி நரசிம்மர் சன்னதி கர்ப்ப கிரக விளக்கிற்கு நெய் தீபம் சேர்த்து, அங்குள்ளோர்க்கு எலுமிச்சை சாதம் தானம் செய்ய கடன்கள் அனைத்தும் கரைந்து போகும். ( பரிகாரமாக தானம் கொடுக்கும் பொருளை தாங்கள் உண்ண கூடாது )
மேற்கண்ட இரண்டில் எது வேண்டுமானாலும் செய்யலாம். இரண்டையும் செய்ய முடிந்தோர் மஹா பாக்கியசாலிகள் ஆவர். இதே நேரத்தில் அரச,ஆல மரத்திற்கு நீர் ஊற்றி வருவதும் மிக நன்று.

Thursday, 24 November 2016

இழந்த, தொலைந்த, அபகரிக்கப்பட்ட பணம் பொருட்கள் திரும்ப கிடைக்கமேற்கண்ட விஷயங்களுக்கு 'கார்த்தவீர்யார்ஜுனரின்' படத்தை வைத்து நெய் தீபம் தனி அகலில் ஏற்றி 27 முறை கீழ்கண்ட மந்திரத்தை கூறி வழிபட்டு வர, இழந்தவை திரும்ப கிடைக்கும் என்பது புராணங்களின் கூற்று.

"ஓம் - ஆம் ஹ்ரீம் - க்ரோம்
கார்த்த வீர்யார்ஜுனாய நமஹ
கார்த்த வீர்யார்ஜுனோ நாம
ராஜா பாஹு ஸஹஸ்ரவான்
யஸ்யஸ்மரண மாத்ரேண
கதம் நஷ்டம் ச லப்யதே".

Wednesday, 23 November 2016

தன ஆகர்ஷண தேவதைகள்
நம் முன்னோர்கள், மஹரிஷிகள் அருளியுள்ள பல மாந்த்ரீக, தாந்த்ரீக, மாய கலைகளை போல் இவ்வுலகில் பல் வேறு நாடுகளில் பல் வேறு விதமான யந்திர கலைகள், மாய கலைகள் உள்ளன. எப்படி நம் விநாயகரை,ஈசனை, எந்நாட்டினர் வழிபட்டாலும் பலன் உண்டோ, அதே போல் அந்தந்த தேவதைகளை யந்திரங்களை நாம் இங்கு பயன்படுத்தினாலும் பலன் உண்டு. அதிலும் குறிப்பாக ஒரு சில நாட்டினரின் மாய கலைகள் வெகு சீக்கிரம் பலன் தரக்கூடிய ஒன்று. பல காலம் முன்பு பரீட்சார்த்த முயற்சியாக இம்முறைகளை செய்து பார்க்க அற்புத பலன்கள் கிடைத்தது. எனினும், சான்றோர் கூற்று படி, இவற்றை ஆசான்கள் செய்ய கூடாது என்கிற விதியின்படி நிறுத்தப்பட்டது. சில காலங்கள் கழித்து, சமீபத்தில், ஒரு சில நபர்களுக்கு இவற்றை பயிற்சிக்கும் நிலை ஏற்பட்டது. நாமே எதிர் பார்க்கமுடியாத அளவு, அபரிமிதமான பலன் கிடைக்க ஆரம்பித்தது-தகுந்த நபர்களுக்கு. இந்த தேவதைகள் மொத்தம் 72 உள்ளன. லாட்டின் நாட்டில் பழங்குடியினரால் தொடங்கிய இவை இன்றும் பலநாட்டினரால் தொடர்ந்து பயிற்சிகளின் மூலம் இந்த தேவதைகளை அழைத்து பணத்தேவையை பூர்த்தி செய்து கொள்வது நடந்து வரும் ஒன்று.

யக்ஷினிகள் மற்றும் அப்சரஸ்களை போல் இந்த உபாஸனையினால் வேறு தொந்தரவுகள் வருவதில்லை. மேலும், இந்த உபாசனையில் கடுமையான நியம நிஷ்டைகளும் இல்லை, மிக சுலபமான ஒன்று. அடுத்த மாதம் முதல் இதை பயிற்சியாக கொடுக்க எண்ணம்.

Tuesday, 22 November 2016

சொத்து பிரச்சனைகள் முடிவிற்கு வரசொத்து சம்பந்தமான வழக்குகள் மற்றும் வாரிசு போன்ற இதர பிரச்சனைகளை சந்தித்து வருவோர், தொடர்ந்து 9 செவ்வாய்கிழமைகள் ஆஞ்சநேயர் சந்நதி கர்ப கிரக விளக்கிற்கு ஒவ்வொரு முறையும் நெய் ,அவருக்கு சாற்ற
சிகப்பு வஸ்திரம் மற்றும் நிவேதனத்திற்கு செவ்வாழை பழம் கொடுத்து வழிபட்டு வர, மேற்கண்ட விஷயங்கள் சுபமாய் தீரும்.

குறிப்பு : பரிகாரம் சம்பந்தமாக சில விஷயங்கள் கோவிலில் செய்யும் சமயம், கோவிலில் குறைந்தது ஒன்றரை மணி நேரம் இருந்து வழிபட்டால், பரிகாரம் எளிதில் பலன் தரும். பரிகாரங்கள் செய்யும் சமயம் அசைவ உணவு தவிர்க்கவும்.
உதாரணம் : மேற்கண்ட விஷயத்திற்கு செவ்வாய்கிழமைகள் மட்டுமல்லாது 9 முழு வாரங்களும்  அசைவம் தவிர்க்க வேண்டும். 

Monday, 21 November 2016

நாளை 22.11.16 செய்ய வேண்டிய அற்புத பரிகாரம்

 கணவன் மனைவி பிரச்னை தீர

தொடர்ந்து கணவனால் மனைவிக்கோ, மனைவியால் கணவருக்கோ தொல்லைகள் ஏற்படின், மனஸ்தாபங்கள் அதிகரித்து வரின், மேலும் திருமண வாழ்வில் எவ்வித சுகமும் இல்லாமல் இருப்பின், நாளை மதியம் 1:15-2 மணியளவிலோ அல்லது இரவு 8:15-9 மணியளவிலோ 9 வயதுக்கு உட்பட்ட 9  குழந்தைகளுக்கு எலுமிச்சை சாதம் தனமாக தரவும். 9 வெவ்வேறு தினங்கள் தர வேண்டும். அடுத்து வரும் தினங்கள் "கணவன் மனைவி பிரச்னை தீர" என்ற பெயரில் தனி பதிவாக வெளிவரும். கணவன் மனைவி பிரச்சனைகள் தீர முக்கிய திதியும் நாளும் இணைந்த நாள் இன்று-தவற விடாதீர்கள். 

Sunday, 20 November 2016

அதீத விரயங்கள் நிற்க அமானுஷ்ய பரிகாரம்கொடுக்கப்படும் விஷயமானது மிக வீரியமான ஒன்றாகும். ஒரு முறை நேரடி ஆலோசனைக்கு வந்த ஒரு தொழிலதிபரின் விஷயங்களை சோதிக்க, அவருக்கு தெரியாமல் நிறைய பணம் அவரின் கட்டுப்பாடின்றி விரயமாகி  கொண்டிருந்தது தெரிய வந்தது
.மிகுந்த லாபம் இருப்பினும்  கடன் வாங்கும் சூழலில் மாட்டி கொண்டார்.நாம்  சொன்ன  விஷயத்தை அவர் செய்து முடித்த ஒரு சில நாட்களுக்குள், தொழிற்சாலையில் பல நபர்கள் இட மாற்றம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டு, மிக குறுகிய நாட்களில் அதீத செலவுகள் மற்றும் விரயங்கள்  நின்று, தொழில் வளர ஆரம்பித்தது. பண விஷயங்களை பொறுத்த வரை இது போன்று ஏராளம் உள்ளன. நபருக்கு நபர் மாறுபடும். எனினும்,  பிரத்யேகமான இது, அனைவருக்கும் பயன்படும் ஒன்றாகும்.வீட்டில் அதீத விரயங்கள் ஏற்படினும் செய்து பலனடையலாம்.

பிரிட்ஜில் இருக்கும் ஐஸ் ட்ரேயை நன்றாக சுத்தம் செய்து, ஒவ்வொரு கப்பிலும்  ஒரு ருபாய் நாணயம் ஒன்றை இட்டு,பின் ஒவ்வொன்றிலும் ஒரு புதினா இலையை வைக்கவும். பின் அனைத்திலும் நீர் ஊற்றி,மனதில் அதீத செலவுகள்/விரயங்கள் கட்டுப்படவேண்டும் என்று பஞ்ச பூதங்களையும்,இஷ்ட தெய்வத்தையும் வேண்டி, பிரீசரில் வைத்து விடவும். .

வீண் விரயங்கள் கட்டுக்குள் வருவதை கண் கூடாக காணலாம். செலவுகள் கட்டுக்கடங்கிய நிலை வந்ததும் நாணயங்களை வெளியே எடுத்து உபயோகிக்கலாம். நீரை மற்றும் புதினா இலையை எங்கு வேண்டுமானாலும்  அப்புறப்படுத்திவிடலாம்.

முக்கிய குறிப்பு : மேற்கண்ட விஷயம் நாட்களுக்கு  மேல் செய்யக்கூடாது. அடிக்கடி செய்வதும் தவிர்க்கப்படவேண்டும். 

அற்புத பலனளிக்கும் 64 யோகினிகள்

அசுரனுடன் தாய் காளி போரிடும் சமயம், காளியின் வியர்வை துளிகளில் இருந்து பிறந்தவர்கள் தான் 'யோகினிகள்'. இவர்கள் ஆயிரமாயிரம் இருப்பினும், முதன்மையாக கருதப்படுவோர் 64  ஆவர். காளியின் குழந்தைகளாக கருதப்படும் இவர்களை, நம் ஆத்மார்த்த அன்புடன் பூஜித்து வர நம் அனைத்து துன்பங்களையும் நீக்கி சுக வாழ்வு வாழ வைப்பர். யக்ஷினி, கின்னரர்கள், யக்ஷர்கள், கந்தர்வ மற்றும் அப்சரஸ்களை போல் அல்லாமல் நமக்கு நற்பலன்களை மட்டுமே அள்ளித்தருவது இவர்களின் சிறப்பு. எளிதாக அனைவருக்கும் புரியவேண்டிய நோக்கத்துடன் இவ்வாறு கொடுத்துள்ளேன். உண்மையில், பல அற்புத ஆத்ம ஞான யோக விஷயங்கள் உள்ளன-யோகினி உபாசனையில். திருமூலர்  திருமந்திரத்தில் இவர்களை பற்றி கூறியுள்ளார்.

அஷ்ட யோகினிகள் :

சுர சுந்தரி யோகினி : மூப்பை தடுக்கும், நமக்கு புற அழகை கொடுக்கும் இவள் சிறந்த மனத்தெளிவையும் கொடுக்க வல்லாள்.

மனோஹர யோகினி : காளியின் ரூபமாகவே கருதப்படும் இவளை வழிபட நல் உறவுகள் பலப்படும்.

கனகாவதி  யோகினி : வியாபாரம் மற்றும் தொழில் செய்வோர் அவசியம் உபாஸிக்க வேண்டிய தேவி இவள். தொழிலின் மூலம் நல்ல லாபங்களை கொடுக்கும் யோகினி.

காமேஸ்வரி யோகினி : விரும்பிய துணை, நிலையான திருமண பந்தம், நல்ல தாம்பத்யம் பெற இந்த யோகினியின் அருள் அவசியம்.

ரதி சுந்தரி யோகினி :  செல்வம், வீடு பேறு போன்றவற்றை அருளும் யோகினி இவர்.

பத்மினி யோகினி : அனைத்து காரியங்களிலும் வெற்றியை தருபவர்.

நதினி யோகினி : அதீத சக்தி கொண்டவள் - அதே சக்திகளை தம்மை உபாசிப்போருக்கும் அருள்பவள்.

மதுமதி யோகினி : அனைத்து பிரச்சனைகளிலும் இருந்து விடுதலையளிப்பவள்.

Saturday, 19 November 2016

ப்ரஹ்மராக்க்ஷஷரின் அருமைகள் தெரியுமா உங்களுக்கு ??ராட்சசன் என அழைக்கப்படும் துர் பிசாசு அல்ல இவர். பிராமண குளத்தில் பிறந்து வேதங்கள் கற்றுணர்ந்து வறுமையாலும், சில சாபக்கேடுகளாலும் தற்கொலை செய்து கொண்டு இன்று ஸ்தூல ஆத்மாவாக உலவுபவர்/ உதவுபவர் தான் மேற்கண்ட ப்ரஹ்மராக்க்ஷஷர். இன்றும் கேரளாவின் சாக்த வழிபாட்டு ஸ்தலங்களில், வெளிப்பிரகாரங்களில் இவர் சன்னதிகள் இருக்கும். தேவிக்கு படைத்த நிவேதனத்தை இவருக்கும் படைப்பர். நேந்திரம் பழத்தின் பிரியர் இவர். வேறு சில கிரந்தங்களில் இருந்து நாம் புரிந்து கொண்டது என்னவெனில், மெத்த படித்து, அதனால் கர்வம் கொண்டு எவரையும் மதியாது இழிவு செய்து, வெறி செயல்களில் ஈடுபடும் குணமே "ப்ரஹ்மராக்க்ஷஷம்" . மிகுந்த தடைகள், மற்றும் கடவுள் நமக்கு அருள்வதில்லை என்ற நினைப்பு கொண்டோர், கேரளாவில் உள்ள ஏதேனும் பகவதி கோவில் சென்று, ப்ரஹ்மராக்க்ஷஷருக்கு விசேஷ பூஜைகள் செய்து, பின் பகவதியை வழிபட்டு திரும்ப, நம் தடைகள் விலகும். மேலும் ரியல் எஸ்டேட் துறையில் கட்டுமான பணிகளில் உள்ளோர், கட்டுமான பணிகள் மத்தியில் எந்த காரணத்தினாலாவது நின்று போயிருப்பின் அல்லது விற்பனை ஆகாது  இருப்பின், இவருக்கு உரிய மரியாதைகள் செய்ய, சொத்துக்கள் விரைந்து கட்டி முடிக்கப்பட்டு விற்பனையாகும். மேலும், நம் சொந்தங்களில் யாரேனும் துர்மரணம் அடைந்திருப்பின் ப்ரஹ்மராக்க்ஷஷருக்கு உரிய மரியாதையை மற்றும் பூஜைகள் செய்வித்து அந்த ஆத்மாவை நல்ல படியாக மேலுலகம் சென்றடையச்செய்யலாம்.

குறிப்பு : தமிழ்நாட்டிலும் சில பகவதி கோவில்களில், ஐயப்பன் கோவில்களில் இவர் சன்னதி இருப்பதாக கேள்வி. கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் இவரை வழிபடுதல் கூடாது. 

Friday, 18 November 2016

நினைத்த நேரத்தில் நினைத்த தனத்தை அருளும் தங்க யக்ஷினி

யக்ஷினி உபாசனைகளிலேயே  நாம் கண்ட வரை மிக எளிதானதும் மிக அதீத சக்தி கொண்டதும், உடனடி பலன் அளிப்பதும், உபாசிப்பவரை எவ்வித தொல்லைகளுக்கும் ஆளாக்காததும், தேவைப்படும் நேரத்தில் தேவைப்படும் பணவரவை ஏற்படுத்தும்  இந்த யக்ஷினி உபாசனை. பூஜிக்கும் முறைகள் நேரடி பயிற்சியில் வழங்கப்படும்


தமிழ்நாட்டில் சென்னையை தவிர அனைத்து மாநிலங்களிலும் ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Thursday, 17 November 2016

அற்புத பலனளிக்கும் அப்சரஸ்கள்

புராணங்களில் அப்சரஸ்களை பற்றி கேள்விப்பட்டிருப்போம் . மகரிஷிகளின் தவம் மற்றும் தவறான நோக்கத்திற்காக தவமிருக்கும் சில ரிஷிகளின்,அசுரகுல அரசர்களின்  தவம் போன்றவற்றை, அவர்களை தம் பால் ஈர்த்து தவத்தை கலைப்பதே இவர்களின் நோக்கம் என்றெல்லாம் சில பழைய திரைப்படங்களில் கூட பார்க்க நேரிட்டிருக்கலாம். ரம்பை விஷ்வாமித்திரரை மயக்கி தவத்தை கலைத்தது அனைவருக்கும் நினைவிருக்கலாம்.  இவைகளை தவிர, இவர்களுக்கு உண்டான சக்திகளையும் இவர்களை முறையாக பூஜித்தால் அதனால் ஏற்படும் சக்திகளும் ஏராளம். நம் பல சந்ததிகளுக்கு செல்வத்தை தொடரச்செய்யும் சக்தியும், நம்மை மிக வசீகரமான தோற்றமளிக்க செய்யும்  சக்தியும், பல இன்னல்களில் இருந்து நம்மை காக்கும் சக்தியும் இவர்களுக்கு உண்டு. இவர்களும் ஸ்தூல சூட்சும ரூபத்தில் உளவுபவர்களே. ரிக் வேதத்திலும், மஹாபாரத்திலும் இவர்களை பற்றி ஏராளமான குறிப்புகள் உண்டு. இந்திரனுக்கு சேவை செய்வதை தோற்றத்தின் நோக்கமாக செய்து வரும் இவர்களை, ஒரு நாள் மற்றும் ஏழு நாள் மற்றும் 21  நாட்களில் சித்தி செய்யும் முறைகள் உள்ளன. வெள்ளிக்கிழமை இரவில் தொடங்கலாம் இவர்களின் உபாஸனையை. சில காலம் முன்பு முயற்சித்ததில் முதல் முறை தோல்வியை தந்து இரண்டாவது முறையாக 21 நாட்களில் எமக்கு வெற்றி கிடைத்தது. ஏற்கனவே கூறியுள்ளபடி இதற்கான பயிற்சியை அளிக்கும் வாய்ப்பு ஏற்பட்டால், இதன் சாதனா முறையை விளக்குகிறேன். இணையத்தில் இது போன்றவைகளை வழங்க இயலாது. இவையெல்லாம் சாத்தியமா என ஒரு சிலர் நினைக்கக்கூடும். எப்படி காவல் தேவதைகளை, ஆஞ்சநேயர், கணபதி மற்றும் வேறு சில தேவிகளை உபாசித்து பலன் பெறுகிறோமோ அதே போன்ற முறை தான் இவர்களுக்கும்.

முக்கியமாக இருக்கும் அப்சரஸ்களான ரம்பை,  மேனகை, ஊர்வசி,திலோத்தமை, க்ரிடாக்க்ஷி, தவிர 108  முதல் 1008  எட்டு வரை இவர்கள் உண்டு என வேதங்களும் இதிகாசங்களும் கூறியுள்ளன,

அலம்வஷு, அம்பிகா, அருணா, அர்ஷா, இந்திரலக்ஷ்மி,பூர்வசித்தி, காம்யா, லதா, லக்ஷ்மணா, கார்னிகா, கேஷினி, ரக்ஷிதா போன்றோர் சிலர்.

நம் புராணங்களில் உள்ள இவர்களை போல் இகிப்திய, முகமதிய மற்றும் கிருஸ்துவ, பௌதிக புராணங்களிலும் பல் வேறு அப்சரஸ்கள் உண்டு.

பக்தியுடன்  அழைக்கும் நேரத்தில் வந்து நம் அவசிய தேவைகளை பூர்த்தி செய்து அருளும் அசாத்திய சக்தி இந்த அப்ஸரஸ்களுக்கு உண்டு. 

Wednesday, 16 November 2016

சர்வ வசீகர ஆகர்ஷண சக்திகளை கொடுக்கும் 'கந்தர்வர்கள்'

நம் புராணங்களில் பல முறை கேள்விப்பட்டிருப்போம்-கந்தர்வர்களை பற்றி. தற்காலத்தில் நடக்கும் பெற்றோர் மற்றும் உறவினரின் சம்மதமில்லாத காதல் திருமணங்களை வித்திட்டவர்கள் இவர்கள் எனலாம். அப்சரஸ்களின் கணவர்களான இவர்கள் ஜன, தன மற்றும் ராஜ வசீகர ஆகர்ஷண சக்தியை அளிக்கவல்லவர்கள் இவர்கள். யட்சிணிகளை போல் இவர்களிடத்தும் நாம் ஏதேனும் கேட்க, பதிலுக்கு நம்மிடமிருந்து இவர்களுக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் இவர்களை முறையாக வழிபட்டு வந்தால், தாமே அறிந்து நம் துன்பங்களை போக்க வல்லவர்கள் இவர்கள். மேலும் தாய் சாரதா தேவியை பூஜித்து வர, கந்தர்வர்களை எளிதில் வசமாக்கலாம். இவர்களுக்கு மனிதர்களுக்கு மேலும் தெய்வங்களுக்கு உட்பட்டும் சக்திகள் இருப்பதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. மஹாபாரதத்தில் இவர்களை பற்றிய சுவையான விஷயங்கள் உள்ளன. இவர்களும் யக்க்ஷ யக்ஷினிகளை போன்று குபேரரின் கட்டுப்பாட்டில் உள்ளோர் தாம். சில காரணங்களை கருதி இவர்களின் அதியற்புத சக்திகளை பற்றி இங்கே அளவோடு தான் கொடுத்துள்ளோம். பூஜை முறைகளை இவ்விடம் விளக்க முடியாது.

கந்தர்வர்கள் :

விஸ்வவசு- ராமாயண காலத்திற்கு முன்பே  தோன்றிய இவர் தான் ரிக் வேதத்தை உருவாக்கியவர்.

சித்ரரதா - கந்தர்வர்களை ஆட்சி செய்யும் பொறுப்பு இவருடையது.

சித்ராங்கதா - கந்தர்வர்களுக்கெல்லாம் அரசனாக விளங்குபவர்.

திம்பரு - அர்ஜுனருக்கே கலைகளை கற்பித்தவர்.

மேலும் ஷைலஸு , திருதராஷ்டிரா,பஞ்சசிகா , மதாளி போன்ற வேறு சில கந்தர்வர்களும் உண்டு. ஸ்தூல ரூபத்தில் இருக்கும் இவர்களின் அருளோடு இன்றும் பலர் வெற்றிகரமாக உள்ளனர்.

பலரின் தொடர் விண்ணப்பத்தால் யக்ஷிணி, கந்தர்வர்கள் மற்றும் அப்சரஸ்களின் பூஜா விதிகளை ஒரு தனி பயிற்சியாக, விரைவில் கொடுக்க எண்ணம்.

Tuesday, 15 November 2016

அம்மை மற்றும் காற்றில் பரவும் நோய்களை தந்தருளும் "சீதளா தேவி "


மக்களின் அகங்காரம் மற்றும் ஆணவம் போன்றவற்றை அழிக்க, ஒருவரின் கர்ம பலனை உணரவைக்க கழுதையில் அமர்ந்து மேற்கண்ட நோய்களை உண்டாக்கி
பின் சரிசெய்வதை தன் தோற்றத்தின் தொழிலாக செய்து வருபவள் இந்த தேவி. நான்கு கரத்துடன் கையில் துடைப்பத்துடன் இருக்கும் இந்த தேவியை மேற்கண்ட நோய்களை அகற்ற, மனமார வழிபட, தன் கையில் உள்ள துடைப்பம் எப்படி குப்பைகளை அகற்றுமோ, அது போல் நோய்களை அகற்றி நம்மை வாழவைப்பாள் இந்த அன்னை.Monday, 14 November 2016

"அலக்ஷ்மி" வசிக்கிறாரா உங்களிடத்தில் ??குறிப்பு : இங்கே குறிப்பிட்டுள்ளது மஹாலக்ஷ்மி தாயாரின் சகோதரி பற்றியது அல்ல. பல காலமாக அப்படி ஒரு தவறான புரிதல் ஏற்பட்டுள்ளது. இதை பற்றிய விரிவான பதிவு விரைவில் வெளிவரும்.

ஆலோசனைக்கு வந்து பரிகாரங்கள் கேட்டு சென்ற ஒரு நபர் ஒரே மாதத்திலேயே மூன்று முறை வந்து விட்டார். தான் மிகுந்த துரதிர்ஷ்டசாலி, எதுவும் நல்லது நடப்பதில்லை என ஒரே குமுறல் !! அவரிடம் நாம் கேட்ட கேள்வியை தான் இந்த பதிவின் தலைப்பாகவும் , அவருக்கு நான் கூறிய விஷயங்களை பதிவாகவும் கொடுத்துள்ளேன்.

மேற்கண்ட மூதேவி எனப்படும் "அலக்ஷ்மி" பருத்த உதடுகளை கொண்டவள். அரச மரத்தில் உச்சி சாய்ந்தபின் மறு நாள் சூரிய உதயம் வரை வசிப்பவள். சனிக்கிழமை மட்டும் அவ்விடத்தில் குடியிருக்கமாட்டாள். காரணம் அன்றைய நாள் முழுதும் மஹாலக்ஷ்மி தயார் அவ்விடத்தில் வசிப்பது தான். அதனால் தான் அரச மரத்திற்கு சனியன்று விளக்கேற்றி வழிபட தொடர்ந்து கூறிவருகிறோம். மேலும் மற்ற நாட்களில் அரச மர வழிபாடு செய்யும் சமயம், மரத்தை தொடாமல் வழிபட வேண்டும். நம் மனதில் உள்ள பொறாமை, அகங்காரம், பேராசை இந்த மூன்றின் சூட்சும ரூபம் தான் 'மூதேவி' அல்லது 'அலக்ஷ்மி' . இவற்றை விட்டொழிப்பது மிக முக்கியம்,  மேலும் வீடு மற்றும் தொழில் செய்யும் இடங்கள் எந்நேரமும் சுத்தமாக வைத்திருப்பதும்
மிக முக்கியம். இல்லையேல், அலக்ஷ்மி மட்டும் அல்ல, சனியும் கூடவே வந்து வசிக்க தொடங்கி விடுவார்.  இப்படி தாம் தொடர்ந்து துரதிர்ஷ்டசாலியாக இருப்பதாக ஒருவர் எண்ணினால், தம்மிடம் மேற்கண்ட மூன்று குணங்கள் உள்ளனவா என்று ஆத்ம பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.அப்படி செய்கையில் நமக்கு நாம் உண்மையாக இருப்பின், மேற்கண்ட நிலையில் இருந்து விரைவாக வெளிவரலாம். பின்பு,  நாம் ஏற்கனவே கூறியுள்ள 'ராக் சால்ட்' குளியல் உடனடியாக தொடங்குவது நன்று. மேலும், தங்கள் வீடு மற்றும் தொழில் செய்யும் இடத்தை, மேற்கண்ட உப்பை கொண்டு கழுவி விடுதல், மாதம் ஒரு முறையாவது செய்ய வேண்டும். பின் தினசரி தூபமிடுதல், விளக்கேற்றி வைத்தல், பஞ்சகவ்யம் கொண்டு அஷ்ட திக்குகளிலும் தெளித்தல் போன்றவை தினசரி செய்து வருதலும் அவசியம். மிக முக்கியமாக மேற்கண்ட நிலையில் உள்ளோர், சரஸ்வதி வழிபாடு தொடர்ந்து செய்து வர 'அலக்ஷ்மி' விரட்டப்பட்டு 'லக்ஷ்மி' குடியேறுவார் உங்களிடமும் உங்கள் இல்லத்திலும். 

உலகில் உள்ள நாய்களின் தாய் "தேவ ஷுனி"
மஹாபாரத காலத்தில் பாண்டவர்களுக்கு மிகவும் உதவியாக இருந்த இந்த தேவி சூட்சும சொரூபத்தில் உலவுபவள். எமனுக்கு பாத்திரமான இந்த தேவியை வழிபட்டால், மரண பயம் நீங்கும். அகால மரணம் தவிர்க்கலாம். நாய்களுக்கு,பசுக்களுக்கு  உடற் துன்பம் ஏற்படின், இந்த தேவியை வழிபட, அவைகளுக்கு உடல் நலம் மேம்படும். பைரவருக்கு எப்படி நாய்கள் வாகனமோ, அது போல் எமனுக்கு பிடித்தமான இரண்டு நாய்களை வாகனமாக கொண்டுள்ளாள் இந்த தேவி. நேபாளத்தில், வருடம் ஒரு முறை இந்த தேவியை வேண்டி, நாய்களுக்கு பூஜை புனஸ்காரங்கள் செய்து வழிபடும் வழக்கம் இன்றளவும் உண்டு.  

Sunday, 13 November 2016

முக்காலத்தையும் காதில் கூறும் "கர்ணபிசாஷினி"முக்கிய குறிப்பு : இங்கே கொடுக்கப்பட்டுள்ளவை உங்கள் புரிதலுக்காக மட்டுமே. இந்த யக்ஷினி சித்தி நாம் கொடுப்பதில்லை. சிலர், இந்த யக்ஷினி தீக்ஷை தருவதாக கேள்விப்பட்டுளோம். அவற்றை நாடாமல் இருப்பது உங்களுக்கு நன்று.

"கர்ணபிசாஷினி" , பெயரை கேட்டவுடன், இந்த யக்ஷிணியின் தன்மை பற்றி உங்களுக்கு புரிந்திருக்கும். நம் எவ்வித தொல்லைகளையும் கஷ்டங்களையும் நொடிப்பொழுதில் தகர்க்கும் சக்தி இந்த யக்ஷிணிக்கு உண்டு. பணம், புகழ் அனைத்தையும் அள்ளித்தரும் இந்த யக்ஷிணிக்கு நம் எதிரிகளை துவம்சம் செய்யும் சக்தியும் அதிகம். தந்த்ர சாஸ்திரத்தில், எவரை பற்றிய கடந்த காலம், நிகழ் காலம், மற்றும் எதிர் காலத்தையும் இந்த யக்ஷினி, உபாசனை செய்வோரின் காதில் கூறும் என கூறப்பட்டுள்ளது. இந்த யக்ஷினி உபாசனை மிக மிக கடினமான ஒன்றாகும். மிக கொடூரமாய்  காட்சியளிக்கும் இந்த சாக்த யக்ஷினி, தம்மை உபாசிக்கும் நபரிடம் தாம்பத்தியத்தில் ஈடுபட வற்புறுத்தும், ஆகவே இதை பல அகோரிகளும், காட்டில் வசிக்கும் தாந்த்ரீகர்கள் மட்டுமே உபாசிப்பர். வளர்பிறை பஞ்சமியில் இதன் உபாசனை இரவு நேரம் ஆரம்பிப்பர். இதில் சித்தியாகும் வரை குளியல், சவரம், மற்றும் தன் உடம்பில் இருந்து வெளிவரும் கழிவுகளை கழுவுதல் போன்றவை கூடாது. இந்த உபாசனையில் ஒரு வரி மந்திரம், நான்கு வரி மந்திரங்கள், இரண்டு வரி மந்திரங்கள் போன்றவை எமக்கு முன்னொரு சமயம் ஒரு சாக்த குருவின் மூலம் உபதேசிக்கப்பட்டது. (நாம் இந்த உபாசனை செய்ததில்லை ) . அவர் மூலமாக பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை அறிய முடிந்தது. இதில் முக்கிய விஷயம் என்னவென்றால்,
 நம்மோடு இருப்பதா, வேண்டாமா என இந்த யக்ஷினி தான் முடிவு செய்யும். பாதியில் விட்டு விலகிவிட முடியாது. அப்படி உபாசனை செய்து யாரேனும் பிரச்சனையில் இருப்பின், அதிகாலை சூரிய உதயத்தில் தொடர்ச்சியாக ஆதித்ய ஹ்ருதயம் கூறி வர, நிவாரணம் கிடைக்க வாய்ப்பு உண்டு.  

Saturday, 12 November 2016

ராகு கேது தசா புத்திகளில் நன்மை பெற விஷாஹரி வழிபாடுமேற்கண்ட தசா புத்திகள் பலரை மிகுந்த தொல்லைகளுக்கு ஆளாக்கும். மானசா என பக்தர்களால் அன்புடன் அழைக்கப்படுபவளும், ஈசனின் புத்ரியுமான விஷாஹரி தேவியை மனமுருக பிரார்த்தித்து தாமரை மலர்களால் அலங்கரித்து வர, மேற்கண்ட காலத்தில் நன்மைகள் வந்து சேரும்.சர்ப்ப பயம் நீங்கும். மழை காலங்களில் வழிபட்டு வர மனமுருகி வரம் அருளும் தேவி இவள்.

தேவியின் படத்தை வைத்து தாமரை மலர் சூட்டி உளர் திராட்சை நிவேதனம் செய்து பூஜிக்கவும். 

Friday, 11 November 2016

சர்ப்ப தோஷம், திருமணத்தடை நீங்கமிக அதீத சக்தி வாய்ந்த, கீழ்கண்ட நவ நாக
மந்திரத்தை தினசரி குளித்ததும் 9 கூறி மனதார நாகங்களை வழிபட்டு வர சர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம், திருமண தடை, மண வாழ்வில் சோதனைகள் போன்றவை விலகி வாழ்வில் நன்மைகள் வந்து சேரும்.

குறிப்பு : பாம்புகளை அடிப்பது, தோல் பொருட்கள் உபயோகம் செய்வது போன்றவற்றையும் அடியோடு நிறுத்தினால் மட்டுமே மந்திரத்தால் பலன் சேரும் என்பதை நினைவில் கொள்க.

அனந்தம் வாஸுகிம் சேஷம்
பத்மநாபம் ஸ கம்பளம்
ஷங்கப்பலம்  தர்டராஷ்ட்ரம்
தக்ஸகம் கலியம் தத :

முக்காலமும் அறிய "பஞ்சாங்குலி தேவி" யை முறையாக பூஜித்து வர கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர்காலத்தை துல்லியமாக அறிந்து கூறமுடியும். ஜோதிடர்கள் மற்றும் கைரேகை நிபுணர்கள், முக்காலமும் அறிய விரும்புவோர் இவரின் பூஜை முறையை முறையாக கற்று கொண்டு வழிபட்டு வர, அனைத்தையும் முன் கூட்டியே அறிந்து கொள்ளக்கூடிய திறன் வந்து சேரும். துவிதியை, சதுர்த்தி மற்றும் பஞ்சமி திதிகள் தேவிக்கு உகந்தவை. 

சத்ரு உபாதைகள், பித்ரு தோஷங்கள் நீங்க


கலியுகத்தில் உடனடி நிவாரணம் தருபவள் 'ரக்த சாமுண்டி'. இந்த தேவியின் படத்தை வைத்து மண் அகலில் சிகப்பு திரி கொண்டு இலுப்பெண்ணை தீபமேற்றி 9 செவ்வாய்கிழமைகள்  மந்திரத்தை 108
முறை கூறி வழிபட்டு வர மேற்கண்ட தொல்லைகள் நீங்கும். அமாவாசை மற்றும் அஷ்டமி தோறும் தேவியை மேற்கண்ட முறையில்  வழிபாடு செய்து வர சுப காரிய தடைகள் நீங்கும்.

மந்திரம் : ஓம் ஹ்ரீம் ரக்தசாமுண்டாயை நமஹ் :


Tuesday, 8 November 2016

உங்கள் அனைவருக்கும் "தன ஆகர்ஷண புதையல்"

முக்கிய குறிப்பு : பதிவை முழுவதும் படிக்கவும்

 'சிகப்பு சந்தனம்' சாக்த தாந்த்ரீக வழிபாட்டில் மிக முக்கியமான ஒன்றாகும்- பல வித வாழ்வியல் தொல்லைகளை நீக்கும் சக்தி கொண்டது.
கருப்பு சிகப்பு குன்றிமணி : காளிக்கும் பைரவருக்கும் உகந்த இவை மிக அதீத சக்தி கொண்டவை.

வெள்ளை குன்றிமணி : தன ஆகர்ஷணம் செய்யும் சக்தி கொண்டது.

கோமதி சக்கரம் : மஹாலக்ஷ்மி ஸ்வரூபம்.

மந்திர சக்தி ஏற்றப்பட்ட சிகப்பு சந்தனத்துடன், மேற்கண்ட மூன்றும் சேர்த்து நம் பணப்பெட்டியில் அல்லது நம்மூடே வைத்திருக்க, பணம் சார்ந்த பிரச்சனைகள் தீர்ந்து, தன ஆகர்ஷணம் உருவாகும். இவை, பெரும்பாலான வட மாநிலத்திலுள்ள தாந்த்ரீக சாஸ்திர பிரயோகம் செய்பவர்கள், தம் அடியார்களுக்கு கொடுத்து வருவதாகும்.

நம் சென்டரின் மூலம், மேற்கண்ட இவைகளை எந்தவித கட்டணமும் இன்றி வரும் வியாழன் 10.11.16  முதல், 25.12.16 வரை வழங்க உள்ளோம். வழக்கம் போல் வெளி ஊர்களில் உள்ளோர், தகுந்த சுய விலாசமிட்ட தபால் தலையை ஒட்டிய கவருடன் அனுப்பி பெற்று கொள்ளலாம். மேற்கண்ட தேதிக்கு பின் கவர்கள் அனுப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். மேலும், இது சம்பந்தமாக தொலை பேசியில் எவரும் அழைக்க வேண்டாம். ஒரு குடும்பத்திற்கு ஒன்று என்ற வகையில் கவர்களை அனுப்பி வைத்தால், அனைவரும் பயன்பட ஏதுவாகும்.  இது எந்த காலத்திலும் எம்மிடம் விற்பனைக்கு கிடையாது.

காலை 10 முதல் மாலை 6 வரை மட்டுமே நேரில் வந்து பெற்று கொள்ளலாம். விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிறு தவிர்க்கவும்.

நாம் ஏற்கனவே கட்டணமின்றி  கொடுத்து வந்த  'சூரிய எந்திரம்' , தன ஆகர்ஷண விபூதி, சந்தனம் மற்றும் சர்வைஸ்வர்ய குங்குமம் மற்றும் மஞ்சள் போன்ற எவையும் தற்சமயம் இருப்பில் இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

முகவரி :

Rudra Parihaar Raksha Centre, 69, AF Plaza,1st Flr, Arya Gowda Road,West Mamblam, Chennai 600033.

ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
69, AF பிலாசா, முதல் மாடி,
ஆரிய கவுடா ரோடு, மேற்கு மாம்பலம், ஸ்ரீ கிருஷ்ண சுவீட்ஸ் எதிரில், சென்னை 33.

Monday, 7 November 2016

யக்ஷினிகளின் மகா சக்திகள்- அமானுஷ்ய வழிபாட்டு முறை பாகம் 2

சென்ற பதிவில் யக்ஷினிகளை பற்றி அறிந்து கொண்டிருப்பீர்கள். இனி  அவர்களில் ஒவ்வொருவரும் (ஒவ்வொரு வகையும்) என்னென்ன தன்மையை கொண்டவைகள் என்பதை பாப்போம். இதில் சிலவற்றை சூட்சுமமாய் சொல்லியுள்ளேன். காரணம், சிலவற்றை வெளிப்படையாக கூற, தகாத விடயத்திற்கு தவறான நபர்களால் உபயோகப்படுத்தப்படின், கேடு விளையும். தனி நபர் ஆலோசனைக்கு வருவோருக்கு கூட, அவர்களின் உண்மையான நோக்கம் கண்டு மட்டுமே, முழு வழிபாட்டு முறையும் விளக்கப்படுவதுண்டு. மேலும், இதில் பல வழிபாட்டு முறைகள், மிக கடுமை நிறைந்த ஒன்றாகும். பலனும் மிகப்பெரிதல்லவா ??

விசித்ரா : அன்பானவள் - அன்பை நம் சொந்தங்களிடம் / பிறரிடம் பெற இந்த யக்ஷிணியை உபாஸிக்க, காரியம் சித்திக்கும்.

விப்ரமா : மோகம்கொண்டவள்- காதலில் வெற்றி பெற மேலும் கணவன் மனைவி ஒருவொருவர் பரஸ்பரம் மோகிக்க செய்ய, தாம்பத்திய தேவைகளுக்கு பூஜிக்கப்படுபவள்.

ஹம்ஸி : அண்ணப்பறவையை போல தோற்றம் கொண்டவள் - வேலை இடத்தில் இடையூறு, கோர்ட்டில் வழக்குகள் வெற்றி பெற, எதிரிகள் தொல்லையில் இருந்து விடுபட வழிபாடு செய்யப்படுபவள்.

பிஷாஷினி : திகிலூட்டும்  தோற்றம் கொண்டவள் - பெயர் ஒன்றே போதுமே இவளை வர்ணிக்க..

ஜனரஞ்சிகா : ஆண்களுக்கு மகிழ்ச்சியை ஆனந்தத்தை தருபவள்

விஷாலா : கருத்த பெரும் விழிகள் கொண்டவள் - பெரும் தனத்தை தர வல்லவள் - எனினும் மிகுந்த கோபம் கொண்டவள்.

மதனா : காமம் கொண்டவள் - மாயமாய் மறையச்செய்யும் சக்தி கொண்ட யக்ஷினி இவள்.

கண்ட்டா : மணியானவள் - தம்மை வழிபடுவோரை உலகமே மோகிக்க செய்யும் தன்மை கொண்ட யக்ஷினி.

கலகர்ணி : கலச குண்டலங்களை அணிந்தவள் - அனைத்து வெற்றியையும் அள்ளித்தருபவள்.

மஹாபயா ; மிகவும் பயமுறுத்தும் தோற்றம் கொண்டவள்

மஹேந்திரி : மிகவும் சக்திகொண்டவள் - தம்மை பூஜிப்போரை காற்றில் பறக்கவைக்கும் சக்தி இவளுக்கு உண்டு.

ஷங்கினி : சங்கின் தோற்றமுடையவள் - அனைத்து தேவைகளையும்  பூர்த்தி செய்பவள்.

சந்திரி : நிலவின் தோற்றமுடையவள் -  கேட்டதை கொடுப்பவள்.

ஷ்மஷனா : மயானத்தில் வசிப்பவள்.

வடயக்ஷினி : பொன்  பொருள் ஆபரணங்களை அருள்பவள். மாய மந்திர வித்தைகளில்  தேர்ச்சி தருபவள்.

மேகலா : காதலை அள்ளித்தருபவள்

விகளா : உணவு, தானியங்களை தருபவள்.

லக்ஷ்மி : பொன்,பொருள், ஆடை ஆபரணங்கள் அனைத்தும் தருபவள்.

மாலினி : பூவை போன்றவள் - எவ்வித எதிர்ப்பையும் இவள் ஆசி இருந்தால் அடித்து நொறுக்கலாம்.

ஷடபத்ரிகா : நூறு பூக்களின் தோற்றமுடையவள்

ஷுலோச்சனா : அழகிய கண்களை கொண்டவள் - எவ்வித இடத்திற்கும் நொடிப்பொழுதில் நம்மை சேரவைக்கும் சக்தி கொண்ட யக்ஷினி.

ஷோபா : அழகிய தோற்றம் மற்றும் வேண்டியதை தரும் யக்ஷினி தேவி.

கபாலினி : மண்டை ஓட்டை மாலையாய் கொண்டவள் - கபால  மோட்சம் கொடுக்க வல்லவள்.

வரயக்ஷினி : கேட்கும் வரத்தை அளிப்பவள்.

நடி : நடிகையானவள் - மறைந்திருக்கும் புதையலை இவள் ஆசி கொண்டு எடுப்பது வழக்கம்.

காமேஸ்வரி : காமத்தை கொடுப்பவள்.

மனோஹரா : கண்கவர் தோற்றம் கொண்டவள்- தம்மை பூஜிப்போரை அவளை போன்றே தோற்றமுறச்செய்பவள்.

ப்ரமோதா : நறுமணமானவள் : வாழ்வில் வசந்தம் தருபவள்.

அனுராகினி : உணர்ச்சிமிக்கவள்- பொன்னை தரும் தேவி.

நாககேஷி : சர்ப்பங்களின் சக்தியை அளிப்பவள்.

பாமினி : பெண்களை வசீகரிக்கவும்
, புதையலை தேடி எடுக்கவும் உதவும் யக்ஷினி.

பத்மினி : பொன் பொருள் வீடு பேறு தருபவள்.

ஸ்வர்ணவதி : இவளை பூஜிக்க அஷ்டமாசித்தும் கைகூடும்.

ராத்ரிப்ரியா : காதல் கொண்டவள்- அன்பானவர்கள் ஒன்று சேர வழிபடப்படுபவள்.

வேறு ஒரு பதிவில் இவர்களின் ஒவ்வொருவருக்கும் உண்டான மந்திரங்களை விளக்குகிறேன். 

Sunday, 6 November 2016

அமானுஷ்ய வழிபாட்டு முறைகுபேரரின் வழிநடத்தப்படும் யக்ஷினி மற்றும் யக்ஷர்களை பற்றி பல புராதன கிரந்தங்கள் நமக்கு வழிகாட்டியுள்ளன. இதில் "தந்த்ரராஜதந்த்ரம்" மற்றும் "உத்தமரேஸ்வரதந்தரம்" மிக முக்கியமான ஒன்றாகும். யக்ஷினிகளை வைத்து பல காரியங்களை, ஏன் முடிக்க முடியாத அனைத்து விஷயங்களையும் முடிக்கலாம் என கூறியுள்ளன அந்த புராதன நூல்கள். இவை மிகுந்த உண்மையும் கூட. ஆனால் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ஒன்று இந்த யக்ஷினி வழிபாடு. தற்காலத்தில் அரைகுறை ஞானத்தோடு பலர் இந்த யக்ஷினி தீக்ஷைகளை கொடுத்து வருவதை காண்கிறேன். கேரளாவில் உள்ள ஒரு நபர், ஒடிஷாவில் இருக்கும் ஒரு தாந்த்ரீகரின் மூலம் யக்ஷினி உபாசனை பெற்று, பின் அதனால் பெரும் அவஸ்தைக்கு உள்ளாகி, பின் எப்படியோ கேள்விப்பட்டு எம்மிடம் ஆலோசனைக்கு வந்து சேர்ந்தார். தகுந்த மாற்று வழிகூறி அவரை அந்த யக்ஷிணியின் ஆற்றலில் இருந்து வெளிவரவைக்க பெரும் பாடு பட வேண்டியதாயிற்று, யக்ஷினிகளை நம் தேவைக்காக உபாசனை செய்யலாமே தவிர புரஸ்சரணம் செய்வதென்பது    தகுந்த குரு தமக்கு உதவும் நிலையில் எந்நேரமும் இருந்தால் மட்டுமே செய்யக்கூடும். உபாசனை என்பது அன்றாட வழிபாடு. புரஸ்சரணம் என்பது கடுமையான நியம நிஷ்டைகளோடு தகுந்த தேவதை/எட்சிணியை அழைத்து காரியம் சாதிப்பது எனலாம். இந்த பதிவில் 34 எட்சிணிகளின் வகை பற்றி கூறியுள்ளோம். பலர் மொத்தமே 36 யட்சிணிகள் தான் என நினைத்து கொண்டு உள்ளனர். யட்சிணிகள் பல உண்டு. 36 என்பது அதன் வகைகள் மட்டுமே.

விசித்ரா
விப்ரமா
ஹம்ஸி
பிஷாஷினி
ஜனரஞ்சிகா
விஷாலா
மதனா
கண்ட்டா
கலகர்ணி
மஹாபயா
மஹேந்திரி
ஷங்கினி
சந்திரி
ஷ்மஷனா
வடயக்ஷினி
மேகலா
விகளா
லக்ஷ்மி
மாலினி
ஷடபத்ரிகா
ஷுலோச்சனா
ஷோபா
கபாலினி
வரயக்ஷினி
நடி
காமேஸ்வரி
மனோஹரா
ப்ரமோதா
அனுராகினி
நாககேஷி
பாமினி
பத்மினி
ஸ்வர்ணவதி
ராத்ரிப்ரியா

இவைகளில் ஒரு சில, மிகுந்த புகழ்பெற்ற லக்ஷ்மி துதிகளில் கேட்டது போல் உள்ளது அல்லவா ?

இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரியங்களை சாதித்து கொடுப்பதில் வல்லவர்கள் என்கிறது "தந்த்ரராஜதந்த்ரம்". அவைகள் என்னென்ன என்பதை அடுத்து வரும் பதிவுகளில் கூறுகிறேன்.Thursday, 3 November 2016

சரிந்தவற்றை நிலையாக்கதிடீரென இழந்த வேலை, சரிந்த தொழில், உடல் நிலை கவலைக்கிடம், மனக்குழப்பம், மிகுந்த பயம் போன்றவற்றை சரியாக்க, சனிக்கிழமையன்று காலை 6:15-7 அல்லது மதியம் 1:15-2 அல்லது இரவு 8:15-9 மணியளவில் 12 பாதாம் பருப்புகளை ஒரு கருப்பு துணியில் முடிந்து ஒரு சிறிய இரும்பு பெட்டியில் வைத்து மூடி, வெளிச்சம் வராத கருமை படர்ந்துள்ள இடத்தில் வைத்துவிட, மேற்கண்ட தாக்கங்கள் குறையும். மேற்கு பகுதியாயின்,பலன் விரைவில். சூட்சுமம் நிறைந்த ஜோதிட தாந்த்ரீக பரிகாரம் இது. 

Thursday, 27 October 2016

வீரியத்தில் உயர்ந்த கருப்பு டார்மலின் கற்கள்நம் வாழ்வில் அனைத்தையும் விட மிக அவசியமான ஒன்று, "பாதுகாப்பு" !!

எவற்றிலிருந்து ??

அனைத்திலிருந்தும்..

நாம் தவறான நபர்களிடம் சிக்காமல் இருப்பது, தவறான முடிவுகள் எடுக்காமல் இருப்பது, தவறான பாதையில் செல்லாமல் இருப்பது, வேண்டாத துஷ்ட சக்திகள், பொறாமை கண்கள் மற்றும் துர் சக்திகளிடம் அண்டாமல் இருப்பது என எத்தனையோ உண்டு..இப்படி அடிப்படை பாதுகாப்பு நம்மிடம் இருந்தால் மட்டுமே மற்ற அனைத்தையும் சுபமாக்க முடியும் அல்லவா ?? அப்படிப்பட்ட பாதுகாப்பை தரும் கல் என விஞ்ஞான பூர்வமாக கண்டுபிடிக்கப்பட்ட கல் தான் மேற்கண்ட ஒன்று. இதை அணிய வேண்டாம், உடன் வைத்திருந்தால் போதும். ஒவ்வொருவர் வீட்டிலும் அவர்களின் அறையில், கண்டிப்பாக இருக்க வேண்டிய இந்த கல் விலை மிக மலிவான ஒன்று. 'பெய்ரோ எலக்ட்ரிக்' எனக்கூடிய மின் சக்தியை தன்னுள் அடக்கிய கற்கள் இவை. மேலும் இன்ப்ரா ரெட் என கூறக்கூடிய அகச்சிவப்பு கதிர்களை வெளியிட கூடிய தன்மை பெற்றவை. மேலும் இவை உடன் வைத்திருப்பின் மொபைல், தொலைக்காட்சி பெட்டி, மைக்ரோ வேவ், கம்ப்யூட்டர்கள் மூலம் வெளிவரும் தீய மின் காந்த அலைகளை அறவே நெருங்க விடாமல் செய்யும்
. மிக முக்கியமாக செய்வினை அல்லது எதிர்மறை சக்திகள் போன்ற விஷயங்களை நம்மில் முயல்வோரை, அவர்களையே திருப்பி தாக்கும் தன்மை கொண்டவை என்பது சிறப்பு.  தலையணை அடியில் வைத்து உறங்குவதால் நேர் மறை சக்திகளை நம்முள் இறக்கும் தன்மையும் இதற்கு உண்டு. வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் வைத்திருக்க வேண்டிய அற்புதமான கற்கள் இவை !! 

Wednesday, 26 October 2016

மூலிகை தீப எண்ணெய்கள்- தேவைக்கேற்றவாறு தினசரி ஏற்றி வரவும்-மண் அகலில் தனி தீபமாகவருடம் முழுதும் மகாலக்ஷ்மியின் அருள் கிட்ட தீபஒளி திருநாள் பரிகாரங்கள்


(மறுபதிவு)
இந்நாளில் குளிக்கும் நீரில் சிறிது பால் விட்டு குளித்து வர அதிர்ஷ்டம் சேரும்.
கொட்டை பாக்கினை சிகப்பு நூலால் சுற்றி லக்ஷ்மி தேவியின் கழுத்தில் மாலையாக அணிவிக்கவும். மறு நாளிற்கு மறு நாள் அதை கழற்றி வீட்டின் பண அறையில் வைத்து இருக்கவும்-மறு வருடம் தீபாவளி நாள் அதை ஓடும் நீரில் விட்டு புதிதாக அணிவிக்கவும்.
முதல் நாளே புதிய தென்னந்துடப்பம் வாங்கி வைத்து வீட்டை தீபாவளி நாள் முதல் அந்த துடைப்பத்தில் சுத்தம் செய்து வரவும்- இந்த நாளில் கோவில்களுக்கு பெருக்க தென்னந்துடப்பங்கள் தானமாய் தர லக்ஷ்மி தேவி மனம் குளிர்ந்து அருள் புரிவார்.
வீட்டில் பூஜிக்கும் பொழுது 11 கோமதி சக்கரம், 11 மஞ்சள் நிற சோழிகள், குங்குமப்பூ,மஞ்சள் கட்டை, சந்தன கட்டை மற்றும் வெள்ளி நாணயங்கள் வைத்து இன்னாளில் பூஜிக்க பொருள் வரவு மேம்படும்.
இந்நாளில் வீட்டின் வாயிலில் 7 கோமதி சக்கரங்களை சிறிய சிகப்பு பட்டு துணியில் கட்டி தொங்கவிட, எதிர்மறை சக்திகள்,கோளாறுகள் விலகி நன்மைகள் பெருகும்.
மீன்களுக்கு இந்நாளில் நாம் ஏற்கனவே கூறியுள்ளபடி, கோதுமை உருண்டைகள் போட்டு வரலாம்.
இந்நாளில்மாடுகள் மற்றும் குரங்குகளுக்கு அச்சு வெல்லம் கொடுத்து வருவது அளவற்ற நற்பயனை தரும்.
ஏழு முக ருத்திராட்சம் இந்நாளில் அணிய பணவரத்து இரட்டிப்பாகும்.
சிறிய சிகப்பு பட்டு நூலில் ஆல மர வேர் சிறிது வைத்து வீட்டு வாயிலில் இந்நாளில் கட்ட வீட்டினுள் மகாலட்சுமி கடாட்சம் ஏற்படும்.
மகாலட்சுமி தாயாரின் படம் அல்லது விக்ரகத்தின் முன் 6 மண் அகலில் சுத்தமான நெய் சேர்த்து அதில் ஒவ்வொன்றிலும் ஒரு கிராம்பு மற்றும் ஒரு ஏலக்காய் சேர்த்து விளக்கேற்ற அடுத்த ஒரு வருடத்திற்கு நிரந்தர செல்வ செழிப்பு உண்டாகும்.
இந்நாளில் பெண் குழந்தைகளுக்கு தங்களால் முடிந்த புத்தாடை எடுத்து தானம் செய்வது தேவியின் மனம் குளிர வழி செய்யும்.
பசுக்களுக்கு இந்நாளில் முடிந்த அளவு மஞ்சள் லட்டு கொடுத்து வர வாழ்கை இனிப்பாகும்.
அரச மரத்திற்கு பால் கலந்த நீரை இந்நாளில் ஊற்றுவது அளவற்ற நற்பயனை பெற்று தரும்.
முக்கியமாக இந்நாளிலும் மறு நாள் அமாவாசை நாளிலும் கண்டிப்பாக அசைவம் தவிர்ப்பது அடுத்து வரும் ஒரு வருடத்திற்கு சிக்கல்கள் இல்லா வாழ்வு தரும்.
மறு நாள் இரவு (அமாவாசை) அரச மரத்தின் அடியில் ஒரு மண் அகலில் நல்லெண்ணெய் விளக்கேற்றி வைத்து திரும்பி பார்க்காமல் வீடு சேர்ந்து கால்களை அலம்பி வீட்டினுள் செல்லவும்.
மறு நாள் அமாவாசை அன்று மாலை 5.40 முதல் 7.30 வரை மகாலட்சுமி தேவியை பூஜிப்பது ஒரு வருடம் பூஜித்த பலனை பெற்று தரும்.

Tuesday, 25 October 2016

தூக்கம் வராமல் தவிப்போர் மற்றும் கெட்ட கனவுகளால் அவதிப்படுவோர்


தலையணை உரையின் உள்ளே சிறிது கொத்தமல்லி விதைகளை போட்டு வைத்து உறங்க மேற்கண்ட தொல்லைகள் விலகும். 

தங்கள் இடத்தை தன ஆகர்ஷணம் மிக்கதாக மாற்ற வேண்டுமா ??ஒரு கண்ணாடி பாட்டிலில்  சிறிது முனை உடையாத பச்சரிசியை இடவும் பின் ஒரு ருபாய் நாணயம் ஒன்றை இடவும் மேலும் சிறிது அரிசியை இட்டு இரண்டு ருபாய் நாணயம் ஒன்றை இடவும் பின் சிறிது அரிசி, அதன் மேல் ஒரு ஐந்து ருபாய் நாணயம், மேலும் சிறிது அரிசி அதன் மேல் 10 ருபாய் நாணயம் பின் மேலும் சிறிது அரிசி பாட்டில்  நிறையும் வரை இட்டு மூடி, பின் மூடியில் சிறிதாக ஆறு துளையிடவும். இதை  தங்கள் வீட்டு ஷோ கேஸ் அல்லது பூஜை அறை, அலுவலகம் ஆயின், பணப்பெட்டி அருகே வைத்து விடவும். எங்கே வைப்பினும் தினசரி தங்கள் கண் பார்வை படும் இடமாக இருக்க வேண்டும். பிரபஞ்ச சக்தி மூலம்  தன ஆகர்ஷணம் செய்யும் சக்தி இதற்கு உண்டு. மாதம் ஒரு முறை அரிசியை பறவைகளுக்கு இட்டு பின் அதே நாணயங்களை வைத்து மாற்றவும். மிக விரைவாக பலன் தரக்கூடிய சூட்சும பரிகாரம் இது. 

குளியல் பரிகாரம்நம் கிரந்தங்களில் பரிகார வகைகளை வரையறுக்கும் விதத்தில் ஒன்றாக குளியல் பரிகாரங்களும் கூறப்பட்டுள்ளன. பழங்காலத்தில் குறிப்பிட்ட சில மூலிகைகளை, இலைகளை போட்டு குளித்து, தேவையான கிரகங்களின் சக்தியை பெற்று துன்பங்களை போக்கி வந்தனர். இவை இன்றும் வட இந்தியாவின் சில மாநிலத்தோர் செய்து வருவதுண்டு. மேலை நாடுகளில் இவை வெகு பிரசித்தம். இது போன்ற பரிகாரங்களை நாமும் ஏற்கனவே கொடுத்து பலர் உபயோகித்து பலன் கண்டும் வந்துள்ளனர்.

பணத்தை ஈர்க்கும் சக்தி பல மூலிகைகளுக்கு உண்டு. அவற்றின் எண்ணெய்களை உபயோகித்து குளித்து வர, பண ஈர்ப்பு சக்தி நம்மையும் வந்தடையும்.

வெது வெதுப்பான அல்லது சூடான குளிக்கும் நீரில் 6 ஒரு ருபாய் நாணயங்களை இட்டு, பின் இஞ்சி, வெட்டிவேர் அல்லது துளசி எண்ணையில் ஏதேனும் ஒன்றை 4 சொட்டுகள்  விட்டு, 3 நிமிடங்கள் அந்த நீரை உற்று நோக்கவும். பின் தங்களுக்கு தேவையான நியாயமான தொகையை மனதில் நினைத்து குளிக்கவும். முடிந்ததும் அந்த நாணயங்களை எடுத்து தங்கள் பர்சில் தனியாக வைத்து வரவும். அதையே தினசரி உபயோகிக்கலாம். பல் வேறு சூட்சுமங்களை கொண்ட பரிகாரம் இது.

குறிப்பு : அந்த எண்ணெய்கள் அனைத்து ஆர்கானிக் அங்காடிகளில் கிடைக்கின்றன. 

Sunday, 23 October 2016

நிரந்தர வேலை கிடைக்க மற்றும் வேலைக்கு ஆட்கள் கிடைக்கசிலர் நிரந்தர வேலை இல்லாமல் தவிப்பர், வேறு சிலரோ வேலைக்கு ஆட்கள் நிரந்தரமாக அமையாமல் தொழில் தடுமாற்றத்தில் இருப்பர். இத்தகைய சூழலுக்கு, காலை சூரியன் உதித்த ஒரு மணி நேரத்திற்குள், ஒரு செம்பு டம்பளரில் சுத்தமான நீர் எடுத்து அதில் சிறிது வெல்லம் கரைத்து, சூரியனை பார்த்தவாறு 'ஓம் சூர்யாய நமஹ: " மந்திரம் கூறியவாறே 10 முறை நீரை சிறிது சிறிதாக சூரியனுக்கு அர்ப்பணம் செய்து, கண் திறந்து வழிபட்டு வர நினைத்த வேலை கிடைக்கும். வேலைக்கும் ஆட்களும் நிரந்தரமாக கிடைப்பர். 

திடீர் வீழ்ச்சி வராமல் தடுக்கசிலருக்கு அடிக்கடி எதிர்பாராமல் வீழ்ச்சி இருந்து கொண்டே இருக்கும். மேலும், அதை பற்றிய பயமும் இருந்து வரும். அத்தகையோர், தொடர்ந்து 4 சனிக்கிழமைகள் மதியம் 1:15-2 மணிக்குள் நான்கு நபர்களுக்கு  4 உளுந்து வடையுடன் கூடிய தேங்காய் சட்னியை (ஒவ்வொருவருக்கும் 4)  வைத்து தானம் செய்ய, மேற்கண்ட கெடு பலன் மறையும். மேலும், போட்டி பந்தயங்களில் வெற்றி பெற நினைப்போரும் இதை செய்து வரலாம். 

லக்ஷ்மி கட்டு விலக, தரித்திர நிலை நீங்கதொடர்ந்து 8 சனிக்கிழமைகள் வன்னி மரத்தை வழிபட்டு, அதனடியில் மண் அகலில் கருந்திரியிட்டு நல்லெண்ணெய் தீபமேற்றி, மரத்தை வழிபட்டு வர மேற்கண்ட நிலை நீங்கி, எதிலும் வெற்றி பெறலாம்.

குறிப்பு : வன்னி மரத்தை தங்கள் ஊரில் உள்ள பழங்கால சிவ ஆலயங்களில் காணலாம். பல கோவில்களில் இவை தல விருட்சமாக உள்ளன. எங்கு தேடியும் கிடைக்காதவர்கள், நன்கு வளர்ந்திருக்கும் வன்னி செடியை வாங்கி வீட்டில் வைத்தும் வழிபடலாம். முழு மரத்தை வழிபட்டு வருவதே முழு பலன் அளிக்கும். 

Friday, 21 October 2016

நீண்ட நாள் கடன்கள் அடையதொடர்ந்து 9 செவ்வாய்கிழமைகள் வீட்டின் தெற்கு பகுதியில் வடக்கே பார்த்தவாறு நரசிம்மர் படத்தை வைத்து செவ்வரளி மலரிட்டு, 9 மண் அகலில் சிகப்பு திரியிட்டு வடக்கு நோக்கி வைத்து  'ஜாஸ்மின்' எண்ணெய் விளக்கேற்றி, 'நரசிம்ம பிரபத்தி' 9 முறை கூறி வழிபட்டு வர, கடன்கள் அடைய வழி பிறக்கும்.

குறிப்பு: "நரசிம்ம பிரபத்தி' ஏற்கனவே கொடுத்துள்ளோம். மேலும், இதை செய்ய காலை 6:15-7 மணி மிக சிறந்தது. முடியாதோர், மாலை 8:15-9 மணிக்குள் செய்யலாம். ஜாஸ்மின் (மல்லி) எண்ணெய் பெரிய டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கிறது. மேற்கண்ட பிரார்த்தனை முடிவில் நரசிம்மருக்கு பானகம் நிவேதனம் செய்வது அவசியம். பரிகாரம் செய்யும் நாளில் முட்டை முதற்கொண்டு அசைவம் முற்றிலும் தவிர்க்கவும்.

சர்க்கரையின் அளவை கூட்டாத சர்க்கரைசர்க்கரை  (நீரிழுவு) நோய்  உள்ளோர் பலர் வழக்கமாக சர்க்கரையை உபயோகிக்க முடியாமல், அதே நேரம் ஏக்கத்தோடும் கசப்பான தேநீர், காபி, பழநீர் போன்றவற்றை அருந்தி வருவதும், ஒரு சிலர் அதற்கு மாற்றான சர்க்கரை  மாத்திரைகளை போட்டு மேற்கண்டவற்றை அருந்தி வருவதும் வாடிக்கை. இந்நிலையை மாற்ற ஏற்கனவே கூறியிருந்தபடி நம் " ஐம் ஈச முத்ரா" ஆர்கானிக் அங்காடி மூலம், சர்க்கரை  அளவை கூட்டாத அதே நேரம் அந்த சுவையை அளிக்கும் சர்க்கரையை அறிமுகப்படுத்துகிறோம். வழக்கமான சர்க்கரையை விட மிக குறைந்த அளவே உபயோகித்தால் போதுமானது. சர்க்கரையை போலவே இருக்கும் இவை, சர்க்கரையின் அளவை கூட்டாதது மட்டுமல்ல, வேறு சில உடல் நலனும் உண்டு. மேலும், இவற்றை நீரிழிவு இல்லாதவர்களும், உபயோகிக்க, சாதாரண சர்க்கரையால் உண்டான பாதிப்பை வெகுவாய் குறைக்கலாம், மொத்தத்தில் இது உங்கள் உடலுக்கான முதலீடு. 500gm விலை  ரூ.145/- மட்டும். (சாதாரண சர்க்கரை
யின் ஒன்றேகால் கிலோ உபயோகத்தை இந்த அரை கிலோவில் செய்யலாம்) 

குடிப்பழக்கம் முற்றிலும் நிற்கமேற்கண்ட பழக்கத்தினால், பல உயிர்கள்,வாழ்க்கைகள் கேலிக்குரியதாகவும் கேள்விக்குரியதாகவும் மாறி நரக வாழ்வு வாழ வைக்கிறது-பல குடும்பங்களை !! பலர் தானே விரும்பினாலும் இதன் கோரப்பிடியிலிருந்து மீள முடியாமல் தவிக்கின்றனர். இந்நிலையை மாற்ற- நம் சென்டரில் புதிய அறிமுகம் "பிராணா". ஹோமியோபதி வகையை சேர்ந்த மருந்தான இதை தினமும் 3 அல்லது 2 வேளை குடிப்பழக்கத்தில் உள்ளோர்க்கு 20 சொட்டுகள் நீரிலோ அல்லது வேறு உணவு பொருளிலோ, கலந்து  கொடுக்க ஓரிரு மாதங்களில் குடிப்பழக்கம் முற்றிலும் நிற்கும். மீண்டும் வராது. இது ருசி மற்றும் நிறமற்றது.எவ்வித பக்கவிளைவுகளும் இல்லாதது இம்மருந்து. 

தேவைப்படுவோர் : +918754402857 

Thursday, 20 October 2016

இனம் தெரியாத பயம் நீங்க
வீட்டில் உள்ளோர் அனைவருக்கும் காரணம்
 தெரியாத மனக்கவலை,சோகம் அல்லது பயம் இருப்பின் தொடர்ந்து 8 சனிக்கிழமைகள் காய்ந்த யானை சாணத்துடன் சிறிது வெண்கடுகு மற்றும் பிரியாணி இலை சேர்த்து வீட்டின் தலைவாசலில் தொடங்கி வீடு முழு வெண்கல மணியோசையுடன் தூபமிட்டு வர, மேற்கண்ட கஷ்டங்கள் நீங்கும்.

குறிப்பு : மிகுந்த மருத்துவ பயனும்  கொண்டதாகும்  யானை சாணம். இதன் புகையை உள்ளிழுப்பதால் தலைவலி மற்றும் சைனஸ் விலகும் என்பது அறிவியல் பூர்வமான கண்டுபிடிப்பு. 

Wednesday, 19 October 2016

நெற்றிக்கண் (ஆஞ்ஞா) சக்கரத்தை விழிப்படைய வைக்கும் கல்"லாபிஸ் லாஸுலி" என்பது அதன் பெயர். நம் உடலின் ஆறாவது சக்கரமான 'நெற்றி கண்' னை விழிப்படைய வைக்கும் ஆற்றல் பெற்ற இவை அளிக்கும் பலன்கள் அளவிடமுடியாதவை. உடல் ரீதியாக பார்த்தோமேயானால், நோய் எதிர்ப்பு சக்தி, தொண்டை, எலும்பு, சுரப்பிகள் போன்றவை வலுவடையும். மேலும் தூக்கமின்மை, தலை சுற்றல், காது கேளாமை, பின்புற வலிகள், ஏன், எலும்பு முறிவை கூட சரி செய்ய கூடிய ஆற்றல் பெற்றவை இவை.

அதை தவிர, நம் உள்
மன ஆற்றல்களை சரியான திசையில் செலுத்தி அனைத்திலும் வெற்றி பெற செய்யும் தன்மையும், பதட்டமில்லா மன வலிமையையும் தரும். மேலை நாடுகளில் பலர் இந்த கற்களை மேலுலக ஆத்மாக்களை தொடர்பு கொள்ள பயன் படுத்தி வருகின்றனர். 

அன்பர்களின் கேள்விகள் :

வீட்டில் / தொழில் செய்யும் இடத்தில  வைத்து பூஜித்து வழிபடும் யந்திரத்தை விட, தாங்கள் கூறும் மோதிர எந்திரங்கள் வலிமையானதா? எப்படி ?


பதில் : வீட்டில் அல்லது தொழில் செய்யும் இடத்தில் வைத்து பூஜிக்கும் எந்திரங்களின் தன்மை மற்றும் அதை உருவேற்றிய விதம் போன்றவற்றை ஆராய வேண்டும். பொதுவாக அது போன்ற எந்திரங்களை விட இவை வலிமையானது என கூறுவதை காட்டிலும், வேகமாக பலன் தரக்கூடியது எனலாம். மேலும், அது போன்ற எந்திரங்களுக்கு
உண்டான நியம நிஷ்டைகள் இந்த எந்திர மோதிரங்களுக்கு கிடையாது. மேலும், தாந்த்ரீக சக்தியை தாண்டி, இந்த மோதிரங்கள் "சைக்கோ சிம்பாலஜி" என்கிற நம் ஆழ் மன ஆற்றலை பிரபஞ்சத்திற்கு தெரிவித்து பயன் கொடுக்கும் முறைப்படியும் வேலை செய்கிறது. ஆகவே தான் இதற்கு விரைவில் பயன் கொடுக்கும் சக்தி அதிகம் என கூறினோம். மேலும், பஞ்சலோகத்தில் அணிவதால், அதற்குரிய கிரகங்களையும் வலிமைப்படுத்தும் !! பல் வேறு விதமாக அணிவோரை மேல்நிலைப்படுத்தக்கூடியவை இவை.