வரும் புத்தாண்டு நாளன்று நடக்க இருக்கும் மஹா லக்ஷ ஆவர்த்தி கணபதி ஹோமத்தை பற்றி குறிப்பிட்டுருந்தது அனைவருக்கும் நினைவிருக்கும் என நம்புகிறோம். பெரும் திரளாக குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டு விநாயக பெருமானின் பூரண ஆசியை அனைவரும் பெற வேண்டுகிறோம். வெளியூர் அன்பர்களின் பிரசாதம் வேண்டி தபால் கவர்கள் வந்த வண்ணம் உள்ளன. மேலும் பல வெளியூர் அன்பர்கள் குறைந்த நாட்கள் கருதி, கூரியர் தபாலிலும் கவர்களை அனுப்பிய வண்ணம் உள்ளனர். அனைவருக்கும் முதல் வாரத்தில், அவர்களின் குடும்ப நபர்களின் பெயரில் தனித்தனியாக சங்கல்பம் செய்யப்பட்ட பிரசாதங்கள் சென்று சேரும். மேலும். இந்த ஹோமத்தில் என்னென்ன பொருட்கள் கொடுப்பின் என்னென்ன பலன்கள் கிட்டும் என்பதை இந்த பதிவில் காணலாம்.

சம்பங்கி பூ : அரசாங்க நன்மைகள், அரசு வேலை மற்றும் காரியத்த
டை நீக்கம்.

அரிசி,பால், பழங்கள்  : மன மற்றும் பணப்பிரச்சனைகள் நீங்கும். தாய் வழி சொத்துக்கள் தாமதம் ஆகாமல் வந்து சேரும்.ஸ்டாக் மார்க்கெட், கமாடிட்டி தொழில் செய்வோருக்கு தடைகள் நீங்கும்.

சுத்தமான மலை தேன்: விற்காத சொத்துக்கள் விற்கும். மற்றும் சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் முடிவிற்கு வரும். ரியல் எஸ்டேட் தொழில் செய்வோருக்கு தொழில் ஏற்றம் உண்டாகும். போட்டி பந்தயங்களில் வெற்றி கிட்டும்.

தூய நெய் : தொழில் செய்வோருக்கு ஏற்றம் தரும். பண புழக்கம் அதிகமாகும். பணத்தடைகள் நீங்கும்.

மஞ்சள் வாழைப்பழம் : நீரிழிவு நோயின் தாக்கம் குறையும். அனைத்து விஷயங்களும் சுபமாகும். சுபகாரியத்தடைகள் அடியோடு நீங்கும்.

சர்க்கரை, கரும்பு : கணவன் மனைவி அன்னியோன்னியம், திருமணத்தடை நீங்கும்.

தூய நல்லெண்ணெய் : அனைத்து தடைகளும் நீங்கும். இனம் தெரியாத பிரச்சனைகள் முடிவிற்கு வரும். உடல் நோய்கள் நீங்கும்.

தேங்காய் : இழந்த கௌரவம், செல்வம், பறிகொடுத்த பெயர், பணம், பொருட்கள் திரும்ப சேரும். சிம்ம ராசி மற்றும் லக்கினம் கொண்டோர் அவசியம் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பலன் பெறலாம்.

அருகம்புல், தர்பை : அனைத்து தடைகளும் நீங்கும். சர்வ சங்கட நாஸ்தி.

மேற்கூறியவற்றில் தங்களின் சக்திக்கு ஏற்ப செய்து பலன் பெறலாம். ஹோமத்திற்கு பொருளுதவி, அன்னதானத்திற்கு பொருளுதவி செய்ய விரும்புவோரும் செய்து பலன் பெறலாம். மேலும் இந்த ஹோமத்தில் நாம் புதிதாக கூறியுள்ள 'வெள்ளெருக்கன் வன்னி விநாயகரை' வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. அப்படி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் திங்கள் 2.1.2017 முதல் நமது சென்டரில் கிடைக்கும்.

Post a Comment

Previous Post Next Post

Get in touch!