
திங்கள் அன்றும் காலை வேளையில் ஈசனுக்கு எலுமிச்சை மற்றும் இஞ்சி சேர்க்காத தூய கரும்பு சாறு, தேன் மற்றும் பால் என்னும் வரிசையில் அபிஷேகம் செய்வித்து, கர்ப கிரக விளக்கிற்கு தூய நெய் சேர்த்து, நந்தியெம்பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி, சரபேஸ்வரர் சன்னதியில் விளக்கு ஏற்றி வைத்து வழிபட்டு வர, அனைத்து வித செல்வங்களும் நம்மை வந்து சேரும். ஈசனின் பரிபூரண அருள் கிட்டும். இந்நாட்களில் அசைவம் மற்றும் உயிர் வதை, தோல் பொருட்கள் உபயோகம் தவிர்க்கவும்.