நசி மசி வசி வசி




 'நசி மசி வசி வசி'  வசீகரத்திற்கு வழிமுறைகள் Vamanan Seshadri Tips

வசீகரம் என்பது ஏதோ மற்றவர்களை மோசம் செய்வது, அழிப்பது, மாந்த்ரீகம் செய்து சீரழிப்பது போன்று பலர் மனதில் ஒரு மாயயையான தோற்றத்தை இக்காலத்தில் பலர் உருவாக்கி விட்டனர்-அவர்களின் பிழைப்புக்காக.
இது முற்றிலும் தவறாகும். நம் சித்தர்களும் முனிகளும் இதை பற்றி பல விடயங்களை கொடுத்திருப்பினும், இதற்கான வழிமுறைகள் மற்றும் நிபந்தனைகளையும் கூறியுள்ளனர். எம்மை பொறுத்தவரை, தம்மை வசீகர சக்தி உள்ள நபராக மாற்றி கொண்டு, நமக்கான நியாயமான தேவைகளை நிறைவேற்றி கொள்வதே வசீகரம் என்பேன். இதை பற்றிய பயிற்சியிலும் இதையே கூறிவந்துள்ளேன். உதாரணத்திற்கு, ஜோதிட விதிகளின் படி பார்த்தோமானால், மிதுனத்திற்கு கன்னியும், தனுசிற்கு மீனமும், விருச்சிகத்திற்கு கடகமும் எளிதில் வசமாவர்-நட்புடன் இருப்பார்.இது போன்று மற்ற ராசிகளுக்கும் உண்டு.  இது பொது விதியே. அன்றாடம் நாம் வேப்பிலை கொழுந்தினை உண்டு வந்தாலே, வசீகர சக்தியை பெறலாம்-ஏனெனில், ராகுவாகவும் , கேதுவாகவும் உருவெடுப்பதற்கு முன்னால், அசுரனின் வாயிலிருந்து விழுந்த அமிர்தமே வேப்பமரம் என்பது கூற்று. அதே சமயம் இந்த கொழுந்தினை ஒரு வாரத்திற்கு மேல் தொடர்ந்து உண்ண வேண்டாம். இடைவெளி விட்டு உண்ணலாம். அளவிற்கு அதிகமான அமிர்தமும் விஷமாகும்.

இது போன்று மேலதிகாரிகளையோ, குழந்தைகளையோ, உறவுகளுக்குள்ளோ வசீகர நட்பு பெற வேண்டுமெனில், அவர்களது புருவ மத்தியினை உற்று நோக்கி, நம் வலது நாசியில் மூச்சு வரும் படி இருக்க 'நசி மசி வசி வசி' என்ற மந்திரத்தை மனதினுள் கூறிவரின், அவர்கள் நம் அன்பிற்கு வசமாவர். இதை தவறாக பயன்படுத்த கூடும் என்ற காரணத்தினால் தான், புருவ மத்தி எப்பொழுதும் வெறுமையாக இருத்தல் ஆகாது என்பர். பெண்களாயின், அவர்கள் இடும் ஸ்டிக்கர் பொட்டுக்களுக்கு வசியத்தை தடுக்கும் சக்தி இல்லை. ஆகவே, அதை தவிர்த்தல் நலம். பல் வேறு மூலிகைகளை கொண்டு அஞ்சனம் முறைப்படி தயார் செய்து, அதை புருவ மத்தியில் இட்டு வர, நம் வசீகர சக்தி கூடுவதோடு மட்டுமில்லாமல், காரியங்களும் எளிதில் கைகூடும். பல்வேறு வாழ்வியல் தொல்லைகளை நினைத்து வருந்தாமல், அவற்றை எப்படி நம் முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக்கொள்வது என்பதே இந்த திலக தந்திரத்தின் கோட்பாடு.



Post a Comment

Previous Post Next Post

Get in touch!