நமசிவய

நம்மை பெற்றெடுத்த தாய் தந்தையர்களுக்கு, அவர்கள் உள்ள போதும் சரி, மறைந்து விட்டாலும் சரி, நம் உயிர் உள்ள வரை அவர்களை பேணி காப்பது நம் கடமையாகும். பலர், அவர்கள் உள்ள போதே,அவர்களின் அந்திம காலத்தில், அவர்களை சரி வர கவனிக்காமல், தூற்றியும், அவர்களை பற்றிய அக்கறை இல்லாமலும் இருந்து வருகின்றனர். என் இத்தனை வருட அனுபவத்தில், அத்தகைய மகா பாதக செயல் செய்தோர் எவரும் தங்கள் அந்திம காலத்திலோ அல்லது துன்ப நிலை வரும் பொழுதோ, உதவி கிட்டாமல், கடவுளும் கை விட்ட நிலையில் சிக்கி தவிப்பதை பல முறை கண்டுள்ளேன். எந்த பரிகாரமும் ஜோதிடமும் மாந்த்ரீகமும் அவர்களை காப்பாற்றியதில்லை. பித்ரு தர்ப்பணம் என்பது எதோ அந்தணர்கள் மற்றும் செய்ய கூடியது என்ற கருத்து இங்கு இருந்து வருகிறது. அது தவறாகும். அனைவரும், குறிப்பாக, இந்து சமயத்தில் பிறந்த அனைவ்ரும் ஒவ்வொரு மாதம் அமாவாசை தினங்களில் ஆவது, தங்கள் முன்னோர்களுக்கு கண்டிப்பாக தர்ப்பணம் கொடுக்க வேண்டும். தினசரி முன்னோர்களை நினைத்து காக்கைக்கு எள் கலந்த சாதம் வைத்து வருவதும் முக்கியம். தற்சமயம் தமிழ்நாட்டில் பல சித்தர்களை, குரு மார்களை வழிபடும் பழக்கம் பெருகி வருகிறது. இவர்களும் நம் முன்னோர்களே. அப்படி வாழ்ந்து உயிர் நீத்த குருமார்களுக்கு வழிபடும் தங்கள் கோடானுகோடி பக்தர்களை காக்க இயலும் எனில், உங்களை பெற்றெடுத்த தாய் தந்தையரின் தூய ஆத்மாவினால், தங்கள் குழந்தைகளை மட்டுமாவது காக்க இயலாதா? சிந்தித்து பார்க்க வேண்டிய விஷயம் இது. தினசரி கடவுள் வழிபாடு செய்த உடன், உங்கள் முன்னோர்களை நினைத்து பத்து நிமிடமாவது, தியானம் செய்வது முக்கியம். அப்படி தியானித்து வருவீர்களேயானால், அவர்களின் அதீத ஸ்தூல ஆத்ம சக்தியால்,ஆசீர்வாதத்தினால், கிடைக்கப்பெறும் நல்வாழ்வை, வேறெந்த பரிகாரமும், ஜோதிடமும் உங்களுக்கு கொடுத்து விட முடியாது என்பது திண்னம். அடுத்த மாதம், மஹாளய பட்சம் வருகிறது. பௌர்ணமி மறுநாள் தொடங்கி அமாவாசை வரை உள்ள அந்த பதினைந்து தினங்களும், அவர்கள் நம் வீடு தேடி நம்மை காண வருவதாக ஐதீகம். அந்த பதினைந்து தினங்களும் அவர்களை எவரொருவர் அன்புடன் உபசரித்து, தியானித்து, தர்ப்பணம் கொடுத்து வழியனுப்பி வைக்கின்றனரோ, அவர்களின் துன்பம் யாவும் தூள் தூளாவதை தங்கள் அனுபவத்தில் காணலாம்.

நமக்கு உயிர் தந்த, நம் தாய் தந்தையரை அவர்கள் உள்ள போதும், மறைந்த பின்னும் பேணி காப்பதும், போற்றுவதும் நம் ஒவ்வொருவருடைய கடமை.

ஹரி ஓம் தத் சத்

Post a Comment

Previous Post Next Post

Get in touch!