17.12.17 ஏன்- 19.12.17 தானே சனி பெயர்ச்சி  ??

சனியானவர் தன் பலன்களை மிக மெதுவாக கொடுப்பவர். அள்ளி கொடுப்பதனாலும் சரி, கிள்ளி எடுப்பதானாலும் சரி. அப்படிப்பட்டவர் தன் பெயர்ச்சியின் பலா பலன்களை ஒரு மாதம் முன்பிருந்தே கொடுக்க தயங்குவதில்லை.

பொதுவாக அமாவாசை தினத்தன்று ஹோமம் செய்தால் செய்தவருக்கும்  சரி செய்து வைப்பவருக்கும் சரி கேடு விளையும் என்கின்றன வேதங்கள். ஆனால் சண்டி, காளி மற்றும் அதர்வண ஹோமங்கள் அத்தோடு சனி சாந்தி ஹோமம் இவற்றிற்கு மட்டும் விதி விலக்கு உண்டு. ஆகவே, இந்த நாளில் இந்த பரிகார சாந்தி ஹோமத்தை வைத்தோம். அது மட்டுமல்ல, பரிபூர்ண அமாவாசை தினம் மற்றும் சனீஸ்வரரால் துன்பங்கள் ஏற்படின் அதை தடுத்து நிறுத்தி நம்மை உடனடியாக காத்து அருளும் சக்தி கலியுகத்தில் உக்ர காளி, ஆஞ்சநேயர், யமராஜர் மற்றும் விநாயகருக்கே அதிகம். அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த ஆஞ்சநேய சக்தி உதித்த நாள் 17.12.17 . இப்படி சர்வ அமாவாசை தினமும் அஞ்சனை மைந்தன் அனுமனின் ஜெயந்தி தினமும் சனீஸ்வரரின் அதீத ஆற்றலை உள்ளடக்கிய  எட்டாம் எண் (17) நாளும் சேர்ந்து வருவது மஹா அபூர்வம்- ஆகையினால் தான் இந்த நாளில் ஹோமத்தையும் வைத்து சனீஸ்வர ரட்சை கொடுக்க திட்டமிட்டோம். இந்த நாளில் சனீஸ்வர ஹோமத்தில் கலந்து கொண்டு, அவரின் பரிபூரண ஆசியை உள்வாங்கி, வசதி உள்ளோர்- ஹோமத்திற்கு வன்னி சமித்து மற்றும் நெய்
 (தூய நெய் மட்டுமே  ஏற்றுக்கொள்ளப்படும்) நல்லெண்ணெய் கொடுத்து வழிபாடு செய்யலாம். மேலும், இது போன்ற ஹோமங்கள் மற்றும் பூஜைகள் நாம் அடிக்கடி கட்டணமின்றி  நடத்தி வருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. வசதி உள்ளோர் அன்னதானம் மற்றும் இதர விஷயங்களுக்கு நன்கொடை அளிக்க விரும்பினால் மற்றும் சனீஸ்வர ரட்சை தேவைப்படின் கொடுக்கப்பட்டுள்ள எண்களுக்கு அழைத்து விவரங்கள் பெறலாம்.

+918754402857  &  +919840130156 

இடம் : சங்கர மடம்
நேரம் : காலை பத்து மணிமுதல் ஒரு மணி வரை 

மதியம் ஒன்னேகால் மணியில் இருந்து நிவேதன அன்னம் 


Post a Comment

Previous Post Next Post

Get in touch!