Saturday, 7 January 2017

மார்கழி 'ருண விமோசன பிரதோஷம்' 10.1.17



இந்த நாளில் வரக்கூடிய பிரதோஷமானது மிக வீரிய பலன்களை கொடுக்கக்கூடிய ஒன்றாகும். செவ்வாய் கிழமையில் வரும் இந்த பிரதோஷம் 'ருண விமோசன பிரதோஷம் ' ஆகும். ருணம் என்பது கடனை குறிக்க கூடியது. வேறு விதமாக கூறினால் தோஷங்களை குறிக்கும் எனலாம். பணமாக பெறப்படும் கடன் மட்டுமல்ல. தேவ, பூத,பித்ரு,ரிஷி (குரு) மனுஷ்ய  தோஷம் என்ற வகைப்படும் இவைகளை களைய, இந்நாளில் நந்தியெம்பெருமானை வேண்டி வணங்கி அருகம்புல் மாலைசாற்றி, நெய் தீபம் ஏற்றி,பின் பிரதோஷ வேளையில் சிவபெருமானின் கர்ப கிரக விளக்கிற்கு தூய நெய் கொடுத்து, கோவிலின் பிரகாரத்தில் 9 மண் அகலில் இலுப்பெண்ணை தீபம் சிகப்பு திரியிட்டு ஏற்றி வேண்டி வணங்கி வருவதால் , மேற்கூறிய அனைத்து தோஷங்களில் இருந்தும் விடுதலை பெறலாம். கிடைத்தற்கரிய நாள் இது.

மேலும் நந்தியெம்பெருமானின் தலையில் கை வைத்து காதில் நம் எச்சில் பட விருப்பங்களை கூறுவது மகா பாவச்செயலாகும். இது தற்காலத்தில் உதித்த ஒன்று. கோவிலில் எந்த ஒரு விக்ரகத்தையும் தொடாமல் வழிபட்டால் மட்டுமே பலன். அற்புத மந்திர சக்திகள் கொண்ட விக்கிரங்களை கைகளால் தொட்டு பெரும் பிழையை செய்ய வேண்டாம். மேலும், சண்டிகேஸ்வரர் சதா நேரமும் சிவ தியானத்தில் இருப்பவர். அவரை வழிபடுவதாக கூறி கை சொடுக்குவது, கை தட்டுவது,ஏன், இன்னும் சிலர் தலையில் கொட்டி கூட வழிபடுகின்றனர், இத்தகைய பாவச்செயலை செய்து விட்டு, நம் துன்பங்கள் தீரவில்லையே
என இறைவனை குறை கூறி என்ன பயன்? ஆகவே சண்டிகேஸ்வரர் சன்னதியில் சத்தம் எழுப்பாமல் மெதுவாக 'சிவயநம' மந்திரம் கூறி வழிபடுவதே முறை. ஒவ்வொரு முறை சிவன் கோவிலுக்கு செல்லும் சமயமும் சண்டிகேஸ்வரரின் சந்நிதியில் நெய் விளக்கு ஏற்றி வைக்க மறந்து விடாதீர். மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும் இவை உங்கள் வாழ்வில்.

ஹரி ஓம் தத் சத்:   

Friday, 6 January 2017

வைகுண்ட ஏகாதசி ஞாயிறு 8.1.17



வரும் ஞாயிறு 8.1.17 அனைத்து பெருமாள் ஆலயங்களிலும் வைகுண்ட ஏகாதசி வெகு சிறப்பாக அனுசரிக்கப்படும். இந்த ஆண்டு வரும் வைகுண்ட ஏகாதசிக்கு பல ஜோதிட சூட்சும சிறப்புகள் உண்டு. ஆகவே, அந்நாளில் பூரண உபவாசம் இருந்து பெருமாளை வணங்கி ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் கூறியோ, கேட்டோ வருதல் மிகுந்த அற்புத பலன்களை தரும். முடியாதோர், ஸ்ரீ ராம நாமம் கூறிவரலாம்.

இந்நாளில், இரவை கழிக்க திரைப்படம் சென்றோ, டீவியில் நேரத்தை கழிப்பதோ அல்லாமல், சுந்தர காண்டம், ராமாயணம், பகவத் கீதை, பாகவதம் போன்றவற்றை படித்து வர வாழ்வில் வசந்தம் வீசும். அடுத்து வரும் நம் சந்ததியினருக்கும் இவற்றை பழக்க நல்லதொரு சந்தர்ப்பம். 

Monday, 2 January 2017

லக்ஷ ஆவர்த்தி கணபதி ஹோமத்தில் உருவேற்றப்பட்ட வெள்ளெருக்கன் வன்னி விநாயகர்


புத்தாண்டு முதல் நாளன்று மேற்கண்ட ஹோமத்தில் கலந்து கொண்டு தங்கள் குடும்பத்தினரின் பெயரில் சங்கல்பம் விநாயக பெருமானின் பூரண ஆசியினை பெற்ற அனைவருக்கும் எம் வாழ்த்துக்கள். ஏற்கனவே கூறியபடி, வெள்ளெருக்கன் வன்னி விநாயகர் சிலைகள் மேற்கண்ட ஹோமத்தில் வைத்து பூஜிக்கப்பட்டது அனைவருக்கும் நினைவிருக்கும் என நம்புகிறோம். அவைகள் நாளை முதல் நமது சென்டரில் கிடைக்கும். தேவையுள்ளோர் வாங்கி பூஜித்து பலன் பெறலாம். ஏற்கனவே முன் பதிவு செய்துள்ளோரும் நாளை முதல் பெற்று கொள்ளலாம். மேலும் சென்டருக்கு வருவோர் பிரசாத பாக்கெட்டுகள் மற்றும் விசேஷ புத்தாண்டு காலண்டர் இருப்பு உள்ளவரை கேட்டு பெற்றுகொள்ளவும்.
அணுக : +918754402857

Sunday, 1 January 2017

வசீகரம் - திலக தந்த்ர பயிற்சி



அனைவரின் விருப்பத்திற்கிணங்க வேலை, தொழில், தாம்பத்தியம், சர்வ ஜனத்தையும் வசீகரம் செய்ய வைக்கும் 'வசீகரம்- திலக தந்த்ர' பயிற்சி வரும் ஜனவரி 4 முதல் 7 வரை தனித்த
னி நபரான பயிற்சியாய் நமது சென்டரில் நடைபெற உள்ளது. விருப்பமுள்ளோர் பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சிக்கு வருவோர்க்கு 'வசீகர' சக்தியை ஏற்படுத்தும் 'காமாக்கிய சிந்தூரம்' மற்றும் 'குங்குமப்பூ' வழங்கப்படும். மேல் விவரங்களுக்கு தொலைபேசியில் மட்டும் அழைத்து தெரிந்து கொள்ளவும்.

+919840130156 / +918754402857