குறிப்பு : 2013 & 2017 ல் நாம் இட்ட பதிவுகளில் இருந்து சில முக்கிய பகுதிகள்

இந்த ஆண்டு, செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 9 வரை மகாளய பட்சம் நடக்கிறது. இது ஓர் அரிய மகத்தான புண்ணிய காலமாகும். இதன் மகத்துவத்தையும் தெய்வீக பெருமையும் மிகப்பழைமையான நூல்கள் அற்புதமாக விளக்கியுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் சூரிய பகவான் அவரது சொந்த ராசியான சிம்மத்தில் சஞ்சரிக்கும் போது தேய்பிறையில் ஆரம்பமாகும் மகாளய பட்சம் ( மகாளய காலம் ) ஆரம்பமான தினத்திலிருந்து பதினைந்து நாட்கள் வரை நீடித்து அமாவாசை அன்று முடிவடைகிறது.தெய்வத்திற்கு சமமான  நமது முன்னோர்கள் நம்மீது அவர்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் அன்பு காரணமாக நம் வீடு தேடிவருவதோடு மட்டுமல்லாமல் நம்முடன் சுமார் 15 நாட்கள் தங்கியிருக்கும் பரமபவித்திரமான காலமும் நேரமும் ஆகும் இது.
இது பற்றி ஏற்கனவே ஒரு சில பதிவுகள் இட்டுள்ளோம். நம் வாழ்வில் ஏற்படும் பல இனம் தெரியாத இன்னல்களுக்கு நம் முன்னோர்களை முறையாக பூஜிக்காமலும், அவர்களுக்கு உரிய உணவை, அவர்களின் தாகத்தை தீர்க்கும் நீரை அவர்களுக்கு கொடுக்காமலும், அறியாமையினால் உதாசீனப்படுத்தியுள்ளதுமே காரணமாகும். நம் முன்னோர்களை வழிபடாமல், பூஜிக்காமல் இருந்து வேறு எவ்வித கடவுள்களை வழிபடினும், ஹோமங்கள் மற்றும் பரிகாரங்கள் அல்லது அன்னதானங்கள் செய்யினும் அவை அனைத்தும் விழலுக்கு இறைத்த நீரேயாகும். இது தெரியாமல் அல்லல்பட்டு கொண்டுள்ளோர்க்கு, மேற்கண்ட புண்ய காலம், அவர்களின் வாழ்வில் மிக பெரிய மாற்றத்தை உண்டு பண்ண கூடிய ஒன்று என்றால் மிகையாகாது. இந்த 15  தினங்களில், நம் முன்னோர்கள் நம் வீடு தேடி நம்மை காண வருவர் என்கிறது, சாஸ்திரங்கள். கர்ணன் தன்னிடமுள்ள அனைத்தையும் கொடுத்து மிக பெரிய புண்ணியத்தை செய்து விட்டு மடிந்து, சொர்க்க லோகம் செல்கையில், அங்கே அனைத்து வித செல்வங்களும், சுக போகங்களும் அவருக்காக காத்திருந்தன. ஆனால், உணவு மட்டும் இல்லை. இதை கண்டு வருந்திய கர்ணன், எமதர்மரிடம் விசாரிக்கையில், நீர் அனைத்து வித தானமும் செய்தீர். ஆனால் முன்னோர்களுக்கு உரிய காரியங்களை செய்யாமல் விட்டதே இதற்க்கு காரணம் என்றார். பின்பு கர்ணன் மீண்டும் பூலோகம் அனுப்பப்பட்டு, பதினான்கு நாட்கள் முதியோர் மற்றும் வறியோர்க்கு அன்னதானம் செய்து நீர் வழங்கி மீண்டும் சொர்க்க லோகம் சென்று உணவருந்தினார். இந்த தினங்களே மேற்கண்ட புண்ய தினங்களாக மாறின. ஆகவே, இந்த தினங்களில் நம் முன்னோர்கள் வடிவாக கருதப்படுகின்ற காக்கைகளுக்கு, தினசரி புதிதாக வடித்த சாதத்துடன் சிறிது எள் கலந்து (வைக்கும் இடத்தை நீரால் கழுவி சுத்தம் செய்து ) வைத்து, சிறிது நீரும் வைத்து வர, அவர்களின் மனம் குளிரும். முடிந்தோர் அனைத்து தினங்களிலும் தர்ப்பணம் செய்யலாம். அல்லது முதல் தினம் மற்றும் அமாவாசை தினம் செய்யலாம். அதுவும், முடியவில்லை எனில், அமாவாசை அன்று, கண்டிப்பாக திதி தர்ப்பணம் செய்தே ஆக வேண்டும். உங்களின் கஷ்டங்களுக்கு விடிவு காலமாக வந்துள்ள இந்த புண்ய தினங்களை பயன்படுத்தி, முன்னோர்களை வணங்கி வழிபட்டு மேன்மையுறுங்கள். இந்த அனைத்து நாட்களிலும் பசுவிற்கு உணவளிப்பது, அமாவாசை தினம் அன்று வறியோர் மற்றும் முதியோருக்கு உணவளித்து உடைகள் வழங்குவது மிக சிறப்பான ஒன்று என்பதை நினைவில் கொள்வீர். இந்த அமாவாசை தினத்தில் செய்ய வேண்டிய, வேறு சில விஷயங்களை விரைவில் பதிகிறேன்.

மகாளய பட்சத்தின் பித்ரு பூஜை அளிக்கும் நன்மைகளை பற்றி ‘நைமி சாரண்யம்’ என்ற பரம பவித்திரமான பாட்டில் மகரிஷிகள் கூடி விவாதித்து அதன் பெறுமையை தங்கள் திருவாக்கினால் கூறியுள்ளனர். நமது முன்னோர்களான பித்ருக்களை நாம் தேடிச் செல்ல வேண்டியதில்லை. அவர்களே நம்மை தேடி வரும் இத்தருணத்தை இழக்கலாகாது. ஆதலால் இந்த 15 நாட்களும் உடலாலும் உள்ளத்தாலும் தூய்மையாக இருந்து பித்ருக்களை பூஜித்து வாருங்கள். அதன் பலன் கைமேல்!

முக்கிய குறிப்பு : இந்த தினங்கள் ஏதோ ஒரு குறிப்பிட்ட ஜாதியினருக்கு மட்டும் என நினைத்து விட வேண்டாம். சனாதன தர்மத்தின் வழிநடக்கும் அனைவரும் (ஹிந்துக்கள்) இதை கடைபிடிக்க வேண்டும். இந்நாட்களில், மது,மாது,மாமிசம் தவிர்த்தல் முக்கியம். மேலோகம் செல்ல முடியாது தவிக்கும் முன்னோர்களுக்கும் இந்த செய்கை முக்தியை கொடுக்கும். உங்களின் கர்ம வினைகளை அடியோடு அகற்றும்.


ஹரி ஓம் தத் சத்

ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857

Post a Comment

Previous Post Next Post

Get in touch!