Vamanan Seshadri tips




உணவு பழக்கத்திற்கும் உங்கள் வாழ்வின் தற்போதைய சூழ்நிலைக்கும் வெகு நெருங்கிய தொடர்பு உண்டு. ஜோதிடத்தில் ஆயுர்வேதத்தின் பங்கு அலாதியானது. தொடர்ந்து துன்பங்கள் மற்றும் தடைகள் சந்தித்து வருவோர் பலரை நான் ஆலோசனையின் பொழுது, உணவு பழக்கத்தை மாற்றி அமைக்க கூறி வெகு சீக்கிரத்தில் வெற்றி கண்டதுண்டு. டாக்டர்களால் தொடர்ந்து மாதா மாதம், சிறிய அறுவை சிகிச்சை செய்ய வைக்கப்பட்டு மிக நொடிந்த சூழ்நிலையில் இருந்த ஒருவரை, இரண்டே மாதங்களில் அவரின் உணவு பழக்கத்தை அவரின் தற்சமய கிரக சூழ்நிலையின் படி மாற்றி அமைக்கக்கூறி சமீபத்தில் அவர், சிறு சிறு அறுவைசிகிச்சை மற்றும் சக்கரை வியாதி பிரச்சனையில் இருந்து விடுபட்ட சம்பவமும் உண்டு. பொதுவாக எதெற்கெடுத்தாலும் டாக்டரைகளை நாடி வியாதிகளை,  ரசாயனங்களை உண்டு அதிகப்படுத்தி கொள்வதை விட, நம் உணவு பழக்கம் மற்றும் தூக்க பழக்கங்களை சரியான நபரின் வழிகாட்டலின்படி மாற்றி அமைத்து தீர்வு காணலாம். கடந்த  40 வருடங்களுக்கு முன்பு வரை ஆயுர்வேதம்,சித்தமருத்துவம்  அறிந்த பல வைத்தியர்கள் ஜோதிடத்திலும் தேர்ந்தவர்களாக இருந்து வந்தனர். ஆயுர்வேதம் என்றால் குணமாக வெகு நாட்களாகும் என்ற பொய்யை  பரப்பி, நாடி பிடித்து பார்க்கும் வைத்தியர்களை மக்கள் நாடி செல்லாமல் இருக்க வைத்து, தற்சமயம் நாடி சோதனைக்கு புதிய கருவியை கண்டுபிடித்து அதை பரப்பி வ்ருகின்றனர். என்னை பொறுத்தவரை எந்தவொரு வியாதிக்கும் மருத்துவரை அணுகும் முன், அவருக்கு எந்த வகை மருத்துவத்தால் குணமாகும், எவ்வகை உடல் என்பதையெல்லாம் தகுந்த ஜோதிட துணையின் மூலம் அறிந்து பின் செயல்படுவது, பெரும் பணம் வீணாவதை தடுக்கும் என்பதே.

தன் தந்தைக்குள்ள சிறிய பிரச்சனைக்காக சென்னையின் மிகப்பெரிய மருத்துவ மனையை நாடி பின் அவர்களால் அலைக்கழிக்கப்பட்டு, ஆறு நாட்களில் பதினைந்து லட்சங்கள் செலவழித்து பின்னரும் அவரை பலி கொடுக்கும் நிலையில் உள்ள ஒருவர், தொடர்ந்து எம் முறைகளை பின்பற்றுபவர், சூழ்நிலை கைதியாகி உணர்வுகளுக்கு ஆட்பட்டு அவசரப்பட்டதின் விளைவு இது. இரவு ஒன்பது  மணியளவில் மேற்கண்ட விஷயத்தை கூறி அவர் கதறி அழுதது இன்றும் மனதிலேயே நிற்கிறது. அதன் எதிரொலியே மேற்கண்ட பதிவு. அனைவரும் வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறையை பிரார்த்திக்கிறேன்.

ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்

Post a Comment

Previous Post Next Post

Get in touch!