முக்கியமாக கணவர்கள் மனைவியுடன் வாக்குவாதத்தில் மற்றும் தேவையற்ற சண்டையில் ஈடுபடுவதை  தவிர்க்க வேண்டிய காலகட்டம். காதலை தெரிவிக்க நினைப்போர் இக்காலகட்டத்தில் தெரிவித்தால் எதிர்மறையான பதில்கள் வரலாம். இக்காலகட்டத்தில் துவங்கும் உறவுகள், குறிப்பாக காதல்,பெண் நட்பு போன்றவை நிலைத்திருப்பதில்லை. பொதுவாக பெண்களிடத்தில், மனைவி, சகோதரிகளிடத்தில் ஜாக்கிரதையுடனும், மரியாதையுடனும் அன்புடனும் பழக வேண்டிய காலகட்டம். இக்காலத்தில் தொடங்கப்படும் பெண்களுக்கான தொழில்கள் , (புடவை நகை தொழில் போன்றவை) நிலைத்திருக்காது. ஆகவே கவனம் தேவை. இக்காலத்தில் அழகு ரீதியான சிகிச்சைகள், பெண்கள் புதிதாக விலை உயர்ந்த அழகு பொருட்கள் வாங்குதல் போன்றவை தவிர்க்கலாம். திருமணம், நிச்சயதார்த்தம், பெண் பார்த்தல், பொருத்தம் பார்த்தல் போன்றவற்றை கண்டிப்பாக தவிர்க்கவும். பெண்களை தவறாக நடத்தியோர், நடத்துவோருக்கு  அதற்குரிய பரிசை சுக்கிரன் அள்ளித்தருவார்.

பரிகாரம்??

மேற்கண்ட பதிவிலேயே கொடுத்துள்ளோம். பெண்களை, பெண்களிடத்தில் அன்புடன் இருப்பது,நடத்துவது தான் மிக சிறந்த பரிகாரம். இக்காலகட்டத்தில் நவராத்ரி வருவது மேலும் சிறப்பு. பெண்களுக்கு புடவை, நகைகள் அல்லது வெள்ளி பொருட்கள், இனிப்புகள் தானமளிப்பது சிறப்பு. இந்த நாற்பது சொச்ச நாட்களில் எப்பொழுதும் சாக்லேட்டுகள் கையோடு வைத்திருந்து கண் படும் சிறுமிகளுக்கு கொடுத்து வரலாம். வெள்ளிக்கிழமைகளில் மஹாலக்ஷ்மி தேவியை கோவிலின் கர்ப கிரக விளக்கிற்கு நெய் சேர்த்து வழிபட்டு வரலாம். மேற்கண்ட வக்ர நிலையினால் அவதியை சந்திப்போர், சுத்தமாக இனிப்பு உண்பதை இந்த கால கட்டத்தில் நிறுத்தி வைப்பது ஆக சிறந்த பரிகாரமாக அமையும்.

ஹரி ஓம் தத் சத்
ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857

Post a Comment

Previous Post Next Post

Get in touch!