சண்டியின் ஹோமமமானது மிகுந்த பொருட் செலவில் செய்யப்படும் ஒன்று என குறிப்பிட்டிருந்தோம். அது மட்டுமல்ல, மற்ற ஹோமங்களுக்கு வறட்டி, சமித்து போன்றவை உபயோகித்து அக்னியை எழ செய்வர் எனில் சண்டிக்கு, அவையெல்லாம் பத்தாது.  ஏகமாய் விறகுகளை கொண்டு அக்னியை பல அடிகள் வீரியமாய் எழ செய்தால் தான் அவ்விடம் சண்டி உதிப்பாள். அசுரர்களை, நம் எதிரிகளை அடியோடு அழிப்பதில் இவருக்கு இணை எவருமில்லை. இவ்விடம், நாம் ஒன்று சிந்திக்க வேண்டும். எதிரிகள் என்பது வெளியில் இருப்பவை மட்டுமல்ல. நம்மில் இருக்கும் தீய குணம், பொறாமை, பேராசை, உடல் நோவுகள், மன வியாதிகள் போன்றவையும் எதிரிகள் தான். ஆகையால் இவர் நம் உள்ளும் புறமும் இருக்கும் எதிரிகளை, எதிர்ப்புகளை அழிக்க வல்லவர். இதை ஒரு ஹோமம் என சொல்வதை காட்டிலும் வேள்வி என சொல்வதே பொருத்தமாக இருக்கும். சகல லோக வசியம், ராஜ வசியம் (இதனால் தான் இதை பல்வேறு அரசியல்வாதிகள் சென்று பயனடைகின்றனர்) ஆண்,பெண் வசியம், சத்ரு வசியம் என பல் வேறு தேவைகளுக்கு பல் வேறு சூட்சும மூலிகைகளை கொண்டு இந்த வேள்வியை செய்யலாம். ஏவல், பில்லி, செய்வினை, மாந்தி,பிரதேம் போன்ற அனைத்து சாபங்களையும் நீக்கவல்லவர் இந்த சண்டி. இலுப்பை பூவை வேள்வியில் இட்டால் சர்வ வசியமும், மஞ்சளை இட்டால் வசீகரணமும், நெய்யை வேள்வியில் இட தனப்ராப்தியும், தேங்காயை வேள்வியில் இட்டு வேண்ட பதவி உயர்வும் ஏற்படும். பூசணிக்காயை இட எதிரிக்கு சர்வ நாசம் ஏற்படும். மேலும், வரும் பதிவுகளில் சண்டியின் வீரியத்தை பற்றி அலசுவோம்.

முக்கிய குறிப்பு : வரும் ஜனவரி ஒன்றாம் நாள் நடக்க இருக்கும் குபேர லட்சுமி பூஜைக்கு மலை வாழைப்பழங்கள் சேர்த்தால் தனப்ராப்தி உண்டாகும். கலந்து கொள்பவர்கள் விருப்பமிருப்பின் கொண்டு வரலாம்.

ஹரி ஓம் தத் சத் 

Post a Comment

Previous Post Next Post

Get in touch!