Saturday, 22 September 2018

லக்ஷ்மிக்கு உகந்த 'தன ஆகர்ஷண ஊதுவத்திகள்"


அனைத்தையும் அள்ளித்தரும் அனந்த சதுர்தசி 23.9.18இந்நாளில் தான் விநாயகர் சதுர்த்தியன்று வைத்த பிள்ளையார்களை  கடலில் கரைப்பர் வடநாட்டினர். மஹாவிஷ்ணுவிற்கு மிகவும் உகந்த இன்றைய நாளில், விஷ்ணுவை குறிப்பாக அனந்த சயன பெருமாளை வழிபடுவது அனைத்து நன்மைகளையும்  சேர்க்கும். குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள்,தம்பதியர் மேற்கண்ட பெருமாளை இன்றைய தினம் வணங்கி வழிபட, குறைகள் நீங்கும்.

ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.youtube.com/amanushyam
  

#குருபெயர்ச்சி 2018 கடகம் சிம்மம் கன்னிகடகம் : சுய வெளிப்பாடு அதிகரிக்கும் நேரமிது. அனைவரிடமும் சுயநலமின்றி பழகும், உதவும் மனப்பான்மை மேலோங்கும். தைரியம் அதிகரிக்கும். புதிய உறவுகள் மற்றும் உறவினர்களுடன் அன்னியோன்னியம் ஏற்படும். குழந்தைகளால் பெருமை தேடி வரும். சுயத்தை அறியும் , உணரும் காலமிது. பன்னீர் ரோஜாவினை கொண்டு முருகரை வியாழக்கிழமைகளில் அர்ச்சித்து வழிபடவும்.

சிம்மம் :வீட்டை புதுப்பித்தல், புதிய வீட்டிற்கு குடிபுகுதல், வீட்டில் உள்ளோருடன் அன்னியோன்னியம் போன்றவை நிகழ கூடிய காலமிது. இக்காலத்தில் செய்யப்படும்  சொத்துக்களில் முதலீடு , நன்கு பலனளிக்கும். வீட்டிற்கு செல்லவே பிடிக்கவில்லை என கூறுவோர், இக்காலங்களில் அந்நிலை மாறுவதை கண்கூடாக காணலாம். தன்நம்பிக்கை அதிகரிக்கும் காலகட்டம். தன்னை உணர்ந்து இக்காலத்தை உபயோகிக்க நன்மைகளை பன்மடங்காக்கலாம். அரச மரம் நடுதல், அரசமரத்திற்கு நீர் ஊற்றி வருதல் இக்காலங்களில் நன்மைகளை அதிகரிக்க செய்யும்.

கன்னி : பல இடங்களில் இருந்தும் புதிய நட்புகள் மற்றும் தொடர்புகள் ஏற்படக்கூடிய காலகட்டம். கல்வி மற்றும் உயர்கல்வி, புதிய பயிற்சிகளை கற்றுணர உகந்த நேரம். சகோதர சகோதரிகளால் நன்மைகள், பண உதவி மற்றும் வேறு வகை நன்மைகள் வந்து சேரும். வெளியுலகை பற்றிய உங்களின் பார்வையும் புரிதலும் விரிவடையும். எதிர்கால திட்டங்களை தீட்ட இக்காலகட்டம்  உதவும். அளவுக்கு மீறிய செயல்களை அவசரப்பட்டு ஏற்றுக்கொண்டால் முடிக்க பாடுபட வேண்டிவரும். பறவைகளுக்கு ஊறவைத்த அத்திப்பழத்தை நன்கு இடித்து,  தினசரி இட்டு வர, வாழ்கை வளமாகும்.

ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.youtube.com/amanushyam 

Friday, 21 September 2018

அற்புதம் நல்கும் சனி திரயோதசி (பிரதோஷம்) 22.9.18இவ்வருடத்தில் கடைசி சனி பிரதோஷம் புரட்டாசி முதல் சனிக்கிழமையில் வருகின்றது. ஏழரை சனி, கண்டக சனி, அஷ்டம சனி நடப்பில் உள்ளோருக்கு இந்த நாள் ஒரு வரப்பிரசாதமாகும். சனீஸ்வரருக்கு மாலை சூரிய அஸ்தமனத்திற்கு பின் நல்லெண்ணெய் விளக்கேற்றி வழிபடுவது மிக பெரிய நன்மையை சேர்க்கும். இந்நாளில் காக்கை மற்றும் எருமைகளுக்கு, கால் இல்லாத முடவோருக்கு உணவிடுவதும் அதீத பலன் தரும். மழை காலம் நெருங்கி வருவதால், கருப்பு குடை, கருப்பு கம்பளி, கருப்பு செருப்பு போன்றவற்றை வசதிக்கு ஏற்றார் போல் கால்கள் இல்லாதோர், கண்கள் இல்லாதோருக்கு, அசுத்தம் நிறைந்த பகுதியில் வசிப்போருக்கு கொடுத்து உதவலாம். இந்நாளில் வீட்டு உபயோகத்திற்கு எண்ணெய் வாங்குவதையும், தோல் பொருட்கள் உபயோகம் மற்றும் அசைவம் அனைத்தையும் தவிர்த்தால் வாழ்வாங்கு வாழலாம். முக்கியமாக பேஷன் என்ற பெயரில் கிழிந்த உடைகளை அணிவோர், அதை இந்நாளில் தவிர்க்கவும். மேற்சொன்ன ஏழரை, கண்டக மற்றும் அஷ்டம சனி நடப்பில் உள்ளோர் மற்றும் சனி திசாபுத்தியில் இருப்போர் இந்நாளில் கருப்பு மற்றும் நீல நிறம் அணிவதை தவிர்த்தல் நலம் சேர்க்கும்.

ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.youtube.com/amanushyam

குரு பெயர்ச்சி மேஷம் ரிஷபம் மிதுனம் 2018

முக்கிய குறிப்பு: ராசி பலன், பெயர்ச்சி பலன்களில் எமக்கு அவ்வளவு பெரிய நாட்டமில்லை எனினும், பலர் தொடர்ந்து பல வருடங்களாக கேட்டு வருவதால், பொது பலன்களை கொடுத்துள்ளோம். ஒவ்வொருவர் ஜெனன கால நிலைப்படி பலன்கள் வேறுபடும் என்பதை நினைவில் கொள்ளவும்.


மேஷம் : கேட்ட இடங்களில் கடன் கிடைக்கக்கூடிய காலம் என்பதால் கவனம் தேவை. சில நேரங்களில் வாங்கும் கடன்கள் திரும்ப செலுத்தமுடியாத நிலையில் கொண்டு சேர்க்கும். உடல் நலனில் கவனம் தேவை. சிறு கோளாறுகள் வரினும், தகுந்த சிகிச்சை மேற்கொள்ளவும். இறை வழிபாடு, மந்திர தந்திர விஷயங்களை மனம் நாடும். மன உளைச்சல்கள் தொடர்ந்து ஏற்பட வாய்ப்புள்ளதால், மனதிற்கு உகந்த பொழுதுபோக்கு விஷயங்களில் கவனம் செலுத்தவும். மயிலோடு இருக்கும் முருகரை தினசரி வழிபட்டு வரவும்.

ரிஷபம் :  கூட்டு முயற்சி, கூட்டு தொழில் போன்றவைகளுக்கு உகந்த காலகட்டம். தம்பதியினருக்குள் அன்னியோன்னியம் மிகும். தினசரி சிறிது மஞ்சளிட்டு குளித்து வரவும் -இருபாலினரும். வழக்குகள் வெற்றி தரும்.

மிதுனம் : உடல் ரீதியான பிரச்சனைகள் அனைத்தில் இருந்தும் விடுபடுவீர்கள். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிட்டும். புதிய வேலைவாய்ப்பு, தொழில் அமையும். எந்தவொரு  விஷயத்திலும் அதீத நாட்டம் தவிர்க்கப்பட வேண்டும். யானைகளை காணும் சமயம் அவைகளுக்கு உணவிட்டு வரவும். ஆசீர்வாதம் என்ற பெயரில் தும்பிக்கையை தலையில் வைக்க சொல்வது தவிர்க்கப்படவேண்டும்.

மற்ற ராசியினருக்கு அடுத்தபதிவில்..

Thursday, 20 September 2018

எதிர்மறை சக்திகளை விரட்ட வேண்டுமா ?

வீட்டின் ஒவ்வொரு கழிவறையிலும் ஒரு கண்ணாடி
கிண்ணத்தில் கல் உப்பினை வைத்திருந்து, வாரம் ஒரு முறை மாற்றி வர, எதிர்மறை சக்திகள் பறந்தோடும். குறிப்பாக, தவறான திசையில் கட்டப்பட்டுள்ள கழிவறைகளுக்கு இந்த பரிகாரம் ஒரு வரப்பிரசாதம்.

குறிப்பு: மாற்றும் சமயம் பழையதை கழிவறைக்குள் கொட்டி விடவும். 

ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.youtube.com/amanushyam

ஸ்வர்ண வசீகரம் செய்யும் குளியல் சோப்


ஜன வசீகரத்திற்கு 'மோஹினி' குளியல் சோப்


தன வசீகரத்தை ஏற்படுத்தும் 'தனதா' குளியல் சோப்


தன ஜன ஸ்வர்ண வசீகரம்மூலிகைகளுக்கு என்றுமே பல்வேறு வகையான சக்திகள் உண்டு என்பதை அனைவரும் அறிவீர்கள். சில வருடங்களாக அப்படிப்பட்ட உயர்தர மூலிகைகளை கொண்டு நாம் கொடுத்து வரும் தனவஸ்யம் செய்யும் ஊதுபத்திகள் மிக வெற்றிகரமாக  பலரால் தொடர்ந்து உபயோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்சமயம் ரசாயனம் அல்லாது கைகளினாலே உயர்தரமாக தயாரிக்கப்பட்டுள்ளது  மேற்கண்ட மூன்று வகையான குளியல் சோப்புகள். இவை அரோமாதெரபி மற்றும் மூலிகை வசீகரம் வகைகளை சாரும். விலை ரூ.100 /- கைகளினால் தயாரிக்கப்பட்டுள்ளதால் மிக குறைந்த எண்ணங்களே உள்ளன. இவற்றிற்கு தமிழ்நாடு முழுதும் விற்பனையாளர்களும் வரவேற்கப்படுகின்றனர். வீட்டிலேயே இருந்து விற்பனை செய்ய விருப்பப்படுவோரும் அணுகவும்.

+919840130156 / +918754402857

துரதிர்ஷ்டம் தொடர்கிறதா உங்கள் வீட்டை ??வீடு பெருக்கும் துடைப்பத்தை நேராக அல்லாது தலை கீழாக மறைவான இடத்தில் வைத்து பாருங்கள், மாற்றம்  தெரியும். மேலும் அவற்றை எக்காரணம் கொண்டும் தாண்டுவதோ அல்லது கால்களால் மிதிப்பதையோ தவிர்க்கவும்.

ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.youtube.com/amanushyam

Wednesday, 19 September 2018

குரு பெயர்ச்சி எவரெவருக்கு நன்மை தரும் ??வருகின்ற குரு பெயர்ச்சி மேஷம், மிதுனம், கன்னி, தனுசு மற்றும் கும்ப ராசியினருக்கு சுப பலன்கள் குறைவாகவும், விருச்சிகம், சிம்ம ராசியினருக்கு மத்திம சுப பலனும், மற்ற ரிஷபம், கடகம், மகரம் மற்றும் மீன ராசியினருக்கு சுப பலன்களும் கொடுக்கக்கூடிய நிலையில் அமைந்திருக்கிறது. பின் மாலை நேரத்தில் பெயர்ச்சி நடக்க இருப்பதால், ஹோமமாக அல்லாமல், விசேஷ குரு பெயர்ச்சி பூஜையாக அன்றைய தினத்தில் நடத்த எண்ணம். இந்த ஓராண்டுகாலத்தில் ஒவ்வொரு ராசியினருக்கு என்னென்ன செய்யலாம், எவற்றை தவிர்க்க வேண்டும் போன்ற  பலன்களை கிரந்தங்களில் கூறியுள்ளபடி வரும் பதிவுகளில் கொடுக்க இருக்கின்றோம். அதற்கு முன் ஒரு விளக்கம். பொதுவாக குருவானவர் தன் பெயர்ச்சிக்கு ஒரு மாதம் முன்னரே, அதற்குரிய பலனை கொடுக்க தொடங்கி விடுவார் என்கின்றன பண்டைய கிரந்தங்கள். அதை உபயோகப்படுத்தி கொள்வது போல் வரும் வெள்ளி, செப்டம்பர் 21  நாள் வாமன ஜெயந்தி வருகின்றது. கிரகங்களில் குருவிற்கு உரியவராக விஷ்ணு அவதாரமான வாமனர் அவதாரம் உள்ளது. அன்றைய நாளில் மாலை ஆறு மணிக்குள் வாமனரின் படத்தை ஒரு வாழை இலையில் வைத்து நெய் தீபம் ஏற்றி, வாமன காயத்ரி பதினொன்று முறை கூறி, மஞ்சள் வாழைப்பழம் நிவேதனம் செய்து படத்தையும் தீபத்தையும் சேர்த்து பன்னிரண்டு முறை பிரதட்சிணம் செய்து வழிபடவும்.  அடுத்து வரும் ஒரு வருடம் சுப பலன்களை அதிகரித்து கொள்ள இது நிச்சயம் உதவும்.

வாமன காயத்ரி மந்திரம்

ஓம் தவ ரூபாய வித்மஹே
ஸ்ருஷ்டி கர்த்தாய தீமஹி
தந்நோ வாமன ப்ரசோதயாத் :


ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.youtube.com/amanushyam

Tuesday, 18 September 2018

ஐம்பூதங்களின் துணையால் அனைத்தையும் சாதிக்கும் முறை தாந்த்ரீகம், ஜோதிடம் மற்றும் வேறு முறைகளில் பல் வேறு பரிகார முறைகள் கொடுத்து வந்திருப்பினும், வீடு மனை விற்க, குடும்ப சொத்து தகராறு, காதல் பிரச்சனைகள், கடன் தொழில் முடக்கம் மற்றும் தீர்க்க முடியாத வழி தெரியாத பல பிரச்சனைகளுக்கு  மேல் குறிப்பிட்டுள்ள ஐம்பூதங்களின் சக்தி கொண்டு நாம் கொடுத்து வரும் முறைகள் உடனடி வெற்றியை கொடுத்து வந்துள்ளன. நாம் கொடுக்கும் முறையை சரிவர பின்பற்றி வந்தால் நூற்றிற்கு 95 சதவீதம் வெற்றி நிச்சயம்.

நிலம் : நிலத்தில் புதைத்து வைக்க கூடிய யந்திரம் வழங்கப்படும்.
காற்று : காற்றில் ஆட  விடும் படியான யந்திரம்
நீர் : நீருக்குள் வைத்திருக்கும் யந்திரம்
ஆகாயம் : மேலே நான்கு மூலைகளிலும் இருக்கும் படியான யந்திரங்கள்
நெருப்பு : தினசரி நெருப்பில் சுட வைக்க வேண்டிய யந்திரம்.

தொலைந்தவரை மீட்க, வியாபார மற்றும் தொழிலில் வெற்றி, நிரந்தர லாபம், எதிரிகளை வெல்வது, கணவன் மனைவி பிரச்சனைகள் போன்ற அனைத்தையும் சாதிக்க வல்லது இம்முறை. ஐம்பூதங்களின் சக்தி அளவிட முடியாதது.குறைந்த பட்சம் ஏழு வருடங்கள் வரை இது பலன் கொடுக்கும்.

ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.youtube.com/amanushyam

ரத்ன சாஸ்திரம் எனும் அற்புத கலை

ரத்னங்களில் பல வகைகள் உண்டு. அதை அணிவதற்கும் பல விதிகள் உள்ளன. அவற்றைப்பற்றியும் அவைகள் உருவான விதங்களைப்பற்றியும் அவைகள் அளிக்கும் அற்புத பலன்கள் பற்றியும் வரும் பதிவுகளில் வீடியோக்களாக கொடுக்க எண்ணம்.  உடனடி பலனளிக்கும் இவைகளை, பலர்  தவறான விரல்களில் அல்லது தவறான உலோகங்களில் அணிய பரிசீலித்து, பெரும் துன்பங்களை அனுபவிக்க வைத்து விடுகின்றனர். உதாரணத்திற்கு நீலம் எனப்படும் சனிக்குரிய கல்லை எக்காரணம் கொண்டும் தங்கத்தில் அணிவது கூடாது. சமூகத்தில் நன்கு அறியப்படும் வல்லுனர்களே இது போன்ற தவறை அறியாமையால் செய்து விடுகின்றனர்.சிலர் ராசிக்கு கற்கள் என்கின்றனர். அது சுத்த அபத்தம். ராசிக்கு கற்கள் அணிவது என்பது சாஸ்திரப்படியான வழக்கமே இல்லை, அதுமட்டுமின்றி அவைகள் தீமைகளையும் கொண்டு சேர்க்கலாம்இது போன்ற அபத்தங்களையெல்லாம் சிறிதளவாவது தடுக்க பதிவுகள் உதவினால் மகிழ்ச்சி. 
ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857 
www.youtube.com/amanushyam  

Monday, 17 September 2018

குரு பெயர்ச்சி நெருங்கி வருகிறது..குருவினால் ஏற்படும் குறைகளை தடைகளை உடனடியா நீக்க தினசரி ஒரு துளி குங்குமப்பூவை நாக்கில் தடவவும். நாபி குழியில் தடவுவதும்  பலன் தரும். 

ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857 
www.youtube.com/amanushyam  


Sunday, 16 September 2018

உங்கள் வாழ்வை வளமாக்க உணவை மாற்றுங்கள்

உணவு பழக்கத்திற்கும் உங்கள் வாழ்வின் தற்போதைய சூழ்நிலைக்கும் வெகு நெருங்கிய தொடர்பு உண்டு. ஜோதிடத்தில் ஆயுர்வேதத்தின் பங்கு அலாதியானது. தொடர்ந்து துன்பங்கள் மற்றும் தடைகள் சந்தித்து வருவோர் பலரை நான் ஆலோசனையின் பொழுது, உணவு பழக்கத்தை மாற்றி அமைக்க கூறி வெகு சீக்கிரத்தில் வெற்றி கண்டதுண்டு. டாக்டர்களால் தொடர்ந்து மாதா மாதம், சிறிய அறுவை சிகிச்சை செய்ய வைக்கப்பட்டு மிக நொடிந்த சூழ்நிலையில் இருந்த ஒருவரை, இரண்டே மாதங்களில் அவரின் உணவு பழக்கத்தை அவரின் தற்சமய கிரக சூழ்நிலையின் படி மாற்றி அமைக்கக்கூறி சமீபத்தில் அவர், சிறு சிறு அறுவைசிகிச்சை மற்றும் சக்கரை வியாதி பிரச்சனையில் இருந்து விடுபட்ட சம்பவமும் உண்டு. பொதுவாக எதெற்கெடுத்தாலும் டாக்டரைகளை நாடி வியாதிகளை,  ரசாயனங்களை உண்டு அதிகப்படுத்தி கொள்வதை விட, நம் உணவு பழக்கம் மற்றும் தூக்க பழக்கங்களை சரியான நபரின் வழிகாட்டலின்படி மாற்றி அமைத்து தீர்வு காணலாம். கடந்த  40 வருடங்களுக்கு முன்பு வரை ஆயுர்வேதம்,சித்தமருத்துவம்  அறிந்த பல வைத்தியர்கள் ஜோதிடத்திலும் தேர்ந்தவர்களாக இருந்து வந்தனர். ஆயுர்வேதம் என்றால் குணமாக வெகு நாட்களாகும் என்ற பொய்யை  பரப்பி, நாடி பிடித்து பார்க்கும் வைத்தியர்களை மக்கள் நாடி செல்லாமல் இருக்க வைத்து, தற்சமயம் நாடி சோதனைக்கு புதிய கருவியை கண்டுபிடித்து அதை பரப்பி வ்ருகின்றனர். என்னை பொறுத்தவரை எந்தவொரு வியாதிக்கும் மருத்துவரை அணுகும் முன், அவருக்கு எந்த வகை மருத்துவத்தால் குணமாகும், எவ்வகை உடல் என்பதையெல்லாம் தகுந்த ஜோதிட துணையின் மூலம் அறிந்து பின் செயல்படுவது, பெரும் பணம் வீணாவதை தடுக்கும் என்பதே.

தன் தந்தைக்குள்ள சிறிய பிரச்சனைக்காக சென்னையின் மிகப்பெரிய மருத்துவ மனையை நாடி பின் அவர்களால் அலைக்கழிக்கப்பட்டு, ஆறு நாட்களில் பதினைந்து லட்சங்கள் செலவழித்து பின்னரும் அவரை பலி கொடுக்கும் நிலையில் உள்ள ஒருவர், தொடர்ந்து எம் முறைகளை பின்பற்றுபவர், சூழ்நிலை கைதியாகி உணர்வுகளுக்கு ஆட்பட்டு அவசரப்பட்டதின் விளைவு இது. இரவு ஒன்பது  மணியளவில் மேற்கண்ட விஷயத்தை கூறி அவர் கதறி அழுதது இன்றும் மனதிலேயே நிற்கிறது. அதன் எதிரொலியே மேற்கண்ட பதிவு. அனைவரும் வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறையை பிரார்த்திக்கிறேன்.

ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857 
www.youtube.com/amanushyam