ஆபத்தில் கொண்டு சேர்க்கும் ராசி கற்களும் தசா புத்தி கற்களும்


எவ்வித கிரக தோஷங்களானாலும் அதை நீக்கும் சக்தியில் முதன்மையானவை இரத்தின கற்கள் என்றால் இரண்டாம் தன்மையை கொண்டவை வண்ணங்கள். எம்மிடம் ஆலோசனைக்கு வருவோரில்,பலருக்கும் இதை சோதித்து வெற்றி கண்டதுண்டு. உதாரணத்திற்கு திருமண தடை இருந்து, பல பரிகாரம் செய்தும் பலனில்லாமல் வருடங்கள் வீணாகி பிறகு நாம் பரிந்துரைத்த கற்களை அணிந்து இரண்டு மாதங்களுக்குள் திருமணம் நிச்சயம் ஆன அன்பர்கள் உண்டு. கற்கள் அணிய முடியாத நிலையில் உள்ளோர் அதற்கேற்றவாறு வண்ணங்களை உபயோகித்தும் பயன் பெற்றுள்ளனர். முதலாவது உடனடி பலன் தரும் என்றால் இரண்டாவது ஒரு சில மாதங்கள் பிடிக்கும். வண்ணங்களை பல விதத்தில் உபயோகிக்க அறிவுறுத்துவது வழக்கம். இவை நம் முன்னோர்கள் சூட்சுமமாக உபயோகித்து வந்த முறைகள். சமீபத்தில் முதலீடு இல்லாமல் தொழில் நஷ்டத்தில் இருந்து 'எதை தின்னால் பித்தம் தெளியும்' என்று இருந்து வந்த ஒருவருக்கு,வண்ணங்களை அறிவுறுத்தி அதில் நீர் அருந்தும் படியும்,வேறு பலவிதத்திலும் உபயோகிக்க கூறினோம். மிக எளிதான பரிகாரம் என்பதால் அரை மனதுடன் சென்றாலும்,கூறியபடி உபயோகித்து வந்ததில் நான்கு மாதத்தில் அவருக்கு, அருமையான பங்கு தாரர் அமைந்து வியாபாரம் மீண்டும் சூடு பிடித்துள்ளது. அதே சமயம் ராசிக்கு கற்கள், நடப்பு
திசைக்கு புத்திக்கு கற்கள் என சிலர் கூறிவருகின்றனர். இது ஆலோசனைக்கு வருவோரை மிக ஆபத்தான நிலைக்கு கொண்டு சேர்த்து விடும் ஒன்றாகும். பொதுப்படையாக இவ்வித பரிகாரங்களை கூறவே கூடாது. கற்களை பொறுத்தவரை நன்கு ஆராய்ந்து அவரவர் ஜாதகப்படி மட்டுமே கொடுக்க வேண்டும். அதற்கு இதில் நல்ல நேரிடை அனுபவமும் தெய்வ அருளும் நிறையவே வேண்டும்.
தாந்த்ரீக ஜோதிட ஸ்ரீ. வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிகார ரக்க்ஷா சென்டர்
9840130156
www.youtube.com/amanushyam
www.yantramantratantra.com

Post a comment

0 Comments