Wednesday, 8 January 2020

தூங்கும் முன் கேட்க வேண்டிய ராத்ரி சூக்தம்#rathrisuktham#vamananseshadri...

இந்தக் கடவுள்களை வீட்டில் வைத்து வழிபடலாமா? #vamananseshadri#vamanansesh...

வசிய சக்தி பெற இந்த மந்திரத்தை கூறி வாருங்கள்#வசியம்#vasiyam

பாக்ய சூக்த ஹோமம் 12.1.2020

அனைத்து வித பாக்கியங்கள்,அதிர்ஷ்டம் போன்றவற்றை தர கூடியது பாக்ய சூக்த ஹோமம். வருகிற ஞாயிற்று கிழமை (12.1.2020) மதியம் மூன்று மணி முதல் துவங்கும் இந்த ஹோமத்தில் கலந்து கொள்ள எவ்வித கட்டணமும் இல்லை. சங்கல்பம் செய்து கொள்ள கட்டணம் உண்டு. அதிர்ஷ்டத்தை அதிகரிக்க கூடிய ஒன்று என ரிக் வேதத்தில் குறிப்பிட்டுள்ள இதை தினசரி கூறி வருவது பல நன்மைகளை அள்ளி தரும். அதிலும் இதை ஹோமமாக செய்வது அதீத நன்மைகளை உடனுக்குடன் ஏற்படுத்தும். பலர் வாழ்வில் உடனடி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது இந்த ஹோமம். சங்கல்ப பிரசாதமாக மஹாலக்ஷ்மி ஸ்வர்ண காசு வழங்கப்பட உள்ளது. அனைவரும் இதில் கலந்து கொண்டு பிரார்த்தித்து நலம் பெறலாம்.
கலந்து கொள்ளும் அனைவருக்கும் ஹோமம் முடிந்த பின் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேல் விவரங்கள் பெற : 9840130156

Thursday, 5 December 2019

அனைத்து துன்பங்களையும் நீக்கும் கார்த்திகை திருவாதிரை ருத்ர ஹோமம் 13.12.19

கார்த்திகை மாத திருவாதிரை ஒரு அற்புதமான நாளாகும்-ஒரு வருடம் முழுதும் ருத்ர ஹோமம் செய்த பலன் இந்த ஒரு நாளில் செய்வதால் கிட்டும். அத்தகைய மகத்துவம் வாய்ந்த நாளில், நம் அன்பர்களுக்காக ருத்ர ஹோமம் சென்னை மேற்கு மாம்பலத்தில் செய்யப்பட உள்ளது. 13.12.19 அன்று மாலை 4 மணிக்கு துவங்கும். நம் அனைத்து வித துக்கங்களையும்,துன்பங்களையும் இந்நாளில் செய்யப்படும் ருத்ர ஹோமம் கலைந்துவிடும். இதில் கலந்து கொள்ள, பிரசாதம் பெற்று கொள்ள,நிவேதன அன்னம் அருந்த எவ்வித கட்டணமுமில்லை. பிரத்யேக பிரச்சனைகளுக்காக சங்கல்பம் செய்து கொள்ள விரும்புவோருக்கு மட்டும் சங்கல்ப கட்டணம் பொருந்தும். இடம்,சங்கல்ப கட்டண விவரங்கள் அடுத்து வரும் பதிவுகளில்..

www.facebook.com/yantramantratantra
www.facebook.com/astrotantric

வேலை தொழில் உயர்வு வியாபார லாபம் அதிகரிக்க வாழ்வு உயர இதை கேளுங்கள்#Vama...

வாராஹி வீர்ய மந்திரம்-எத்தனை முறை கூறினால் பலன்#வாராஹி#வராஹி#varahi#vama...

Sunday, 1 December 2019

இது வரை எங்கும் கிடைக்காத ரகசியங்கள்


1.அடுத்தவர் நம் சொல் பேச்சு கேட்க 
2.எவ்வித எதிர்ப்பையும் வெற்றி கொள்ள 
3. நாம் நினைத்தவர் நம்மை தேடி வர 
4. ஒவ்வொரு தினத்தையும் செய்யும் ஒவ்வொரு செயலையும் வெற்றியாக்க 
5. அனைவர் முன்பும் வசீகரமாய் திகழ 
6. எவ்வித உடல் வலியையும் உடனே போக்க 
7. வியாதிகள் அற்ற வாழ்வு வாழ 
8. வெற்றி தோல்வியை முன்னரே கணிக்க-
மேலும் முழுக்க முழுக்க வெற்றியாளராய் மாற-

ரகசியமாய் வைக்கப்பட்டுள்ள *சர சாஸ்திரம்*  எனும் மூச்சு கலை-வாட்சாப் பயிற்சி 
05.12.19 முதல் 
கட்டணம் ரூ.1500/-
02.12.19 வரை பதிவோருக்கு மட்டும் ரூ.999/-

www.facebook.com/yantramantratantra
www.facebook.com/astrotantric

Thursday, 28 November 2019

தகாத காதலால் சீரழியும் பிள்ளைகள்


பருவ வயதில் காதலில் சிக்கி கொண்டு வீட்டில் முரண் பிடிக்கும் பல பிள்ளைகளின் பெற்றோர் எம்மிடம் வருவதுண்டு. இதை எப்படியாவது பிரிக்க வேண்டும் என கூறினாலும் அது சாதி மதம் ரீதியான கௌரவம் காரணமா அல்லது வேறு ஏதேனும் விஷயமா எனத்தெரிந்து பருவ வயதில் தகுதியில்லா நபருடன் காதல் அல்லது காதல் உடல் சார்ந்ததா என்பதை தெரிந்த பின்னரே அவர்களுக்கு பரிகாரங்கள் கொடுக்கப்படும். அன்பு ரீதியானதா அல்லது வேறு காரணமா என்பதை எளிதில் தெரிந்து கொள்ள முடியும். அப்படி வேறு காரணம் மற்றும் திருமணம் நடந்தாலும் முறிவு என தெரிந்தால் அதற்கு உபாயம் கொடுக்கப்படும். இதில் பல சவால்கள் உள்ளன. பிள்ளைகள், பெற்றோர் எது சொன்னாலும் கேட்காததாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு பெற்றோர் சமீபத்தில் சந்திக்க நேர்ந்தது. தங்கள் பெண் மிகுந்த பிடிவாதமாக உள்ளதாகவும் எது கொடுத்தாலும் அணிய மாட்டாள்,எது சொன்னாலும் பிடிவாதமாக குறிப்பிட்ட பையனை தான் திருமணம் செய்வேன் என்றும் அதுவும் பெற்றோரே செய்து வைக்க வேண்டும் என்றும் மிகுந்த அடம். பெற்றோரும் பிள்ளையை பற்றி தனியார் துப்பறியும் நிறுவனத்திடம் கொடுத்து விசாரித்ததில், பையனுக்கு இல்லாத கெட்ட பழக்கங்களே இல்லை என தெரிய வந்துள்ளது. என்ன செய்வது என விழி பிதுங்கி நின்றோரிடம், குறிப்பிட்ட வண்ணங்களை பெண்ணுக்கு ஆடையாக கொடுத்து அணியச்சொல்லுங்கள், மேலும் தலையணை உறை மற்றும் போர்வை வண்ணங்களை குறிப்பிட்ட கலருக்கு மாற்றவும் கூறி, அவர் நீர் அருந்த குறிப்பிட்ட வண்ண பாட்டிலில் நீர் நிரப்பி காலை சூரியனில் சிறிது நேரம் வைத்து அதன் மூலம் குடிக்க சொல்லுங்கள், ஏனெனில் இவை எல்லாம் எவ்வித சந்தேகமும் ஏற்படுத்தாது,இயல்பாக இருக்கும் என்றோம். பெண்ணின் தனி அறையின் வண்ணத்தையும் மாற்றி அமைக்க அறிவுறுத்தினோம். பொறுமை மிக அவசியம், பெண்ணுக்கு ஏதேனும் சமாதானம் கூறி காலம் தாழ்த்துங்கள், எதிர்க்காதீர்கள்,அவ்வப்பொழுது இயல்பாக பையனின் தன்மையை கூறிவருங்கள் என்றோம். சரியாக மூன்று மாதம் மூன்றாவது நாளில்-இன்று , பெற்றோரிடமிருந்து தகவல்- பெண், அந்த பையனின் தன்மையை புரிந்து கொண்டாள்-எங்களுக்கு அளவில்லாத மகிழ்ச்சி என்று. ஜோதிடத்தை பொறுத்தவரை வண்ணங்கள் மிக அருமையாக சில விஷயங்களை, மனதை,செய்யும் செயலை மாற்றி, அமைக்க கூடியது. சூட்சுமமாக கணித்து உரிய வண்ணத்தை உரியபடி உபயோகித்தால் வெற்றி நிச்சயம். இது எவ்வித பிரச்சனைகளுக்கும் பொருந்தும்.
ஹரி ஓம் தத் சத்
தாந்த்ரீக ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com
www.youtube.com/amanushyam

சிவயநம-பஞ்சாட்சர பிரயோக மகிமை#Vamananseshadri#பஞ்சாட்சரம்#நமசிவய#சிவயவசி

Wednesday, 27 November 2019

தீராத தடைகள் முடைகள் தீர இதை கேட்டு வாருங்கள்#Astrology#jothidam#கணபதி#V...

தகாத காதலால் சீரழியும் பிள்ளைகள்


பருவ வயதில் காதலில் சிக்கி கொண்டு வீட்டில் முரண் பிடிக்கும் பல பிள்ளைகளின் பெற்றோர் எம்மிடம் வருவதுண்டு. இதை எப்படியாவது பிரிக்க வேண்டும் என கூறினாலும் அது சாதி மதம் ரீதியான கௌரவம் காரணமா அல்லது வேறு ஏதேனும் விஷயமா எனத்தெரிந்து பருவ வயதில் தகுதியில்லா நபருடன் காதல் அல்லது காதல் உடல் சார்ந்ததா என்பதை தெரிந்த பின்னரே அவர்களுக்கு பரிகாரங்கள் கொடுக்கப்படும். அன்பு ரீதியானதா அல்லது வேறு காரணமா என்பதை எளிதில் தெரிந்து கொள்ள முடியும். அப்படி வேறு காரணம் மற்றும் திருமணம் நடந்தாலும் முறிவு என தெரிந்தால் அதற்கு உபாயம் கொடுக்கப்படும். இதில் பல சவால்கள் உள்ளன. பிள்ளைகள், பெற்றோர் எது சொன்னாலும் கேட்காததாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு பெற்றோர் சமீபத்தில் சந்திக்க நேர்ந்தது. தங்கள் பெண் மிகுந்த பிடிவாதமாக உள்ளதாகவும் எது கொடுத்தாலும் அணிய மாட்டாள்,எது சொன்னாலும் பிடிவாதமாக குறிப்பிட்ட பையனை தான் திருமணம் செய்வேன் என்றும் அதுவும் பெற்றோரே செய்து வைக்க வேண்டும் என்றும் மிகுந்த அடம். பெற்றோரும் பிள்ளையை பற்றி தனியார் துப்பறியும் நிறுவனத்திடம் கொடுத்து விசாரித்ததில், பையனுக்கு இல்லாத கெட்ட பழக்கங்களே இல்லை என தெரிய வந்துள்ளது. என்ன செய்வது என விழி பிதுங்கி நின்றோரிடம், குறிப்பிட்ட வண்ணங்களை பெண்ணுக்கு ஆடையாக கொடுத்து அணியச்சொல்லுங்கள், மேலும் தலையணை உறை மற்றும் போர்வை வண்ணங்களை குறிப்பிட்ட கலருக்கு மாற்றவும் கூறி, அவர் நீர் அருந்த குறிப்பிட்ட வண்ண பாட்டிலில் நீர் நிரப்பி காலை சூரியனில் சிறிது நேரம் வைத்து அதன் மூலம் குடிக்க சொல்லுங்கள், ஏனெனில் இவை எல்லாம் எவ்வித சந்தேகமும் ஏற்படுத்தாது,இயல்பாக இருக்கும் என்றோம். பெண்ணின் தனி அறையின் வண்ணத்தையும் மாற்றி அமைக்க அறிவுறுத்தினோம். பொறுமை மிக அவசியம், பெண்ணுக்கு ஏதேனும் சமாதானம் கூறி காலம் தாழ்த்துங்கள், எதிர்க்காதீர்கள்,அவ்வப்பொழுது இயல்பாக பையனின் தன்மையை கூறிவருங்கள் என்றோம். சரியாக மூன்று மாதம் மூன்றாவது நாளில்-இன்று , பெற்றோரிடமிருந்து தகவல்- பெண், அந்த பையனின் தன்மையை புரிந்து கொண்டாள்-எங்களுக்கு அளவில்லாத மகிழ்ச்சி என்று. ஜோதிடத்தை பொறுத்தவரை வண்ணங்கள் மிக அருமையாக சில விஷயங்களை, மனதை,செய்யும் செயலை மாற்றி, அமைக்க கூடியது. சூட்சுமமாக கணித்து உரிய வண்ணத்தை உரியபடி உபயோகித்தால் வெற்றி நிச்சயம். இது எவ்வித பிரச்சனைகளுக்கும் பொருந்தும்.
ஹரி ஓம் தத் சத்
தாந்த்ரீக ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com
www.youtube.com/amanushyam

Sunday, 24 November 2019

ஆபத்தில் கொண்டு சேர்க்கும் ராசி கற்களும் தசா புத்தி கற்களும்


எவ்வித கிரக தோஷங்களானாலும் அதை நீக்கும் சக்தியில் முதன்மையானவை இரத்தின கற்கள் என்றால் இரண்டாம் தன்மையை கொண்டவை வண்ணங்கள். எம்மிடம் ஆலோசனைக்கு வருவோரில்,பலருக்கும் இதை சோதித்து வெற்றி கண்டதுண்டு. உதாரணத்திற்கு திருமண தடை இருந்து, பல பரிகாரம் செய்தும் பலனில்லாமல் வருடங்கள் வீணாகி பிறகு நாம் பரிந்துரைத்த கற்களை அணிந்து இரண்டு மாதங்களுக்குள் திருமணம் நிச்சயம் ஆன அன்பர்கள் உண்டு. கற்கள் அணிய முடியாத நிலையில் உள்ளோர் அதற்கேற்றவாறு வண்ணங்களை உபயோகித்தும் பயன் பெற்றுள்ளனர். முதலாவது உடனடி பலன் தரும் என்றால் இரண்டாவது ஒரு சில மாதங்கள் பிடிக்கும். வண்ணங்களை பல விதத்தில் உபயோகிக்க அறிவுறுத்துவது வழக்கம். இவை நம் முன்னோர்கள் சூட்சுமமாக உபயோகித்து வந்த முறைகள். சமீபத்தில் முதலீடு இல்லாமல் தொழில் நஷ்டத்தில் இருந்து 'எதை தின்னால் பித்தம் தெளியும்' என்று இருந்து வந்த ஒருவருக்கு,வண்ணங்களை அறிவுறுத்தி அதில் நீர் அருந்தும் படியும்,வேறு பலவிதத்திலும் உபயோகிக்க கூறினோம். மிக எளிதான பரிகாரம் என்பதால் அரை மனதுடன் சென்றாலும்,கூறியபடி உபயோகித்து வந்ததில் நான்கு மாதத்தில் அவருக்கு, அருமையான பங்கு தாரர் அமைந்து வியாபாரம் மீண்டும் சூடு பிடித்துள்ளது. அதே சமயம் ராசிக்கு கற்கள், நடப்பு
திசைக்கு புத்திக்கு கற்கள் என சிலர் கூறிவருகின்றனர். இது ஆலோசனைக்கு வருவோரை மிக ஆபத்தான நிலைக்கு கொண்டு சேர்த்து விடும் ஒன்றாகும். பொதுப்படையாக இவ்வித பரிகாரங்களை கூறவே கூடாது. கற்களை பொறுத்தவரை நன்கு ஆராய்ந்து அவரவர் ஜாதகப்படி மட்டுமே கொடுக்க வேண்டும். அதற்கு இதில் நல்ல நேரிடை அனுபவமும் தெய்வ அருளும் நிறையவே வேண்டும்.
தாந்த்ரீக ஜோதிட ஸ்ரீ. வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிகார ரக்க்ஷா சென்டர்
9840130156
www.youtube.com/amanushyam
www.yantramantratantra.com

ராகுவுக்கேற்ற செலவில்லா சூட்சும பரிகாரம்கீழ்கண்ட பரிகார முறையை ஆராய்ந்து பல காலங்களாக நாம் கொடுத்து வந்துள்ளோம் எனினும் சமீபத்தில் நிகழ்ந்த ஒரு அற்புதம் நெகிழ்ச்சி அளிக்கிறது. ஆலோசனைக்கு வந்த அன்பர் ஒருவருக்கு நுரையீரல் பிரச்னை. சில காலமாக மருத்துவம் பார்த்தும் சரியாகவில்லை என்பது ஒருபுறம். ஒருசிலர் இது நுரையீரல் புற்றுநோயாகவும் மாறக்கூடும் என பயமுறுத்த,கிட்டத்தட்ட,மரணபயத்தில் இருந்தார். ஆராய்ந்ததில் ராகு நிலை சரியில்லாதது மட்டுமல்லாமல் ராகு திசையில் ராகு புத்தி நடந்து கொண்டிருந்தது. அவரை ராகுவிற்காக சனி தோறும் ராகு புத்தி முடியும் வரை மதியம் ஒன்றில் இருந்து இரண்டுக்குள், தொழுநோயாளிகள் அல்லது மிகவும் கீழ் நிலையில் உள்ள வயதான ஆண்கள் பெண்கள் நால்வருக்கு தலா 4 உளுந்து வடையுடன் தேங்காய் சட்னி மற்றும் நீர் கொடுக்க சொல்லி அறிவுறுத்தப்பட்டது. மேலும் நெஞ்சு பகுதியில் பச்சை வண்ணம் ஸ்கெட்ச் பேனாவால் (Sketch) புள்ளிகள் போன்று தினசரி வைத்து கொள்ள கூறினோம். மேலும் கபம் அதிகம் உள்ள ஜாதகர் என ஜாதகத்தை பார்க்கையில் தெரிந்தது. ஆகவே கசப்பு காய்கறிகள் அதிகம் சேர்க்க அறிவுறுத்தினோம். மிக சரியாக எட்டு மாதத்தில், தான் நுரையீரல் பிரச்சனையில் இருந்து முழுமையாக குணமாகி விட்டதாகவும், சமீபத்தில் எடுத்த அனைத்து மருத்துவ பரிசோதனைகளில் மிக நலமாக இருப்பதாக நேற்று தொலைபேசியில் தெரிவித்து மகிழ்ந்தார் கோவையை சேர்ந்த அன்பர். இதில் உளுந்து வடை பரிகாரத்தை ராகு திசை புத்தி நடப்போர் மற்றும் ராகுவின் நிலையினால் இன்னலில் உள்ளோர் அனைவரும் தொடந்து 12 வாரங்கள் செய்து வர உடனடி மற்றம் தெரியவரும். இதில் ஜோதிடம்-தானம்-நியூமெராலஜி என மூன்றுவகை ஆன்மீக அறிவியல் சூட்சுமம் நிறைந்துள்ளது.

தாந்த்ரீக ஜோதிட ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிகார ரக்க்ஷா சென்டர்,சென்னை 33
9840130156 / 8754402857
www.yantramantratantra,com
www.youtube.com/amanushyam

செய்வினை பில்லி சூன்யம்

வேந்தர் தொலைக்காட்சி மூன்றாவது கண் நிகழ்ச்சிக்காக எமது பேட்டி முறையே 2015-2017- 2018 ஆண்டுகளில் மூன்று முறை வெளிவந்தது.பல் வேறு தாந்த்ரீக முறை பற்றி விளக்கப்பட்டது.அதில் 2015 ஆண்டு நிகழ்ச்சி வெளிவந்ததும் பலர் நேரில் படையெடுத்தனர்.அப்படி வந்தவர்களில் பெரும்பாலோர் செய்வினை கோளாறு இருப்பதாக நம்பினர்.பலரிடம் சென்றும் பலனளிக்கவில்லை என்றனர். ஆனால் நிஜத்தில் ஓரிருவர் தவிர வேறு எவருக்கும் அப்படிப்பட்ட கோளாறு இருக்கவில்லை. பிறரால் நம்பவைக்கப்பட்டு இருந்தது.அதில் ஒருவர் தன் மனைவியுடன் வந்திருந்தார். மனைவிக்கு செய்வினை செய்யப்பட்டு இருப்பதாகவும்,ஏழு ஆண்டுகளாய் காதில் ஏதேதோ சத்தம் கேட்கிறது.தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான ஜோதிடரிடத்தில் கேட்டும்,அவர்கள் ஒன்றும் இல்லை என்கின்றனர். இந்தியா முழுதும் மாந்த்ரீகம் தாந்த்ரீகம் என அலைந்து விட்டேன் என்றார். சோதித்ததில் மூன்றாம் இடம் மற்றும் பதினொன்றாம் இடம் பாதிப்பு,வேறு செய்வினை கோளாறு எதுவும் இல்லை என தெரிந்தது. சொன்னால் நம்ப கூடிய நபர் இல்லை.எனவே இது வரை ஏதேனும் காது மருத்துவரிடம் சென்றதுண்டா என கேட்கையில் இல்லை என்றார். எனக்கு தெரிந்த வரையில் இதற்கு பெயர் *டின்னிடஸ்* என்றும் முதலில் மருத்துவரிடம் செல்ல சொல்லி அறிவுறுத்தினோம். அதே போல் மருத்துவத்தில் சில மாதங்களில் குணமானது. இதற்காக ஏழு வருடம் வீணடித்து உடலையும் மனதையும் பணத்தையும் வீணடித்தார். எதெற்கெடுத்தாலும் செய்வினை பில்லி சூனியம் என்று அலைவதை தவிர்த்து எந்த ஒரு பிரச்சனைக்கும் தகுந்த ஆணி வேர் எது என கண்டுபிடித்து அதை சரி செய்வதே நன்று. தாந்த்ரீக ஜோதிடம் உணர்த்தும் உண்மை இது .
தாந்த்ரீக ஜோதிட ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிகார ரக்க்ஷா சென்டர்,சென்னை 33
9840130156 / 8754402857
www.yantramantratantra,com
www.youtube.com/amanushyam 

Friday, 22 November 2019

Thursday, 14 November 2019

பண ஈர்ப்பு ரகசியங்கள் பயிற்சி (Money Attraction Therapy)

ஜோதிட ஸ்ரீ . வாமனன் சேஷாத்ரி அவர்களால் ஏழு வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக கொடுக்கப்படும் பயிற்சி-புதிய முறைகளுடன்
  • ஆழ் மனதில் உள்ள பணத்தடை எண்ணங்களை முழுமையாக நீக்குவது 
  • பணவசீகரம் செய்யும் காணொளிகள் பயிற்சி 
  • காட்சிப்படுத்துதல் மூலம் நமக்கு வேண்டிய பண மற்றும் சௌகரியங்களை பெறும்முறை 
  • வெகுஜன உளவியல் ரகசியம் 
  • பண விளையாட்டு மூலம் பணத்தடைகளை அகற்றும் பயிற்சி 
  • நினைத்த மாத்திரத்தில் வேண்டிய பணத்தை அடைய அலைவரிசையை உபயோகிக்கும் முறை 


கட்டணம் : ரூ.2999 /-

இடம் : மேற்கு மாம்பலம், மாலை மூன்று மணி முதல்
மேல்விவரங்களுக்கு : 9840130156

Tuesday, 12 November 2019

கடன்கள் தீர கடன்கள் முற்றிலும் அழிய இந்த ஸ்லோகத்தை கூறியோ கேட்டோ வரவும்-...

லட்சுமியை வீட்டிற்கு வர வைப்பது எப்படி ? | Adhan Aanmeegam

பணம் ஈர்ப்பு பற்றிய பயிற்சி | சூட்சம குறிப்புகள் | Vamanan Seshadri

பண விளையாட்டு பயிற்சி Part 2 | ஆழ்மனதில் பண வசீகரத்தை உண்டு செய்யும்

பண விளையாட்டு பயிற்சி | ஆழ்மனதில் பண வசீகரத்தை உண்டு செய்யும்

வரும் டிசம்பர் 25 26 27 ஆகிய தேதிகளில் தனுசில் 6 கிரகங்கள் | அனைத்து ராச...

Tuesday, 25 June 2019

சனியால் இழந்தவைகள் திரும்ப கிடைக்க-மீனம்


விரய சனியின் வீரியம் குறைய - மகரம்


இழந்தவை அனைத்தும் திரும்ப பெற -தனுசு


ஏழரை சனியின் தாக்கம் விலக-விருச்சிகம்


சனீஸ்வர அருளை பெற-கன்னி


சனி ரீதியான கஷ்டங்கள் விலக-மிதுனம்


அஷ்டம சனியின் தாக்கம் குறைய -ரிஷபம்


Wednesday, 19 June 2019

வசிய தாந்த்ரீக சக்தியை பெற


பல வித யோகங்களை அள்ளித்தரும் முத்து சங்கு


வசியத்தை அதிகரிக்க செய்யும் காமாக்யா


வாஸ்து கோளாறுகளை சமன் செய்ய


பண விரயம் உடனடியாக நிற்க


மஹாலக்ஷ்மி தேவியை வீட்டில் சேர்க்க


தன வரவு மற்றும் நவகிரஹ தோஷம் நீங்க


கண் திருஷ்டிகள் அடியோடு நீங்க


பண வரவை பன்மடங்காக்க


மஹாலக்ஷ்மி தேவியின் அருளை பெற


எதிர்மறை சக்தியை விரட்டியடிக்க


வசியத்தன்மைக்கு கஸ்தூரி


Friday, 19 April 2019

நீண்ட மிக முக்கிய பதிவு- மனை ரியல் எஸ்டேட் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் ராகு திசை ராகு புத்தி உள்ளோருக்கானது
முருகர் செவ்வாய்க்கு உரியவர் என்பதால் பலரும் நிலம் கட்டிடம் மற்றும் மனை சார்ந்த அனைத்திற்கும் முருகக் கடவுளே அதிபதி என நினைத்துக் கொண்டுள்ளனர். ஆனால் புராணங்களில் மனை நிலம் வீடு போன்ற அனைத்து ரியல் எஸ்டேட் சார்ந்த அல்லது கட்டிடத் தொழில் சார்ந்த எல்லா விஷயத்திற்கும், குறிப்பாக சொல்ல வேண்டுமானால் பூமி சார்ந்த அனைத்து விஷயத்திற்கும் வராகமூர்த்தியை சரணடைவதே ஆகச் சிறந்த பரிகாரமாக அமையும். மேலும் ராகு சார்ந்த பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு வராஹ மூர்த்தியை வணங்கி வழிபடுவதே ஆகும். ராகு சார்ந்த பிரச்சனைகளுக்கு அதாவது ராகு புத்தி அல்லது ராகு தசை அல்லது ஜாதகத்தில் ராகு 2 4 5 7 8 இடங்களில் இருப்போருக்கு பரிகாரமாகவும், மனை, கட்டிடம் சார்ந்த பரிகாரமாகவும் வருகிற 1.5.2019 அன்று மாலை 5 மணி முதல் சென்னை மேற்கு மாம்பலம் கவரை தெரு ஏஎம்ஆர் திருமண மண்டபத்தில் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். வராக மூர்த்தி வழிபடுவதற்கு துவாதசியன்று விரதம் இருந்து பூஜிப்பது மிகச் சிறந்த பரிகாரம் ஆகும்.அதே சமயம் துவாதசியன்று ஹோமம் செய்வது மிகுந்த பலனை கொடுக்கும். இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் புதன்கிழமையும் துவாதசியும் இணைந்து வருவது மிக அபூர்வம் ஆகும். இந்த தினத்தில் செய்யப்படும் ஹோமம் மிக அதிக பலனை ஹோமத்தில் கலந்துகொண்டு வழிபடுவோருக்கு கொடுக்கும் என்பதால் அன்றைய தினத்தில் முடிவு செய்துள்ளோம். ராகுவை கட்டுப்படுத்த புதனால் மட்டுமே இயலும். புதனுக்கு அதிபதி பெருமாள் ஆகும். வராக அவதாரம் எடுத்துள்ள பெருமாளை இத்தினத்தில் அதுவும் புதனும் துவாதசியும் இணைந்த தினத்தில் பூஜிப்பது மிக மிக அதிக பலனை கொடுக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ராகு சார்ந்த பிரச்சினைகளுக்காக இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு சங்கல்பம் செய்து கொள்வோருக்கு ராகுவிற்கான விசேஷ ரக்ஷை வழங்க இருக்கிறோம் இந்த ரக்ஷையின் வீரியமானது 3 வருடங்கள் வரை உங்களை காபந்து செய்யும். பொதுவாக வராக எந்திரத்தை தென்மேற்கில் வைத்து வழிபடுவது அல்லது புதைத்து வைப்பது, மனை சார்ந்த வழக்குகள், வாஸ்து கோளாறுகள், கட்டிடம் வாங்க முடியாமல் இருப்பது, கட்டிடம் விற்க முடியாமல் இருப்பது, மனை வாங்க முடியாமல் தவிப்பது, வீடு பேறு இல்லாமல் இருப்பது, ரியல் எஸ்டேட் தொழிலில் நலிவடைந்து இருப்பது போன்ற பிரச்சனைகளிலிருந்து காபந்து செய்யும். ஆகையினாலே வராக எந்திரம் மனை சார்ந்த பிரச்சனைகளில் உள்ளவர்களுக்கு இந்த ஹோமத்தில் வழங்கப்படுகிறது. மேலும் ராஹுவினால் சொல்ல முடியாத துன்பங்களை சந்தித்து வருவோருக்காக கலச அபிஷேகமும் (3 நபர்களுக்கு மட்டும்) செய்யப்படுகிறது. இந்த சங்கல்பங்களின் மேல் விவரங்களை தொலைபேசியில் அணுகி தெரிந்து கொள்ளவும். வருகிற புதன்கிழமை வராக ஜெயந்தியை முன்னிட்டு வராக மூர்த்திக்கு மேற்கண்ட ரக்ஷை யந்திரங்களை வைத்து உருவேற்றம் ஆரம்பிக்க இருக்கிறோம். ஆகையினால் சங்கல்பம் செய்து கொள்ள விழைவோர் வரும் புதன் கிழமைக்குள் செய்து கொண்டால் அவர்களுக்கு இதன் பலன் மேலும் அதிகமாகும்.
மேல் விவரங்கள் : +919840130156 / +918754402857