ஒரு ஊர்ல வீப்ரதன் அப்படி என்றவன் அவனோட மனைவிகூட வாழ்ந்து வந்தான். அவன் நல்ல உழைப்பாளியாக இருந்தாலும் வறுமையில் வாடினான். அவன் குடும்ப கஷ்டத்தை மனசுல சுமந்துகிட்டு கவலையோடு போயிட்டு இருந்தான். வீப்ரதனின் கஷ்டங்களை அறிந்த மகான் ஒருவர், சோகத்துடன் வந்த வீப்ரதனை தடுத்து நிறுத்தினார்.“வீப்ரதா…சௌக்கியமா”? “தாங்கள் யார்.? என்னுடைய பெயர் உங்களுக்கு எப்படி தெரியும்.? உங்களை நான் பார்த்ததேயில்லையே.? “இந்த உலகத்தில் இருப்பவர்கள் என்னை தினமும் பார்க்கிறார்கள். நானும் அவர்களை பார்த்து கொண்டேதான் இருக்கிறேன்.3நான் அவர்களிடம் பேசமாட்டேனா என்று ஏங்குபவர்கள் பல பேர். நீ என்ன புண்ணியம் செய்தாயோ, நானே உன்னை தேடி வந்து பேசுகிறேன்.” (பின்னே இருக்காதா. அந்த ஸ்ரீமன் நாராயணனே வந்து பேசுகிறார் என்றால் உண்மையிலேயே வீப்ரதன் புண்ணியம் செய்துதானே இருக்க வேண்டும்) “சரி அது போகட்டும். உன்னுடைய கஷ்டங்கள் என்ன என்று நீயே பலமுறை என்னிடம் வந்து முறையிட்டு இருக்கிறாய். அதனால் உனக்கு ஸ்ரீசத்தியநாராயணா பூஜைமுறைகளை சொல்கிறேன். அந்த பூஜையை முறைப்படி செய்” என்று பூஜை முறைகளை சொல்லிவிட்டு, வீப்ரதன் மறுவார்த்தை கேட்பதற்க்குள் சென்றுவிட்டார் அந்த மகான். வீரபத்திரருக்கு என்ன செய்யறதுன்னே தெரியல. நேரா  அவன் மனைவி கிட்ட போய் விஷயத்தைச் சொன்னார். “கடவுள் போல ஒரு பெரியவர் நம் கஷ்டங்கள் தீர ஸ்ரீசத்தியநாராயண பூஜையை எப்படி செய்வது என்று கூறினார்.அதனால உடனே அந்த பூஜையை நம்ப செய்யணும் அப்படின்னு அவன் அவன் மனைவி கிட்ட சொன்னான் அதுக்கு அவன் மனைவி என்ன பேசுற அடுத்த வேளை சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் கஷ்டப்படுகிறோம் சாதாரண பூஜைக்கு தேங்காய் ,பழம் எல்லாம் வாங்கி பூஜை செய்வது கஷ்டமா இருக்கு. யாரோ ஒரு பெரியவர் சொன்னார் என்று அதுக்காக இவ்வளவு பெரிய பூஜை எல்லாம் பண்ணி அன்னதானம் எல்லாம் நம்மளால பண்ண முடியுமா அப்படின்னு அவன் மனைவி சொன்னாள். எதுவா இருந்தாலும் சரி பூஜையை நல்ல செஞ்சு முடிக்கணும் வர பௌர்ணமி அன்னிக்கு அந்த பெரியவர் சொன்ன மாதிரி இந்த பூஜையை செய்யணும் அதற்கான ஏற்பாடுகளை செய்கிறேன் கடவுள் இருக்கான் அவன் பார்த்துப்பான் நம்ம ஏன் கவலைப்படும் நான் பிச்சை எடுத்தாவது சாப்பாடு தேவையான பொருட்களை நான் வந்து ஏற்பாடு செய்கிறேன் நீ ருசியா சமையல் செய் என்றான் வீப்ரதன். ஒவ்வோரு வீடாக சென்று, “அம்மா… ஸ்ரீசத்தியநாராயண பூஜை செய்ய இருக்கிறேன். உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்.” என்று யாசகம் கேட்டான் வீப்ரதன். எதிர்பார்த்ததை விட இறைவனின் அருளால் உணவு பொருட்கள் கிடைத்தது. பூஜையை தொடங்கினான். பூஜையிலும் அன்னதானத்திலும் கலந்துக் கொள்ளும்படி எல்லோரையும் அழைத்தான். வந்தவர்களோ, “பரேதேசியாக இருப்பவன், சத்தியநாராயண பூஜையை செய்கிறானாம். செய்தால் கோடிஸ்வரனாக மாறிவிடுவானா.?” என்று வயிற்றெரிச்சலோடு பூஜையில் கலந்து கொண்டார்கள். அந்த பக்கமாக வந்த வழிப்போக்கன் ஒருவனும் பூஜையில் கலந்துக் கொண்டான். பூஜை நல்லபடியாக முடிந்தது. வீப்ரதனும் அவனுடைய மனைவி, குழந்தைகளும் வந்தவர்களுக்கு சிரித்தமுகத்துடன் உணவை பரிமாறினார்கள். விருந்து முடிந்து எல்லோரும் புறப்பட்டார்கள். ஆனால் அந்த வழிபோக்கன் மட்டும் வீப்ரதனிடம், “சாமீ..நான் ஒரு வழிப்போக்கன். பசி என்னை வாட்டியெடுத்தால் இந்த பூஜையில் நீங்கள் அழைக்காமல் நான் கலந்துக் கொண்டு, நீங்கள் தந்த அன்னதானத்தில் சாப்பிட்டேன். அதற்காக என்னை மன்னிக்கவும். பூஜை சிறப்பாக இருந்தது. எல்லாம் நல்லப்படியாகவே அமைந்தது. உணவுக்காக தேடி வந்த எனக்கு, ஸ்ரீசத்தியநாராயண பூஜை தரிசனத்தை காட்டினீர்கள். இப்பூஜையை காண கண்கோடி வேண்டும். அத்தனை சிறப்பாக நடத்தினீர்கள். என் கண்களுக்கும் வயிற்றுக்கும் விருந்தளித்த தாங்களும், தங்கள் குடும்பமும் எல்லா செல்வமும் பெற்று நோய்-நொடியின்றி பல்லாண்டு வாழ வேண்டும்.” என்று வாழ்த்தினான் அந்த வழிப்போக்கன் பூஜையின் பயனாக வீப்ரதன், எங்கு சென்றாலும் நல்ல வரவேற்பும் மரியாதையும் பெற்றான். எடுக்கும் முயற்சியெல்லாம் வெற்றியாக அமைந்தது. அவன் ஆரம்பித்த வியபாரமும் லாபம் தந்தது. பல கோடிகளுக்கு அதிபதியானான். பூஜையில் கலந்து கொண்டு உணவு சாப்பிட்ட வழிபோக்கனின் வாழ்க்கையில் கூட நல்ல மாற்றங்கள் நிகழ்ந்தது. மகளுக்கு திருமணம், நல்ல வேலைவாய்ப்பு என்று ஒரு நிலையான இடத்திற்கு வ்நதான் வழிப்போக்கன். பூஜைக்காக எதையும் செய்யாமல், வீப்ரதன் நடத்திய பூஜையில் நல்ல எண்ணத்துடண் கலந்து கொண்டதற்கே மேன்மை பெற்றான் வழிப்போக்கன். மற்றவர்களோ வீப்ரதனின் பூஜை மற்றும் அன்னதானத்தை கேலி பேசியப்படி கலந்துக் கொண்டார்கள். அதனால் அவர்கள், முன் இருந்ததை போலவே காலத்தை கழித்தார்கள். இதனால நம்ப தெரிஞ்சுகிறது என்னன்னா சத்தியநாராயண பூஜை பண்றவங்களுக்கு மட்டுமில்லாமல் அதை நல்ல மனசோட கலந்து கொள்பவர்களும் புண்ணியம் கிடைக்கும் வாழ்க்கை நல்லா இருக்கும். 

Post a Comment

Previous Post Next Post

Get in touch!