04.7.20 பௌர்ணமி லாப முகூர்த்தத்தில் செல்வ மழை பொழிய சத்யநாராயண பூஜை04.7.20 பௌர்ணமி லாப முகூர்த்தத்தில் செல்வ மழை பொழிய சத்யநாராயண பூஜை#SatyanarayanaPooja#VamananseshadriTips#SimpleSatyanarayanaPuja2020#AshadaPoornima2020

பௌர்ணமி சத்யநாராயண பூஜைக்குத்தேவையான அனைத்து  பொருட்களும் எடுத்து வைத்து கொள்ளவும். தரையில் அமராமல் விறுப்பி  அல்லது பாய் போட்டு கொள்ளவும். பௌர்ணமி சத்யநாராயண பூஜை நிவேதனத்திற்கு வெள்ளை கேசரி தாராளமாக சத்யநாராயண பூஜை முடிந்ததும் பிறருக்கும் பிரசாதமாக கொடுக்கும் வண்ணம் தயாரித்து கொள்ளவும். வாழை இலையில் சத்யநாராயண படத்தை வைத்து இலையில் பூக்களை இட்டு அர்ச்சிக்க தயாராக வாசனை பூக்கள் வைத்து கொள்ளவும். தாம்பூலம் (வெற்றிலை, கொட்டை பாக்கு , சுண்ணாம்பு ) வைத்து கொள்ளவும். கடவுளுக்கு நீர் வைக்கும் கிண்ணத்தில் சிறிது பச்சை கற்பூரம் (அரிசி எடையளவு) மற்றும் ஏலக்காய் ஓன்றிரண்டு துளசி போட்டு வைக்கவும் (இந்த நீரில் பிரசாதத்தை  நிவேதனம் செய்து பின்னர் பூஜை முடிந்ததும் தீர்த்தமாக உண்ணலாம்.  அதிகமாக  பூக்கள் வாங்க முடியாதவர்கள் அட்சதை (பச்சரிசியுடன் துளி நீர் சேர்த்து மஞ்சள் கலக்கவும்) வைத்து அர்ச்சிக்கலாம். நெய் விளக்கு ஒன்று அல்லது ஐந்து முகம் ஏற்றி கொள்ளவும். வெள்ளை திரி. குடும்பத்துடன் இந்த பூஜை செய்வது சிறப்பு. முதலில் கணபதி த்யானம். கணபதிக்கு அருகம்புல் வைத்து கொள்ளவும். மஞ்சளில் விநாயகர் பிடித்து அரும்கம்புல் வைத்து பதினோரு முறை "ஓம் கம் கணபதயே நமஹ" மந்திரம் கூறவும். பின்னர் "ஓம் வருணாய நமஹ" மந்திரத்தை இலையில் அட்சதை ஒவ்வொரு முறையும் தூவி பதினோரு முறை.
பின்னர் கீழ்கண்ட நவகிரஹ மந்திரங்களை ஒரு முறை கூறி வணங்கவும்.

ஓம் சூர்யாய நமஹ
ஓம் சந்த்ராய நமஹ
ஓம் அங்காரகாய நமஹ
ஓம் புதாயா நமஹ
ஓம் குருவே நமஹ
ஓம் சுக்ராய நமஹ
ஓம் சனைச்சராய நமஹ
ஓம் ராஹுவே நமஹ
ஓம் கேதுவே நமஹ

பின்னர் தாமரை அல்லது வாசனை பூக்களை இட்டவாறு 27 முறை " ஓம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மியை நமஹ" மந்திரம் கூறவும். நன்றாக தியானித்து உங்களுக்கு வேண்டிய வரங்களை கேட்டு கீழ்கண்ட லிங்கில் உள்ள சத்யநாராயண அஷ்டோத்திரத்தை  (அர்ச்சிக்க 108 பெயர்கள் ) கூறி பூக்களை இட்டவாறு வணங்கவும். கூறி முடித்ததும், கீழ்கண்ட லிங்கில் உள்ள சத்யநாராயண பூஜா மஹிமை கதையினை உரக்க படிக்கவும்.முடிவில் நிவேதனம் செய்து தூப தீபம் காட்டி குடும்பத்தினர் அனைவரும் சத்யநாராயணரை 3 முறை வலம்  வந்து நமஸ்கரிக்கவும். இந்த பூஜையை பொறுத்தவரை அக்கம்பக்கம் உள்ளோரையும் அழைத்து அவர்களுக்கும் முடிவில் தாம்பூலம் (வெற்றிலை, கொட்டை பாக்கு , சுண்ணாம்பு ) மற்றும் மஞ்சள் வாழைப்பழம் முடிந்தளவு கொடுப்பதும் பூஜை முடிந்து உங்கள் குடும்பத்தில் உள்ளோர் நிவேதனம் உண்ட பின் அக்கம்பக்கம் உறவினர்களுக்கு கொடுப்பது சிறப்பு.

மறு பூஜை

மறுநாள் காலை முந்தய நாள் வைத்துள்ளவற்றை தூய்மை செய்து பின்னர் புதிதாக நீர், தாம்பூலம்,சிறிது பூ வைத்து, "ஓம் சத்யநாராயணாய நமஹ" 27 முறை கூறி நமஸ்கரித்து உலர் திராட்சை நிவேதனம் செய்து தூப தீபம் காட்டி நமஸ்கரிக்கவும். பின்னர் படத்தினை பூஜை அறையில் வைத்து விடலாம். மஞ்சள் பிள்ளையாரை குளிக்கும் நீரில் இட்டு குளிக்கவோ அல்லது ஏதேனும் செடியில் கரைத்து விடவோ செய்யலாம். துளசி செடியில் விடக்கூடாது.

SATYANARAYANASWAMY ASHTOTHRAM (ARCHANAI-108 NAMES) IN TAMIL & ENGLISH
https://www.yantramantratantra.com/2020/07/satyanarayanaswamy-ashtothram-archanai.html

சத்யநாராயணபூஜை கதை SATYANARAYANA PUJA STORY
https://www.yantramantratantra.com/2020/07/satyanarayana-puja-story.html

Astrologer/Empath Shriguru.Vamanan SesshadriRemedies are quiet popular and easy methods particularly when it comes to money manifestation, astrology, money attraction,general welfare and not but not least,also for job,career and marital issues.

Check out Astrologer ShriGuru.Vamanan Sesshadri Remedies Here : 

https://www.youtube.com/playlist?list...
பணம் பெருக பரிகாரங்கள்

https://www.youtube.com/playlist?list...
Money Therapy

https://www.youtube.com/playlist?list...
Mantras

https://www.youtube.com/playlist?list...
Neram Nalla Neram Puthuyugamtv

https://www.youtube.com/playlist?list...
Pala vidha Parikarangal

ONLINE CONSULTATIONS :  9840130156

www.yantramantratantra.com
www.facebook.com/yantramantratantra

Post a Comment

0 Comments