தகாத காதலால் சீரழியும் பிள்ளைகள்


பருவ வயதில் காதலில் சிக்கி கொண்டு வீட்டில் முரண் பிடிக்கும் பல பிள்ளைகளின் பெற்றோர் எம்மிடம் வருவதுண்டு. இதை எப்படியாவது பிரிக்க வேண்டும் என கூறினாலும் அது சாதி மதம் ரீதியான கௌரவம் காரணமா அல்லது வேறு ஏதேனும் விஷயமா எனத்தெரிந்து பருவ வயதில் தகுதியில்லா நபருடன் காதல் அல்லது காதல் உடல் சார்ந்ததா என்பதை தெரிந்த பின்னரே அவர்களுக்கு பரிகாரங்கள் கொடுக்கப்படும். அன்பு ரீதியானதா அல்லது வேறு காரணமா என்பதை எளிதில் தெரிந்து கொள்ள முடியும். அப்படி வேறு காரணம் மற்றும் திருமணம் நடந்தாலும் முறிவு என தெரிந்தால் அதற்கு உபாயம் கொடுக்கப்படும். இதில் பல சவால்கள் உள்ளன. பிள்ளைகள், பெற்றோர் எது சொன்னாலும் கேட்காததாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு பெற்றோர் சமீபத்தில் சந்திக்க நேர்ந்தது. தங்கள் பெண் மிகுந்த பிடிவாதமாக உள்ளதாகவும் எது கொடுத்தாலும் அணிய மாட்டாள்,எது சொன்னாலும் பிடிவாதமாக குறிப்பிட்ட பையனை தான் திருமணம் செய்வேன் என்றும் அதுவும் பெற்றோரே செய்து வைக்க வேண்டும் என்றும் மிகுந்த அடம். பெற்றோரும் பிள்ளையை பற்றி தனியார் துப்பறியும் நிறுவனத்திடம் கொடுத்து விசாரித்ததில், பையனுக்கு இல்லாத கெட்ட பழக்கங்களே இல்லை என தெரிய வந்துள்ளது. என்ன செய்வது என விழி பிதுங்கி நின்றோரிடம், குறிப்பிட்ட வண்ணங்களை பெண்ணுக்கு ஆடையாக கொடுத்து அணியச்சொல்லுங்கள், மேலும் தலையணை உறை மற்றும் போர்வை வண்ணங்களை குறிப்பிட்ட கலருக்கு மாற்றவும் கூறி, அவர் நீர் அருந்த குறிப்பிட்ட வண்ண பாட்டிலில் நீர் நிரப்பி காலை சூரியனில் சிறிது நேரம் வைத்து அதன் மூலம் குடிக்க சொல்லுங்கள், ஏனெனில் இவை எல்லாம் எவ்வித சந்தேகமும் ஏற்படுத்தாது,இயல்பாக இருக்கும் என்றோம். பெண்ணின் தனி அறையின் வண்ணத்தையும் மாற்றி அமைக்க அறிவுறுத்தினோம். பொறுமை மிக அவசியம், பெண்ணுக்கு ஏதேனும் சமாதானம் கூறி காலம் தாழ்த்துங்கள், எதிர்க்காதீர்கள்,அவ்வப்பொழுது இயல்பாக பையனின் தன்மையை கூறிவருங்கள் என்றோம். சரியாக மூன்று மாதம் மூன்றாவது நாளில்-இன்று , பெற்றோரிடமிருந்து தகவல்- பெண், அந்த பையனின் தன்மையை புரிந்து கொண்டாள்-எங்களுக்கு அளவில்லாத மகிழ்ச்சி என்று. ஜோதிடத்தை பொறுத்தவரை வண்ணங்கள் மிக அருமையாக சில விஷயங்களை, மனதை,செய்யும் செயலை மாற்றி, அமைக்க கூடியது. சூட்சுமமாக கணித்து உரிய வண்ணத்தை உரியபடி உபயோகித்தால் வெற்றி நிச்சயம். இது எவ்வித பிரச்சனைகளுக்கும் பொருந்தும்.
ஹரி ஓம் தத் சத்
தாந்த்ரீக ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com
www.youtube.com/amanushyam

Post a comment

0 Comments