ராகுவுக்கேற்ற செலவில்லா சூட்சும பரிகாரம்கீழ்கண்ட பரிகார முறையை ஆராய்ந்து பல காலங்களாக நாம் கொடுத்து வந்துள்ளோம் எனினும் சமீபத்தில் நிகழ்ந்த ஒரு அற்புதம் நெகிழ்ச்சி அளிக்கிறது. ஆலோசனைக்கு வந்த அன்பர் ஒருவருக்கு நுரையீரல் பிரச்னை. சில காலமாக மருத்துவம் பார்த்தும் சரியாகவில்லை என்பது ஒருபுறம். ஒருசிலர் இது நுரையீரல் புற்றுநோயாகவும் மாறக்கூடும் என பயமுறுத்த,கிட்டத்தட்ட,மரணபயத்தில் இருந்தார். ஆராய்ந்ததில் ராகு நிலை சரியில்லாதது மட்டுமல்லாமல் ராகு திசையில் ராகு புத்தி நடந்து கொண்டிருந்தது. அவரை ராகுவிற்காக சனி தோறும் ராகு புத்தி முடியும் வரை மதியம் ஒன்றில் இருந்து இரண்டுக்குள், தொழுநோயாளிகள் அல்லது மிகவும் கீழ் நிலையில் உள்ள வயதான ஆண்கள் பெண்கள் நால்வருக்கு தலா 4 உளுந்து வடையுடன் தேங்காய் சட்னி மற்றும் நீர் கொடுக்க சொல்லி அறிவுறுத்தப்பட்டது. மேலும் நெஞ்சு பகுதியில் பச்சை வண்ணம் ஸ்கெட்ச் பேனாவால் (Sketch) புள்ளிகள் போன்று தினசரி வைத்து கொள்ள கூறினோம். மேலும் கபம் அதிகம் உள்ள ஜாதகர் என ஜாதகத்தை பார்க்கையில் தெரிந்தது. ஆகவே கசப்பு காய்கறிகள் அதிகம் சேர்க்க அறிவுறுத்தினோம். மிக சரியாக எட்டு மாதத்தில், தான் நுரையீரல் பிரச்சனையில் இருந்து முழுமையாக குணமாகி விட்டதாகவும், சமீபத்தில் எடுத்த அனைத்து மருத்துவ பரிசோதனைகளில் மிக நலமாக இருப்பதாக நேற்று தொலைபேசியில் தெரிவித்து மகிழ்ந்தார் கோவையை சேர்ந்த அன்பர். இதில் உளுந்து வடை பரிகாரத்தை ராகு திசை புத்தி நடப்போர் மற்றும் ராகுவின் நிலையினால் இன்னலில் உள்ளோர் அனைவரும் தொடந்து 12 வாரங்கள் செய்து வர உடனடி மற்றம் தெரியவரும். இதில் ஜோதிடம்-தானம்-நியூமெராலஜி என மூன்றுவகை ஆன்மீக அறிவியல் சூட்சுமம் நிறைந்துள்ளது.

தாந்த்ரீக ஜோதிட ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிகார ரக்க்ஷா சென்டர்,சென்னை 33
9840130156 / 8754402857
www.yantramantratantra,com
www.youtube.com/amanushyam

Post a comment

0 Comments