செய்வினை பில்லி சூன்யம்

வேந்தர் தொலைக்காட்சி மூன்றாவது கண் நிகழ்ச்சிக்காக எமது பேட்டி முறையே 2015-2017- 2018 ஆண்டுகளில் மூன்று முறை வெளிவந்தது.பல் வேறு தாந்த்ரீக முறை பற்றி விளக்கப்பட்டது.அதில் 2015 ஆண்டு நிகழ்ச்சி வெளிவந்ததும் பலர் நேரில் படையெடுத்தனர்.அப்படி வந்தவர்களில் பெரும்பாலோர் செய்வினை கோளாறு இருப்பதாக நம்பினர்.பலரிடம் சென்றும் பலனளிக்கவில்லை என்றனர். ஆனால் நிஜத்தில் ஓரிருவர் தவிர வேறு எவருக்கும் அப்படிப்பட்ட கோளாறு இருக்கவில்லை. பிறரால் நம்பவைக்கப்பட்டு இருந்தது.அதில் ஒருவர் தன் மனைவியுடன் வந்திருந்தார். மனைவிக்கு செய்வினை செய்யப்பட்டு இருப்பதாகவும்,ஏழு ஆண்டுகளாய் காதில் ஏதேதோ சத்தம் கேட்கிறது.தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான ஜோதிடரிடத்தில் கேட்டும்,அவர்கள் ஒன்றும் இல்லை என்கின்றனர். இந்தியா முழுதும் மாந்த்ரீகம் தாந்த்ரீகம் என அலைந்து விட்டேன் என்றார். சோதித்ததில் மூன்றாம் இடம் மற்றும் பதினொன்றாம் இடம் பாதிப்பு,வேறு செய்வினை கோளாறு எதுவும் இல்லை என தெரிந்தது. சொன்னால் நம்ப கூடிய நபர் இல்லை.எனவே இது வரை ஏதேனும் காது மருத்துவரிடம் சென்றதுண்டா என கேட்கையில் இல்லை என்றார். எனக்கு தெரிந்த வரையில் இதற்கு பெயர் *டின்னிடஸ்* என்றும் முதலில் மருத்துவரிடம் செல்ல சொல்லி அறிவுறுத்தினோம். அதே போல் மருத்துவத்தில் சில மாதங்களில் குணமானது. இதற்காக ஏழு வருடம் வீணடித்து உடலையும் மனதையும் பணத்தையும் வீணடித்தார். எதெற்கெடுத்தாலும் செய்வினை பில்லி சூனியம் என்று அலைவதை தவிர்த்து எந்த ஒரு பிரச்சனைக்கும் தகுந்த ஆணி வேர் எது என கண்டுபிடித்து அதை சரி செய்வதே நன்று. தாந்த்ரீக ஜோதிடம் உணர்த்தும் உண்மை இது .
தாந்த்ரீக ஜோதிட ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிகார ரக்க்ஷா சென்டர்,சென்னை 33
9840130156 / 8754402857
www.yantramantratantra,com
www.youtube.com/amanushyam 

Post a comment

0 Comments