பண புழக்கத்திற்க்கு எளிமையான பரிகாரங்கள்


நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில சமையல் பொருட்கள் மூலம் பல தாந்த்ரீக விஷயங்களை சாதிக்கலாம். இதை அனுபவத்தில் உணரலாம்.ஏற்கனவே நாம் கொடுத்திருந்த பச்சை கற்பூரம்,சோம்பு,ஏலக்காய் விஷயம் பலருக்கு உடனடி பயன் கொடுத்துள்ளதை பதிவின் கருத்து பெட்டியில் காணலாம். ஓரிருவர் பணம் வரவில்லை என்றும் கூறியிருந்தனர். அப்படிப்பட்டவர்கள் மிக குறைவே. கீழே கொடுத்துள்ள முறைகள் பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வரும் முறையே. அனைவரும் பயன் பெற வாழ்த்துகிறேன். கீழே கொடுத்திருக்கும் அனைத்தும் மளிகை மற்றும் நாட்டு மருந்து கடைகளில் கேட்டு வாங்கலாம்.தேடி தெரிந்து கொள்ளவும்.
(1) AllSpice என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சர்வசுகந்தியை வீடு மற்றும் வியாபார ஸ்தலங்களில் நான்கு மூளையிலும் போட்டு வைக்க பண வரவு உண்டாகும். அடிக்கடி மாற்றி வரவும்.
(2) இலவங்கப்பட்டை குச்சியில் பத்து ரூபாய் தாளை குத்தி நம் பண பெட்டியில் வைத்து வர பண வரவு மிகும். இலவங்கப்பட்டையும் பண வரவை ஈர்க்கும் ஒன்றாகும்.
(3) புதினா இலைகளை பர்ஸில் வைத்து வர பண வளர்ச்சி நிச்சயம். ஒவ்வொரு முறை பணத்தை வெளியே எடுக்கும் போதும் இலையை பார்த்து வர வேண்டும். மேலும் மூன்று நாட்களுக்கொரு முறை மாற்றி விட வேண்டும்.
(4) AlfaAlfa எனப்படும் 'குதிரை மசால்' பணத்தை ஈர்க்கும் தன்மை உடையது . கடன் கேட்க போகும் போதோ அல்லது கொடுத்த கடனை வசூலிக்க செல்லும் போதோ உடன் சிறுது எடுத்து செல்லலாம்.
(5) வெந்தயம் சிறுது கிண்ணத்தில் போட்டு திறந்த நிலையில் வீடு அடுக்களையில் வைத்து வர என்றும் உணவு பொருட்களுக்கு குறைவிருக்காது. வாரம் ஒரு முறை பழையதை ஓடும் நீரில் போட்டு விட்டு புதியதாய் மாற்றி விடவும்.

Post a comment

0 Comments