நவகிரஹ தூப பொடி

நவகிரஹ தூப பொடியின் மகத்துவத்தை நன்கு புரிந்து கொண்டு ஏராளமான நம் குழு அன்பர்கள் வாங்கி செல்கின்றனர். உண்மையில் தினமும் அதை காலை மாலை வீட்டிலோ அல்லது வியாபார இடத்திலோ தாந்த்ரீக நவகிரஹ மந்திரங்களை கூறி கொண்டே போட்டு வருவது நவகிரஹ ஹோமம் தினசரி செய்து வருவதற்க்கு ஒப்பாகும்.நாம் நம் முன்னோர்கள் செய்து வந்த பல நல்ல பழக்க வழக்கங்களை விட்டு விட்டோம். அதனால் தான் தற்பொழுது அனைவரும் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகி தவிக்கிறோம். என்னிடம் வந்து தான் வாங்கி செல்ல வேண்டும் என்பதில்லை, அவசியம் தாங்களே கூட கடைகளில் வாங்கி தயாரித்து கொள்ளலாம்.அனைவரும் செய்ய வேண்டியது மிக அவசியம்-அவ்வளவே. நம் கலாச்சாரத்தில் இருந்து அழிந்து வரும் இந்த எளிய முறை பரிகாரத்தை தங்கள் உறவினர்கள்,திருமணமான மகன்,மகள்,சகோதர சகோதரிகள் அனைவரையும் பின் பற்ற சொல்லி பயன் பெற செய்யுங்கள்.
__________________________________________________________
நாம் கொடுத்து வரும் 'வாழ் நாள் பரிகாரங்களில்-நேர பரிகாரம்' என ஒன்றையும் கொடுத்து அது மிக முக்கியமாக கடை பிடிக்க வேண்டிய ஒன்று என கூறி வருகிறோம். சமீபத்தில் ஒருவர் வந்து பரிகார முறைகள் அனைத்தும் செய்து விட்டேன்-பலன் எதுவும் தெரியவில்லையே-வேறு எதாவது செய்ய வேண்டுமா என கேட்டார். எப்படி செய்தீர்கள் என கேட்கையில் நான் குறித்து குடுத்த நேரங்களில் ஒன்று கூட அவர் பரிகாரங்கள் செய்கையில் உபயோகிக்க வில்லை என தெரிந்தது.நான் சிறிது கோபம் கொண்டேன்-எதற்காக வீணாக என்னிடம் வந்தீர்கள் என கேட்டேன். என்னை அமைதிப்படுத்தும் விதமாய், "இல்ல சாமி- நாம தான் ராகு காலம், எம கண்டம், ஹோரை எல்லாம் பாத்து தானே செய்கிறோம்னு விட்டுட்டேன்' என்றார்.ஹோரைகளில் சுப ஹோரைகள் அனைவருக்கும் நல்லது செய்து விடுவதில்லை. அப்படி செய்தால் இத்தனை பரிகாரங்கள், பூஜை முறைகள், மந்திரங்கள், ஹோமங்கள் என எதுவும் தேவை இல்லை. அவரவர் ஜாதகப்படியும் கிரகங்களின் குணங்களையும் வைத்து நாம் ஒருவருக்கு கொடுக்கும் நேரம் என்றும் பொய்த்ததில்லை. இதை கூறி அனுப்பி வைத்தேன் இன்று தொலைபேசியில் அழைத்து, தற்போது உபயோகிக்க ஆரம்பித்து விட்டதாகவும், பலன் தெரிகிறது என்றும் கூறினார்.மகிழ்ச்சி.
தற்போது வாழ் நாள் பரிகாரங்களுடன் பண வரவிற்காக வாசனை திரவியமும், வசிய வார்த்தை பிரியோகமும் சேர்த்தே கொடுத்து வருகிறோம்.போன முறை ரூ.50,000 வசிய வார்த்தைகள் மூலம் கிடைத்ததாக கூறிய திரு. Kanaga Rajஅவர்கள் இந்த வாரம் அழைத்து, நீங்கள் கொடுத்த வார்த்தையின் சக்திக்கு அளவே இல்லை என்றார்.தற்பொழுது பணப்புழக்கம் அதிகரித்து விட்டதாக கூறிய அவர், விரைவில் பணத்தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்து விட்டு, நான் இழந்த Bolero காரை மீண்டும் வாங்கி, என் குடும்பத்துடன் உங்களை வந்து சந்திப்பேன் என்றிருக்கிறார் !! சந்தோஷமாக இருந்தது !!இது போன்று என்னை நாடி வரும் அனைவருக்கும் தேவைகள் பூர்த்தியாகி நலம் பெற வைக்க வேண்டுமாய் என் ஆராதனை தெய்வமான சாய் நாதரை வேண்டி கொள்கிறேன். மேலும் இதே ஆன்மீக துறையில் இருக்கும் உயர்திரு. கிரிதரன் மகாதேவன், அவர்கள் தன் தோழர்களையும் நாடி வருபவர்களையும், என்னிடம் விநாயகர் வாங்கி வீட்டில் வையுங்கள், நல்லது நடக்கும் என கூறி அனுப்பி வருகிறார் போலும். இது வரை இப்படி செய்வதை என்னிடம் கூறியதும் இல்லை. சமீபத்தில் வந்த ஒரு தோழர் கூறியதும் தான் அறிந்து கொண்டேன். அவருக்கு இன்னும் என் நன்றிகள் பாக்கியுள்ளது. என் மீதும், நான் கொடுத்து வரும் விநாயகரின் அற்புதங்கள் மீதும் மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கும் அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள் !! இது போன்று பெயரை சொல்லாமல் செய்து வருபவர்கள் நம் குழுவில் பெருகி வருகின்றனர். முகமறியாமல் பலருக்கு உதவி வரும் அவர்களுக்கும் என் நன்றிகள் !!
__________________________________________________________
மிகுந்த கடன் பிரச்சனையில் உள்ளவர்கள் இந்த விநாயகரை வைத்து அகத்திய மந்திரம் கூறி,அகத்தி கீரையால் அர்ச்சனை செய்து வந்தால் எப்பேர்பட்ட கோடிக்கணக்கான கடனாக இருந்தாலும் விரைவில் தீர வழி காட்டி விடுகிறார் நம் வலம்புரி விநாயகர். இது அனுபவத்தில் கண்ட உண்மை.

Post a comment

0 Comments