வசிய வார்த்தைகள் கொடுக்கும் வளமான வாழ்க்கைகள்


நாம் பிரியோகிக்கும் வார்த்தைகள் மிக சக்தி வாய்ந்தவை. இது எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.நாம் கூறும் சில வார்த்தைகள் சில வாழ்க்கைளை மாற்றி போடும். நம் பண தேவைகளுக்கு-பிற பிரச்சனைகளுக்கு சரியான வார்த்தைகளை மந்திரமாக உபயோகித்தால் எல்லா வித தொல்லைகளில் இருந்தும் விடுபடலாம். என் பரிகார முறைகளில் வெகு சிலருக்கு மட்டும் இதை கொடுத்து வந்திருக்கிறேன். இதற்கு முழுமையான சரணாகதி நம்பிக்கை தேவை. அப்படி உள்ளவர் களுக்கு மட்டுமே அந்த பரிகாரம் செயல் படும். மேலும் தனிப்பட்ட ஆலோசனைகளுக்கு மட்டுமே அதை கொடுத்து வருகிறேன். சில படங்களும் அந்த மாயங்கள் செய்யும். ஒருவர் ஜாதகம் இல்லாமல் ஒரு நாள் மிக மோசமான பிரச்சனைகளோடு என்னை இரவு நேரம் சந்திக்க வேண்டி வந்தார். ஜாதகம் இல்லை. கந்து வட்டிக்காரர்களிடம் மாட்டி கொண்டு படாத பாடு பட்டுக்கொண்டு இருந்தார், மிக பாரம்பரியமான குடும்பத்தை சேர்ந்தவர்.நல்லவர். குறிப்பட்ட ஏழு நாட்களுக்குள் பணத்தை குடுக்காவிட்டால் அவரை என்ன வேண்டுமானாலும் செய்து விடும் அந்த ரவுடி கும்பல் என்றார். நான் குறிப்பட்ட வார்த்தை மந்திரங்களை கூறி அதை நம்பிக்கையுடன் தினமும் இரவு கூறி வரும் படி சொன்னேன். மேலும் ஒரு படத்தையும் கொடுத்து அதை இரவு நேரங்களில் பார்த்து விட்டு பின்பு தலையணை அடியில் வைத்து காலையில் மீண்டும் பார்க்க சொன்னேன். அவருக்கு தன் உறவினரிருக்கு கொடுத்த சுமார் 30 லட்சம் மதிப்புள்ள நகைகள் திரும்பி வந்தாலே கடனை அடைத்து விடலாம். அவரும் நம்பிக்கையுடன் மந்திரத்தை கூறிவருவதாக சொல்லி சென்றார். இப்பொழுது இரவு மணி 3 க்கு கூப்பிட்டு நன்றி கூறுகிறார். தன்னை மிரட்டி வந்த கும்பல் வேறோவரையும் மிரட்ட அவர் முதலமைசரின் தனிபட்ட செல்லுக்கு குறுந்தகவல் அனுப்ப அவர்கள் அந்த கும்பலை பிடித்து சிறையில் அடைத்துள்ளனரம். மேலும் அவரே, இது எதேச்சையாக நடந்ததா என்று பரிசோதிக்க தொடர்ந்து மந்திரத்தை கூறி வந்துஉள்ளார். ஆனால் அவருக்கு வர வேண்டிய நகையிலும் இப்போது அவர் உறவினர் வந்து பாதி கொடுத்து விட்டு சென்றாராம். மகிழ்ச்சியில் இந்த நேரம் என்றும் பார்க்காமல் என்னைத்தொடர்பு கொண்டாராம். மன்னிப்பும் கேட்டு கொண்டார். மன நிறைவிற்க்கு ஏது நேரம் காலமெல்லாம்?? வாழ்க அவர் பல்லாண்டு-மகிழ்ச்சியோடு.

Post a comment

1 Comments

Unknown said…
ஐயா!!! நான் இலங்கையில் வசிக்கிறேன்.. தங்கள் இந்த வழிமுறை எங்களுக்கு கிட்டாதா???