கிரக தொல்லைகளில் இருந்து விலக எளிய பரிகாரங்கள்-தொடர்ச்சி

புதன் : ஒவ்வாமை, பேச்சு சம்பந்தமான பிரச்சனைகள், வியாபாரம், படிப்பு - பசும் புல் வெளிகளில் அடிக்கடி நடப்பது, உட்காருவது, பச்சை நிறத்தை நம் இரு நெற்றி புருவங்களுக்கு இடையில் வைத்து தியானிப்பது மிகுந்த பலன் தரும். பச்சை செடிகள் மற்றும் மரங்களை தினசரி பத்து அல்லது பதினைந்து நிமிடம் செய்து வருதல் நலம்.

வியாழன் (குரு) : மஞ்சள் நிற உடையில் மஞ்சள் நாற்காலியில், மஞ்சள் பழங்களுக்கு நடுவில் உங்கள் மனதுக்கு உகந்த குரு  (சாய், ராகவேந்திரர்,ரமண மஹரிஷி,சேஷாத்ரி சுவாமிகள், மஹா பெரியவர் போன்ற பலர்) உட்கார்ந்து இருப்பது போல் உங்கள் இரு புருவங்களுக்கு இடையில் வைத்து தியானிக்கவும்.

வெள்ளி (சுக்கிரன்) : தாமரை மிகுந்த மன அமைதியை, பொறுமையை, அளவற்ற சக்தியை தர வல்லது. அகன்ற குலத்தில் தாமரைகள் நிறைந்து இருப்பது போல் உங்களின் இரு புருவங்களுக்கு இடையில் நிறுத்தி பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் தியானித்து வரவும்.

சனி :  ஒரு வெள்ளை தாளில் (பேப்பர்) 2 அங்குல அளவிற்க்கு நீல வட்டமிட்டு அதை உங்களுக்கு எதிரில் (சற்று தள்ளி) வைத்து உட்கார்ந்த நிலையில் இரு புருவங்களுக்கு இடையில் நீலத்தை நிறுத்தி கண் திறந்த நிலையில் தியானித்து வரவும்.

மேற்கண்டவைகள் மிக பலத்த பலன் அளிக்க கூடியவை. பலன் கண்டிப்பாக ஓரிரு நாட்களில், வாரங்களில் தெரிந்து விட பலருக்கு சாத்தியமில்லை என்றாலும், இதில் கிடைக்க கூடிய பலன்கள் நிரந்தரமானவை-காலம் முழுதும் கிரக கோளாறுகள் நம்மை தாக்காத வண்ணம் பாதுக்காகக்கூடியவை. தொடர்ந்து செய்து பலன் கண்டு வரவும். 

Post a comment

0 Comments