எம பயம் நீங்க

ஒரு முறை அன்பர் ஒருவர் மிகுந்த மரண பயத்துடன் எம்மை சந்திக்க வந்திருந்தார். நபருக்கு சனி திசை. ஏற்கனவே இரு முறை விபத்துக்களை வேறு சந்தித்து இருந்தார். மிகுந்த கலக்கத்துடன் இருந்தவரை கீழ்க்கண்ட பரிகாரம் செய்ய அறிவுறுத்தப்பட்டது.மரண பயத்திற்க்கு, சனி பலவீனமாக உள்ளோருக்கு மிகுந்த சக்தி வாய்ந்த பரிகாரம் இது. செய்து பயன் அடையலாம். 

ஒவ்வொரு மாதமும் மகம் நட்சத்திரம் வரும் நாளில் எருமைகளுக்கு அகத்தி கீரை அளித்து வர எம பயம் நீங்கி, இறந்ததும் சிவ லோகம் செல்லலாம். மேலும் மகம் நட்சத்திரம் எந்த நாட்களில் வந்தால் அகத்தி கீரையுடன் எது சேர்த்து கொடுக்கலாம் என்பதையும் கீழே காணலாம். 

ஞாயிறு    பரங்கிப்பத்தை 
திங்கள்     முளைக்கீரை 
செவ்வாய்  சிகப்பு தண்டு கீரை 
புதன்       முருங்கை கீரை 
வியாழன்   பொன்னான்கண்ணி கீரை 
வெள்ளி    பசலை கீரை 
சனி        சஞ்சு கொட்டைக்கீரை  

Post a comment

0 Comments