எதிர்பாராத பண வரவிற்கு எளிய தாந்த்ரீக பரிகாரம்


எம்மிடம் பண கஷ்டம், கடன் தொல்லை மற்றும் பணத்தேவைகள் அதிகம் உள்ளோர் ஆலோசனைக்கு வருகையில் அவர்களுக்கு கூறும் ஒரு வெற்றி கண்ட தாந்த்ரீக முறையை கீழே விளக்கியுள்ளேன். தேவை உள்ளோர், செய்து பலன் அடையுங்கள்.
பச்சை நிறத்திலுள்ள தவளை ஒன்றின் சிறிய அளவிலான படத்தை எடுத்து கொள்ளவும்.அதன் கீழே நீங்கள் எதிர்பார்க்கும் பண வரவு தொகையை எழுதி கொள்ளவும். தொகை நியாயமானதாகவும் தங்களின் தகுதிக்கு உட்பட்டதாகவும் இருப்பின் மிக வேகமாக பலன் தரும். பின்பு
 அதை மடித்து பணம் வைக்கும் பர்சில் வைத்து கொள்ளவும்-பர்ஸ் தோலில் செய்யப்பட்டதாக இருக்க கூடாது. மேலும் பச்சை நிறமாக இருப்பின் கூடுதல் நலம். படத்தை தினமும் இரவு படுக்கும் முன் எடுத்து பார்த்து கீழ்க்கண்ட மந்திரத்தை 30 தடவை கண் மூடி கூறவும்-மனதினுள். அப்படி கூறும் சமயம் நாவினை உள் புறமாக (வாயினுள் மேல் பகுதியில் படுமாறு) மடித்து கொள்ளவும். முடிந்ததும் நீங்கள் தூங்கும் தலையணை அடியில் வைத்து விட்டு மீண்டும் காலையில் எடுத்து பணம் வைக்கும் பர்சில் வைத்து கொள்ளலாம். தினசரி செய்து வரலாம். இதற்கு கால அவகாசம் கிடையாது. மந்திரம் அதீத சக்தி வாய்ந்தது. தேவைப்படும் வரை, தேவைகள் தீரும் வரை செய்து வரலாம். ஒரு தேவை முடிந்து மறு தேவைக்கு பயன்படுத்தும் சமயம் படத்தை மாற்றி விடவும்.
மந்திரம் : "யோகம் அநேகம் என்னுள்ளே இறங்கட்டும் "

Post a comment

0 Comments