வற்றாத வளமைக்கு எளிய பரிகாரம்


இதை வீட்டில் ஆண்கள் அல்லது பெண்கள், யார் வேண்டுமானாலும் செய்யலாம். இதை வாழ் நாள் முழுதும் செய்து வர வீட்டில் தனம் தான்யம் இரண்டிற்கும் குறையில்லாது, வளமை வற்றாது குடும்பம் நன்று வளர்ச்சி பெறும்.
காலையில் எழுந்து முதலில் குளிப்பவர்கள், அவரவர் முறைப்படி கடவுளை தொழுது விட்டு, சமையல் அறை சென்று அடுப்பை நோக்கி மானசீகமாய் அக்னி தேவனை நினைத்து வழிபடவும். பின்பு சிறிது அரிசியை எடுத்து கொண்டு அத்துடன் ஒரு சிறு துளி மஞ்சள் சேர்த்து கையில் எடுத்து கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை கண்களை மூடிக்கொண்டு 21 முறை கூறி வாசலில் காக்கைகள் அல்லது எறும்புகள் உண்ணும்படி போட்டு விடவும். பின்பு அன்றாட அலுவல்களை தொடரலாம்.
" ஏராளம் தனம் தான்யம்"
மேற்கண்ட முறை மிக சக்தி வாய்ந்தது- வளமை மட்டுமின்றி மிகுந்த புண்ணியமும், திடமான நேர்மறை சக்தியையும் நம்முள்ளே கொண்டு வரக்கூடிய ஒன்று. செய்து பயனடையுங்கள்.

Post a comment

0 Comments