எதிர் மறை சக்திகளை அழிக்க ராக் சால்ட் பரிகாரம்ஹிமாலயன் கிறிஸ்டல் ராக் சால்ட் பற்றி ஏற்கனவே பல முறை கூறி வந்துள்ளோம். பொதுவாகவே கல் உப்பு மற்றும் ஹிமாலயன் ராக் சால்ட் நாம் அன்றாடம் அடையும் எதிர்மறை சக்திகளை போக்க வல்லவை. வாரம் ஒரு முறை நம் இருப்பிடத்தை / தொழில் செய்யும் இடத்தை முழுமையாக ராக் சால்ட் கொண்டு கழுவி விடுவது மற்றும் ராக் சால்ட் கொண்டு குளித்து வருவது மிகுந்த பயன் அளிக்கும் ஒன்று. தொழில் செய்யும் இடம் மற்றும் வீடுகளில் உள்ள எதிர்மறை சக்திகளை அழிக்கக்கூடிய ஒரு சூட்சுமமான முறையை இப்போது காணலாம்.

வாயகன்ற 4 கண்ணாடி கிண்ணங்களில் ஹிமாலயன் ராக் சால்ட் கொண்டு நிரப்பவும். பின்பு அதன் மேல் ஒரு கிராம்பு துண்டை குத்தி வீட்டின் உள் நான்கு மூலைகளில் வைத்து விடவும். இதை செவ்வாய்கிழமை தொடங்கவும். 3 நாட்கள் முடிந்து, அதாவது வியாழன் இரவு அவற்றை எடுத்து வீட்டில் உள்ள அனைவரும் அவற்றை கொண்டு தலையை சுற்றி பின்பு உப்புகளை  நீரில் (ஆறு, குளம், குட்டை,கடல்) விட்டு விடலாம். நான்கு திக்குகளிலும் உள்ள எதிர்மறை சக்திகளை அடியோடு அழிக்கவல்லது இந்த முறை. இதை மாதம் ஒரு நாள் செய்து வரலாம். தொழில் செய்யும் இடத்தில தொழில் நடத்துபவர் மட்டும் தலையை சுற்றி நீரில் விட்டுவிடலாம். வியாழன் இரவு நீரில் விட முடியாதோர் மற்றும் ஆறு, கடல் செல்ல முடியாதோர், கிராம்பினை ரோட்டில் நான்கு திக்குகளில் போட்டு விட்டு, வீட்டிற்கு வெளியே உப்பினை கரைத்து ஊற்றி விடலாம். இதை செய்து முடித்ததும், வீட்டில் உள்ள அனைவரும் ராக் சால்ட் கொண்டு குளித்து விடவும். உடனடி பலன் அளிக்க வல்ல முறை இது. 

Post a comment

0 Comments