சிலிர்க்க வைக்கும் ஜின் மாந்த்ரீகம் 2ஜின்களுக்கு தன் விருப்பப்படி எந்த மத சம்பிரதாயங்களை பின்பற்றும் சுதந்திரம் உண்டு. இவைகள் தன் இஷ்டப்படி வாழவும் சுதந்திரம் உண்டு ஜின் லோகத்தில். 

முக்கியமான ஐந்து ஜின் வகைகள் : 
ஈப் ப்ரீட் :

சமூகத்தில் மனிதர்களோடு இணைந்து வாழும் இவைகள் மிகுந்த அறிவை கொண்டவை-குகைகள் போன்றவற்றிலும் வாழும். பைசாச மற்றும் நற் குணங்கள் என இரண்டையும் கொண்டவை இவை. தன்னை வைத்து வேலை வாங்குவோரையே சுலபமாக ஏமாற்றி தீங்கு செய்யும் வல்லமை பெற்றவை. மனிதர்களை மனித குணங்களை அப்பட்டமாய் அறிந்தவை. தன்னை ஏவுபவரின் வேலைகளை சுலபத்தில் முடித்து கொடுக்க கூடியவை. கிங் சாலமன் இவ்வித ஜின்களை தான் பயன்படுத்தினார் என கோனில் குறிப்பும் உண்டு.

மாரிட்

அலாவுதீன் தன் தேவைகளுக்கு உபயோகித்த வகை இந்த ஜின் தான். நீர் மற்றும் நீர் நிலைகளில் உள்ள இவைகளை அதே இடங்களில் வைத்து தேவைகளை கூற, உடனடியாக நம் காரியங்கள் இவற்றால் நிறைவேற்றப்படும். 

க்ஹௌல் 

பைசாச தன்மை கொண்ட இவைகள் மிகுந்த துன்பத்தை ஏற்படுத்த வல்லவை. இவைகளை தான் செய்வினை மற்றும் மாரணம் ஏற்படுத்த உபயோகிப்பர். ஆனால்  இவைகளை கட்டுக்குள் வைத்திருப்பது மிக மிக சிரமம். சுடு மற்றும் இடுகாடுகளில் வாழும் இவை மிகுந்த ஆபத்தை ஏற்படுத்த கூடியவை. கை தேர்ந்த மாந்த்ரீகர்கள் கூட இவற்றை அழைக்க தயங்குவர். 

வேட்டல 

மிகுந்த சுவாரசியம் மிக்க விஷயங்களை செய்ய கூடிய இவைகள் போலவே 'யோகினி தாந்த்ரீகத்திலும் சில உண்டு. பெயருக்கு ஏற்றார் போல் வேதாள குணம் மிக்க இவை நோய் உள்ளோர் மற்றும் உடல் பலவீனர் ஆகியோரிடும் புகுந்து அட்டகாசம் செய்யும்.

சீலா 

இவைகளிடம் தாரளமாக பாதுகாப்பாக நாம் உணர முடியும். மனிதர்களின் தேவைகளை உணர்ந்து முடித்து கொடுக்கும் வல்லமை பெற்றவை இவை. கூப்பிட்டவுடன் வரக்கூடியவை எனலாம். பெண் ரூபங்களில் வரும் திறமை பெற்றவை. அடிக்கடி உருவம் மாறுவதில் தேர்ந்தவை இந்த வகை ஜின் கள். 

அடுத்த பதிவில் முடிவுறும்.. 

Post a comment

0 Comments