காலை கண்விழித்தவுடன் படுக்கையில் இருந்தபடியே சுவாசம் எந்த நாசி வழியே வருகிறது என்று பார்க்கவும். உதாரணமாய், வலது நாசி வழியே வரின், வலது கையால் முகம் முழுதும் நன்றாக தேய்த்து கொள்ளவும். பின்பு வலது காலை எடுத்து வைத்து படுக்கையில் இருந்து எழவும். இப்படியே இடது நாசி வழியே வரின், இடது கையால் தேய்த்து கொண்டு, இடது காலை எடுத்து வைத்து எழவும். சில சமயம் இரு நாசிகளிலும் வரின், இரண்டு கைகளாலும் முகத்தை தேய்த்து கொண்டு, இரு கால்களையும் கீழே தரையில் படும் படி வைத்து எழவும். இப்படி செய்யும் ஒவ்வொரு நாளும் மிகுந்த மன அமைதி, கூரிய புத்தி கூர்மை கொண்டு செயல் படும் நாளாக அமையும். நம் 'தாந்த்ரீக மூச்சு' பயிற்சி'யில் வழங்கப்படும் மிக முக்கியமான முறை இது.  

Post a Comment

Previous Post Next Post

Get in touch!