அற்புத பலனளிக்கும் அப்சரஸ்கள்

புராணங்களில் அப்சரஸ்களை பற்றி கேள்விப்பட்டிருப்போம் . மகரிஷிகளின் தவம் மற்றும் தவறான நோக்கத்திற்காக தவமிருக்கும் சில ரிஷிகளின்,அசுரகுல அரசர்களின்  தவம் போன்றவற்றை, அவர்களை தம் பால் ஈர்த்து தவத்தை கலைப்பதே இவர்களின் நோக்கம் என்றெல்லாம் சில பழைய திரைப்படங்களில் கூட பார்க்க நேரிட்டிருக்கலாம். ரம்பை விஷ்வாமித்திரரை மயக்கி தவத்தை கலைத்தது அனைவருக்கும் நினைவிருக்கலாம்.  இவைகளை தவிர, இவர்களுக்கு உண்டான சக்திகளையும் இவர்களை முறையாக பூஜித்தால் அதனால் ஏற்படும் சக்திகளும் ஏராளம். நம் பல சந்ததிகளுக்கு செல்வத்தை தொடரச்செய்யும் சக்தியும், நம்மை மிக வசீகரமான தோற்றமளிக்க செய்யும்  சக்தியும், பல இன்னல்களில் இருந்து நம்மை காக்கும் சக்தியும் இவர்களுக்கு உண்டு. இவர்களும் ஸ்தூல சூட்சும ரூபத்தில் உளவுபவர்களே. ரிக் வேதத்திலும், மஹாபாரத்திலும் இவர்களை பற்றி ஏராளமான குறிப்புகள் உண்டு. இந்திரனுக்கு சேவை செய்வதை தோற்றத்தின் நோக்கமாக செய்து வரும் இவர்களை, ஒரு நாள் மற்றும் ஏழு நாள் மற்றும் 21  நாட்களில் சித்தி செய்யும் முறைகள் உள்ளன. வெள்ளிக்கிழமை இரவில் தொடங்கலாம் இவர்களின் உபாஸனையை. சில காலம் முன்பு முயற்சித்ததில் முதல் முறை தோல்வியை தந்து இரண்டாவது முறையாக 21 நாட்களில் எமக்கு வெற்றி கிடைத்தது. ஏற்கனவே கூறியுள்ளபடி இதற்கான பயிற்சியை அளிக்கும் வாய்ப்பு ஏற்பட்டால், இதன் சாதனா முறையை விளக்குகிறேன். இணையத்தில் இது போன்றவைகளை வழங்க இயலாது. இவையெல்லாம் சாத்தியமா என ஒரு சிலர் நினைக்கக்கூடும். எப்படி காவல் தேவதைகளை, ஆஞ்சநேயர், கணபதி மற்றும் வேறு சில தேவிகளை உபாசித்து பலன் பெறுகிறோமோ அதே போன்ற முறை தான் இவர்களுக்கும்.

முக்கியமாக இருக்கும் அப்சரஸ்களான ரம்பை,  மேனகை, ஊர்வசி,திலோத்தமை, க்ரிடாக்க்ஷி, தவிர 108  முதல் 1008  எட்டு வரை இவர்கள் உண்டு என வேதங்களும் இதிகாசங்களும் கூறியுள்ளன,

அலம்வஷு, அம்பிகா, அருணா, அர்ஷா, இந்திரலக்ஷ்மி,பூர்வசித்தி, காம்யா, லதா, லக்ஷ்மணா, கார்னிகா, கேஷினி, ரக்ஷிதா போன்றோர் சிலர்.

நம் புராணங்களில் உள்ள இவர்களை போல் இகிப்திய, முகமதிய மற்றும் கிருஸ்துவ, பௌதிக புராணங்களிலும் பல் வேறு அப்சரஸ்கள் உண்டு.

பக்தியுடன்  அழைக்கும் நேரத்தில் வந்து நம் அவசிய தேவைகளை பூர்த்தி செய்து அருளும் அசாத்திய சக்தி இந்த அப்ஸரஸ்களுக்கு உண்டு. 

Post a Comment

Previous Post Next Post

Get in touch!