ராட்சசன் என அழைக்கப்படும் துர் பிசாசு அல்ல இவர். பிராமண குளத்தில் பிறந்து வேதங்கள் கற்றுணர்ந்து வறுமையாலும், சில சாபக்கேடுகளாலும் தற்கொலை செய்து கொண்டு இன்று ஸ்தூல ஆத்மாவாக உலவுபவர்/ உதவுபவர் தான் மேற்கண்ட ப்ரஹ்மராக்க்ஷஷர். இன்றும் கேரளாவின் சாக்த வழிபாட்டு ஸ்தலங்களில், வெளிப்பிரகாரங்களில் இவர் சன்னதிகள் இருக்கும். தேவிக்கு படைத்த நிவேதனத்தை இவருக்கும் படைப்பர். நேந்திரம் பழத்தின் பிரியர் இவர். வேறு சில கிரந்தங்களில் இருந்து நாம் புரிந்து கொண்டது என்னவெனில், மெத்த படித்து, அதனால் கர்வம் கொண்டு எவரையும் மதியாது இழிவு செய்து, வெறி செயல்களில் ஈடுபடும் குணமே "ப்ரஹ்மராக்க்ஷஷம்" . மிகுந்த தடைகள், மற்றும் கடவுள் நமக்கு அருள்வதில்லை என்ற நினைப்பு கொண்டோர், கேரளாவில் உள்ள ஏதேனும் பகவதி கோவில் சென்று, ப்ரஹ்மராக்க்ஷஷருக்கு விசேஷ பூஜைகள் செய்து, பின் பகவதியை வழிபட்டு திரும்ப, நம் தடைகள் விலகும். மேலும் ரியல் எஸ்டேட் துறையில் கட்டுமான பணிகளில் உள்ளோர், கட்டுமான பணிகள் மத்தியில் எந்த காரணத்தினாலாவது நின்று போயிருப்பின் அல்லது விற்பனை ஆகாது  இருப்பின், இவருக்கு உரிய மரியாதைகள் செய்ய, சொத்துக்கள் விரைந்து கட்டி முடிக்கப்பட்டு விற்பனையாகும். மேலும், நம் சொந்தங்களில் யாரேனும் துர்மரணம் அடைந்திருப்பின் ப்ரஹ்மராக்க்ஷஷருக்கு உரிய மரியாதையை மற்றும் பூஜைகள் செய்வித்து அந்த ஆத்மாவை நல்ல படியாக மேலுலகம் சென்றடையச்செய்யலாம்.

குறிப்பு : தமிழ்நாட்டிலும் சில பகவதி கோவில்களில், ஐயப்பன் கோவில்களில் இவர் சன்னதி இருப்பதாக கேள்வி. கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் இவரை வழிபடுதல் கூடாது. 

Post a Comment

Previous Post Next Post

Get in touch!