அனைத்து நலன்களும் சேர்க்கும் பஞ்சாட்சர பிரயோகம் 21.6.17மேற்கண்ட நாள் முதல் சூரியன் மிதுன ராசியில்-திருவாதிரை நட்சத்திரம் முதல் பாதத்தில் சஞ்சரிக்கிறார். வருடத்தில் ஒரு முறை மட்டுமே கிடைக்கக்கூடிய அதியற்புத தினங்கள். இந்நாட்களில் 'நமசிவய' என்னும் மந்திரத்தை சிவன் சன்னதி ஸ்தல விருட்சத்தின் கீழோ அல்லது கர்ப்பகிரகம் அருகிலோ அமர்ந்து முடிந்த வரை மனதினுள் கூறி வருவது அனைத்து நன்மைகளும் உடனடி சித்திக்க ஏதுவாகும். இதை 26.6.17 திங்கள் வரை செய்து வரலாம். மேலும் 22.6.17 வியாழன் அன்றும் 26.6.17
திங்கள் அன்றும் காலை வேளையில் ஈசனுக்கு எலுமிச்சை மற்றும் இஞ்சி சேர்க்காத தூய கரும்பு சாறு, தேன் மற்றும் பால் என்னும் வரிசையில் அபிஷேகம் செய்வித்து, கர்ப கிரக விளக்கிற்கு தூய நெய் சேர்த்து, நந்தியெம்பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி, சரபேஸ்வரர் சன்னதியில் விளக்கு ஏற்றி வைத்து வழிபட்டு வர, அனைத்து வித செல்வங்களும் நம்மை வந்து சேரும். ஈசனின் பரிபூரண அருள் கிட்டும். இந்நாட்களில் அசைவம் மற்றும் உயிர் வதை, தோல் பொருட்கள் உபயோகம் தவிர்க்கவும். 

Post a comment

0 Comments