தன ஜன வசியத்தை தரும் கருப்பு மஞ்சள் (புதிய வரத்துக்கள்)

(ஜூலை மாதம் 2017ல்  இட்ட பதிவு, மீண்டும் வரத்துக்கள் வந்த நிலையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது)

மேற்கண்ட கருப்பு மஞ்சள் பற்றி  ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். பலர் இதை உபயோகித்து மேற்கண்ட தன ஜன வசீகரத்தை பெற்று வருகின்றனர். சிறிது மாதங்களாக வரத்து குறைவான நிலையில் இருந்த இவை தற்சமயம் மீண்டும் நம் சென்டரில் உள்ளன.

இதை பற்றி அறியாதோருக்கு சிறு விளக்கம்.

தாந்த்ரீக சாதனையில் உபயோகிக்கப்படும் இவை மிகுந்த சக்தி வாய்ந்தவை. காளியாக இதை இன்றும் வீடுகளில் வளர்த்து வழிபடுவோர் வட நாட்டில் ஏராளம்.

இதை வீட்டில் வளர்த்து பூஜித்து வர, கிரகங்களில் ராகு மற்றும் குருவின் அருளை பரிபூரணமாக பெறலாம்.

பெண்களுக்கு தன்னூடே வைத்திருக்க, மிக பாதுகாப்பை தரவல்லவை இவை.
ஆண் / பெண்கள் திலகமாக இட்டு செல்ல வசீகர சக்தியை கொடுக்கும்.காரிய பலிதம் ஏற்படும்.

சட்டிஸ்கர் மாநில தாந்த்ரீகர்கள், ஏன், பொது மக்கள் கூட இவற்றை குழைத்து அதனுடன் தங்களின் மோதிர விரலின் சிறிது ரத்தத்தை சேர்த்து நெற்றியில் இட்டு செல்வர்-வசீகர சக்தி பெற.

இவற்றை பணப்பெட்டியில் வைத்திருக்க தனம் மிகும். தொடர்ந்து பண ரீதியாக சரிவுகளை சந்திப்போர், இதனை ஒரு சிகப்பு துணியில் வைத்து, மேற்கொண்டு ஐந்து கோமதி சக்கரம் மற்றும் ஐந்து சோழிகளை வைத்து முடிந்து பணப்பெட்டி அல்லது பீரோவில் வைத்திருக்க, சரிவு நிலை மாறி தனம் செழிக்கும்.

தற்சமயம் பொடி மற்றும் முளையுள்ள கிழங்கு வடிவிலும் கிடைக்கும்.

தேவைக்கு : +919840130156 / +918754402857 

Post a comment

0 Comments