நம்மை சுற்றி இயங்கும் ஸ்தூல துர் தேவதைகள்


சதா சர்வ காலமும் எல்லாவற்றிலும் தடை, முயன்று முடிக்க வேண்டும் என
நினைத்தாலும் முயலவேமுடியலாத நிலை, பண விஷயங்களில் ஏமாற்றம் மற்றும் தடைகள், நல்ல உயர்வான இடத்தில இருந்து காரணமின்றி திடீர் சறுக்கல், பணம் கிட்டிவிடும் என்று கடைசி வரை நம்பி கொண்டிருக்கையில், கடைசி நேரத்தில் பணத்தை கொடுக்கிறேன் என்றவர் கைவிரிப்பு, குடும்பத்தில் திடீர் சச்சரவுகள், வீட்டிற்கு வெளியே இருப்பின் சுகம் அதே சமயம் வீட்டிற்குள் நுழைந்த மறுநிமிடம் எரிச்சல்- இத்தனைக்கும் காரணமே தெரியாமல் விழித்து கொண்டிருக்கும் சமயம், எவராவது நமக்கு செய்வினை செய்து விட்டாரோ என அஞ்சி அதற்கு பரிகாரம் செய்தும், சரியாகாத நிலை-போன்றவைக்கு காரணம், மாந்த்ரீக சாஸ்திரம் மற்றும் வேறு பல கிரந்தங்களில் கூறப்பட்டுள்ளது போல் நம்மை சுற்றி இயங்கி கொண்டிருக்கும் ஸ்தூல சூட்சும துர் சக்திகளே. இதை பற்றி ஏற்கனவே சில முறை கூறியுள்ளோம். இந்த பதிவு ,ஒரு வீட்டில் குழந்தை பிறந்ததும், அதனை பதினாறு ஆண்டுகள் சுற்றி வரும் துர்தேவதைகள் பற்றியது. இவைகளினால் குழந்தைக்கோ அல்லது அதன் பெற்றோருக்கோ மேற்கண்ட இனம் தெரியாத தொல்லைகள்  ஏற்படும் என அறிந்து கொள்க.

பிறந்த முதல் நாள்  மற்றும் முதல் மாதம் மற்றும் முதல் வருடம்- மோகனாங்கி என்ற துர்சக்தி தொல்லை செய்யும்.
 இரண்டாம் நாள்,இரண்டாம் மாதம், இரண்டாம் வருடம்   வைத்திரி
நீலகண்டி  என்ற துர்தேவதை துஷ்டை செய்யும்.
மூன்றாம் நாள், மூன்றாம் மாதம், மூன்றாம் வருடம் விரோதசன்னி, குடும்பத்தில் விரோதத்தை ஏற்படுத்துவாள்.
நான்காம் நாள், நான்காம் மாதம், நான்காம் வருடம் காலாக்கினி, கலக்கத்தை கொடுத்து வருவாள்.
ஐந்தாம் நாள், ஐந்தாம் மாதம், ஐந்தாம் வருடம், ஆகாச ஜின்னு தேவதை, குடும்பத்தில் ஆத்திரத்தை எற்படுத்துவாள்.
ஆறாம் நாள், ஆறாம் மாதம், ஆறாவது வருடம், கன்னி தேவதைகள் கஷ்டத்தை கொடுக்கும்.
ஏழாம் நாள், ஏழாவது மாதம், ஏழாவது வருடம், கௌரி தேவதை கௌரவக்குறைச்சல் கொடுத்து வரும்.
எட்டாம் நாள் எட்டாம் மாதம், எட்டாம் வருடம் சுப்பிர பகவதி,சூன்ய நிலையை கொடுக்கும்.
ஒன்பதாம் நாள், ஒன்பதாம் மாதம்,ஒன்பதாம் வருடம் வாயக்கினி குடோரி குலநாசம் செய்ய முயலும்.
பத்தாம் நாள்,பத்தாவது மாதம்,பத்தாம் வருடம் ஆகஞ்சி தேவிருத்தி தேடி வந்து துன்பிக்கும்.
பதினோராம் நாள்,பதினோராம் வருடம்,பஞ்சமி பாதிரி என்ற தேவதை பாதகம்  செய்ய புறப்படுவாள்.
பன்னிரெண்டாம் நாள், பன்னிரெண்டாம் மாதம், பன்னிரெண்டாம் வருடம், உச்சிங்கி அரக்கி தேடி வருவாள்.
பதிமூன்றாம் நாள்,பதிமூன்றாம் மாதம்,பதிமூன்றாம் வருடம்,பிடாரி  தேவதை பிடுங்கல்களை கொண்டு வரும்.
பதினான்காம் நாள்,பதினான்காம் மாதம்,பதினான்காம் வருடம் மாடன் உக்ரன் வந்து கஷ்டங்களை கொடுக்கும்.
பதினைந்தாம் நாள்,பதினைந்தாம் மாதம், பதினைந்தாம் வருடம்,மயான ருத்திரி, தூக்கத்தை கெடுக்கும்.
பதினாறாம் நாள், பதினாறாம் மாதம்,பதினாறாம் வருடம் பால மோகினி, தன் வலையில் விழ செய்யும்.

மேற்கண்டவை அனைவருக்குமானதல்ல. எனவே பயம் வேண்டாம். எனினும் முதலில் கொடுக்கப்பட்ட நிகழ்வுகளும், பின் அந்த நாட்கள் மாதங்களையும்  சரி பார்த்து  உறுதி செய்து, அதன் படி தகுந்த  நபர் கொண்டு பரிகார சாந்தி செய்து பயன் பெறவும். 

Post a comment

0 Comments