தொழில் வளர்ச்சிக்கு சூட்சும ரத்ன பரிகாரம்ரத்ன கற்களின் வீரியங்களை ,ஆற்றல்களை கொண்டு, அதை அணிவதின்    மூலமும், வைத்திருப்பதின் மூலமும்  அதிர்ஷ்டங்களை பெற வழி காட்டுகிறது 'ரத்ன சாஸ்திரம்' எனும் ஆதி கால கிரந்தம். வரும் பதிவுகளில் அதை எப்படி சூட்சும முறையில் உபயோகித்து அத்தகைய அதிர்ஷ்டங்களை பெறலாம் என்பதை காண்போம்.

புதனுக்குரிய மரகதத்தை அறுவது கேரட்டுகள் உள்ள பொடியாக தொழில் செய்யும் இடத்தின் வடக்கு பக்கத்தில் தரையில் சிறு துளையிட்டு புதைத்து, அதே போல் சனிக்குரிய நீல கல்லின் நாற்பது கேரட்டுள்ள தூளை வடகிழக்கிலும், ராஹுவிற்குரிய ஹேசோநைட், முன்னூறு கேரட்டுள்ள தூளை மேற்கிலும் புதைத்து வைக்க, தொழில் வளர்ச்சி தடைகள் அனைத்தும் உடனடியாக நீங்கி பண வளம் பெருகுவதை கண் கூடாக காணலாம். மூன்றையும் செய்ய முடியாதோர் ஒவ்வொன்றாகவும் செய்து வளர்ச்சி காணலாம். பல இடங்களில் பரீட்சித்து வெற்றி கண்ட முறை இது.


Post a comment

0 Comments