சனி பெயர்ச்சி மஹா ஹோமம் - 17.12.17-சங்கர மடம், காலை பத்து மணி முதல்

ஷீர்டி ஸ்ரீ சாய் சேவா ட்ரஸ்டின்- ருத்ர பரிஹார் ரக்க்ஷா சென்டர் வழங்கும்


சனி பெயர்ச்சி மஹா ஹோமம்

 குரு, ராகு கேது, சனி பெயர்ச்சியை பொறுத்த வரை, பெயர்ச்சி நாள் முதல் தான் அவர்களின் பலன்கள் ஆரம்பிக்கும் என்பதில்லை. குறைந்த பட்சம் ஒரு மாதம்  முன்னதாகவே பெயர்ச்சி பலன்களை பெற ஆரம்பித்துவிடுவோம். இதை அனுபவத்தில் உணர்ந்திருப்பீர்கள். இதை மனதினில்  கொண்டு, வரும் சனி பெயர்ச்சி ஹோமத்தை 17.12.17 ஞாயிறு காலை பத்து மணிமுதல் மதியம் ஒரு மணி வரை நடத்த திட்டமிட்டுள்ளோம். பலரின் தொடர்ந்த வேண்டுகோளுக்கிணங்க, அனைவரும் வந்து சேர வசதியாக இம்முறை சென்னை தி.நகர் சங்கர மடத்தில் மேற்கண்ட ஹோமம் நடைபெற உள்ளது. இதில் அன்பர்களுக்கு இரட்டிப்பு பலன் என்னவென்றால், ஹோமம் நடைபெறும் இடத்தின் பின்புறம் பிரசித்தி பெற்ற பசு மடம் உள்ளது. மிக அருகில் பழம்பெரும் காசி விஸ்வநாதர் ஆலயமும் உள்ளது. தயாராக வந்தால், பசுவுக்கும் உணவு கொடுத்து பலன்களை பெறலாம். வழக்கத்திற்கு மாறாக இம்முறை சங்கல்பம் செய்து கொள்ள மிக சிறிய காணிக்கையாக ஓருவருக்கு ரூ.இருவது மட்டும் வசூலிக்கப்படுகிறது. மேலும், நம் 'சனீஸ்வர ரகசியங்கள்' புத்தகத்தில் விவரங்கள் வெளிவரவிருக்கும், மிக அதீத சக்தி வாய்ந்த, ஏழரை சனி, அஷ்டம சனி, கண்டக சனி, ஜென்ம சனி, மேலும், சனி திசை புத்தியினால் அவதியுறுவோருக்கு,  மந்திர உருவேற்றம் செய்யப்பட்ட ரட்ஷை குறைந்த கட்டுமான ரூ.150 /- மட்டும் வழங்க உள்ளோம். இந்த ரட்ஷை, இந்த பெயர்ச்சி காலத்தில் மட்டுமே கிட்டும். இந்த ரட்ஷை அடுத்து வரவிருக்கும் இரண்டரை ஆண்டுகளில் உங்களை ஆபத்து மற்றும் துன்பங்களில் இருந்து காத்து ரட்சிக்கும் என்பது உறுதி. வெளியூர் அன்பர்கள் போதிய தபால் தலை வைத்து மேற்கண்ட ஹோமத்தில் சங்கல்பம் செய்து கொள்ள, தங்கள் குடும்பத்தினர் சகிதம் பெயர்,நட்சத்திரம்,ராசி,கோத்திரம் ஆகியவற்றை எழுதி அனுப்பலாம். நன்கொடை செலுத்தும் விவரங்கள் பற்றி தொலைபேசியில் அழைத்து தெரிந்து கொள்ளவும்.


ஹோமம் நடைபெறவிருக்கும் இடம் : சங்கர மடம், தி.நகர், சென்னை
நாள் : 17.12.17
நேரம் : காலை 10 AM முதல் 1PM வரை 
விவரங்களுக்கு  : +918754402857 / +919840130156

அனைவரையும் நிவேதன அன்னம் உண்டு சனீஸ்வரரின் பரிபூர்ண ஆசி பெற்று செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஹரி ஓம் தத் சத் 

Post a comment

0 Comments