தாந்த்ரோக்த சனி உபாசனை 19.5.18

உபாசனை என்றால் என்ன ??  மேற்கண்ட நம் பதிவினை
பார்த்து பலர் எழுப்பிய கேள்வி. சுலப நடையில் சொல்வதென்றால், ப்ரீதி செய்யும் பூஜை முறை எனலாம்.

எவரெவருக்கு சனி உபாசனை தேவை??

தொழில் அமையாதோருக்கு, அடிக்கடி வேலை மாற்றம் அல்லது வேலையின்மை, வேலைக்கு ஆட்கள் அமையாமல் தொழிலில் நஷ்டமடைவோர், எங்கும் எதிலும் தோல்விகளை மற்றும் தடைகளை சந்திப்போர், முடியும் தருவாயில் வரும் விஷயங்கள் முடிவில் கை விட்டு போகின்றது என வருத்தம் கொள்வோர், ஜாதகத்தில் சனியின் நிலை சரியில்லாது இருப்போர், ரிஷபம், விருச்சிகம், தனுசு மற்றும் மகர ராசி மற்றும் லக்கினத்தை கொண்டோர் அவசியம் தங்கள் வாழ்வினை மேம்படுத்தி கொள்ள மேற்கண்ட பூஜை முறையை செய்து சனி ப்ரீதி செய்து கொள்வது அவசியம். இதில் தனுசு மற்றும் மகர ராசி மற்றும் லக்கினம் கொண்டோர் இந்த முறையை கற்றுணர்ந்து வருடம் ஒரு முறை 19 தினங்கள் இதை செய்து வந்தால், பரிகாரத்திற்காக எவ்வித முறைகளையும், அல்லது கோவில் கோவிலாக சென்று வருந்துவதையும் அறவே தவிர்க்கலாம். தாந்த்ரோக்த முறை என்பதால் பலனை உபாசனை நாட்களிலேயே உணர முடியும். அன்பர்களின் வசதிக்காக இதை நேரிலும், ஆடியோ பதிவு மூலமும் கொடுக்கப்படுகிறது. இதை கற்றுணரும் அதிர்ஷ்டம் உள்ளோர், வரும் சனி இரவில் இருந்தே இதை ஆரம்பிக்க வேண்டுமாய் கேட்டு கொள்கிறோம். புனர்வசு நாளும் பஞ்சமி திதியும் சேரும் அற்புத நாள். இந்நாளில் எடுக்கும் எந்த ஆன்மீக விஷயமும் கட்டாயம் சித்தி பெறும்.  ஆகவே தான் இந்த நாளில் உபாசனை வழங்க திட்டமிட்டுள்ளோம். நேரம் கருதி இருபது நபர்களுக்கு மட்டுமே அனுமதி.

விரும்பி விழைவோர் அழைப்பிற்கு : +919840130156 / +918754402857

குறிப்பு : இந்திய நேரம் காலை பத்து முதல் இரவு ஏழு வரை மட்டும் தொடர்பிற்கு அனுமதி. 

Post a comment

0 Comments