ராவண சம்ஹிதை - தொடர்கிறதுமஹாவிஷ்ணுவிலிருந்து பிரம்மனும், ப்ரம்மாவிலிருந்து ப்ரஜாபதிகளும், ப்ரஜாபதியிடமிருந்து புலஸ்தியரும், புலஸ்தியர் வம்சத்தில் ராவணனும் , குபேரனும் பிறப்பெடுத்தனர். சர்வேஸ்வரரிடம் ராவணன் கற்ற தந்த்ரத்தில் ஷட்கர்மங்கள் உள்ளன. தற்காலத்தில் தாந்த்ரீகத்தில் சில தோல்விகள் வருவதற்கு காரணம், பலர் எந்த ஒரு கர்மத்தையும் எந்த நேரத்திலும் அல்லது நாளிலும் செய்யலாம் என நினைப்பதே. இதற்கு பிரத்யேக நேரம், நட்ஷத்திரம், திரவியம், வண்ணம், ஜபமாலை, திசை, தேவதை என பல உள்ளன. அப்படி செய்யப்படாத கர்மங்கள் வெற்றியை தருவதில்லை. ராவணன் கணபதி,தசமஹா தேவியர், யட்சிணி,யோகினி, கமலவாஸினி, காக்கை தந்த்ரம், மிருக தந்த்ரம், திலக தந்த்ரம்,யந்த்ர முறைகள் போன்ற பலவற்றை கற்றுணர்ந்திருப்பது தெரிகிறது. இது ஒரு மஹா பொக்கிஷமாகும். மேலே, குறிப்பிட்டுள்ள கர்மங்களாவன : ஷாந்திகரணம் (கோள்களின் தாக்கத்திலிருந்து விடுபட, நன்மைகள் சேர, நோய் நொடிகளில் இருந்து விடுதலை பெற, வறுமையில் இருந்து விடுபட இதை நாடலாம் . 
வஷிகரணம் : இது உங்களுக்கு தெரிந்திருக்கும்.
ஸ்தம்பனம் : அடுத்தோருக்கு தடையை ஏற்படுத்துதல், ஸ்தம்பிக்க செய்தல்.
வித்வேஷனம் : பிரித்தல்
உச்சாடனம் மற்றும் மாரணம். மேலும், இதில் மோஹனம் (மற்றவரை நம்மை மோஹிக்க செய்தல்) ஆகர்ஷணம் போன்றவையும் அடக்கம். 

பூக்களை கொண்டு பாக்கினை கொண்டு என பல்வேறு மந்த்ர தந்த்ர முறைகளும் இதில் உண்டு. கருவிலிருக்கும் குழந்தையின் நகர்ந்திருக்கும் நாபியை யந்திரத்தினை கொண்டு சரி செய்ய முடியும் என தெரியுமா உங்களுக்கு?  

கடந்த பல வருடங்களாக பலர், இம்முறைகளை கற்றுத்தரக்கூறி வற்புறுத்தி வருகின்றனர். எனினும், கால சூழ்நிலையையும், இதனால் கற்பவர்,மற்றோர்க்கு, பாதிப்பையும் ஏற்படுத்த முடியும் என்ற காரணத்தால், கோரிக்கைகளை ஏற்காமல் இருக்கின்றோம். ஒரு முறை, சர சாஸ்திரத்தை கட்டணமின்றி பயிற்சியாக கொடுக்க இருந்த பொழுது, நன்கு விவரமறிந்த பல காலமாக அதை தொடர்ந்து கடைபிடிக்கும் வல்லுநர் ஒருவர் , 'அனைத்து விஷயங்களையும் கொடுத்து விடாதீர், தவறான கைகளில் சேர்ந்து விடப்போகிறது' என வேண்டினார். ஆகவே, முழு முறைகளையும் கூறாது, தங்களுக்கு நன்மை சேர கூடிய முறைகளை மட்டும் அந்த பயிற்சியில் கொடுத்து முடித்தோம். 

ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Post a comment

0 Comments