குரு பெயர்ச்சி 2018 துலாம் விருச்சிகம் தனுசுதுலாம் : பண ரீதியான யோகமான காலகட்டம். வாக்கினால் வளங்கள் சேரும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பல இடங்களில் இருந்து பண புழக்கம் மற்றும் வாய்ப்புகள் வரப்போவதால், குழப்பத்தில் சரியான  வாய்ப்பை தவற விட வாய்ப்புள்ளது. இப்போதிலிருந்தே மனத்தெளிவை உண்டு செய்து, தங்களுக்கு எது தேவை எது தேவையில்லை என்பதை அறிந்து கொண்டு அதன் படி நடக்கவும். வருகின்றது ஒரு பொற்காலம்-அதை வீணாக்காது  உபயோகித்து கொள்ளவும்.

விருச்சிகம் : இனம் தெரியாத பயம், வீட்டிற்குள் நுழைந்தாலே எரிச்சல், குடும்பத்தில் அமைதி குறைவு போன்ற அனைத்தும் நீங்கி குதூகலம் நிறையப்போகும் அற்புதகாலம். வீடு மனைகள் வாங்குவது புதிதாக குடி போவது போன்றவை நிகழும். பெற்றோரால் சொத்து சேர்க்கை அவர்களின் அன்னியோன்னியம், அன்பு ஆகியவை அதிகரிக்கும் காலகட்டம்.

தனுசு : ஆன்மிகம் மற்றும் கலாச்சாரம் சார்ந்த அனுபவங்களும் ஆர்வங்களும் மேலோங்கும். அடுத்தவருக்கு உதவும் குணங்களும், தான் என்கின்ற அகங்காரம் குறைந்தும் காணப்படும். ஆன்மீகத்தில் தக்க குருவும் அவர்தம் ஆசீர்வாதத்தால் ஆன்மீகத்தில் மேல் நிலைக்கு வித்திடும் காலம் இது. மற்றோருக்கு தனக்கு  தெரிந்ததை உபதேசிக்கும் நிலையும் ஏற்படும்.

ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.youtube.com/amanushyam

Post a comment

0 Comments