முருகர் செவ்வாய்க்கு உரியவர் என்பதால் பலரும் நிலம் கட்டிடம் மற்றும் மனை சார்ந்த அனைத்திற்கும் முருகக் கடவுளே அதிபதி என நினைத்துக் கொண்டுள்ளனர். ஆனால் புராணங்களில் மனை நிலம் வீடு போன்ற அனைத்து ரியல் எஸ்டேட் சார்ந்த அல்லது கட்டிடத் தொழில் சார்ந்த எல்லா விஷயத்திற்கும், குறிப்பாக சொல்ல வேண்டுமானால் பூமி சார்ந்த அனைத்து விஷயத்திற்கும் வராகமூர்த்தியை சரணடைவதே ஆகச் சிறந்த பரிகாரமாக அமையும். மேலும் ராகு சார்ந்த பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு வராஹ மூர்த்தியை வணங்கி வழிபடுவதே ஆகும். ராகு சார்ந்த பிரச்சனைகளுக்கு அதாவது ராகு புத்தி அல்லது ராகு தசை அல்லது ஜாதகத்தில் ராகு 2 4 5 7 8 இடங்களில் இருப்போருக்கு பரிகாரமாகவும், மனை, கட்டிடம் சார்ந்த பரிகாரமாகவும் வருகிற 1.5.2019 அன்று மாலை 5 மணி முதல் சென்னை மேற்கு மாம்பலம் கவரை தெரு ஏஎம்ஆர் திருமண மண்டபத்தில் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். வராக மூர்த்தி வழிபடுவதற்கு துவாதசியன்று விரதம் இருந்து பூஜிப்பது மிகச் சிறந்த பரிகாரம் ஆகும்.அதே சமயம் துவாதசியன்று ஹோமம் செய்வது மிகுந்த பலனை கொடுக்கும். இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் புதன்கிழமையும் துவாதசியும் இணைந்து வருவது மிக அபூர்வம் ஆகும். இந்த தினத்தில் செய்யப்படும் ஹோமம் மிக அதிக பலனை ஹோமத்தில் கலந்துகொண்டு வழிபடுவோருக்கு கொடுக்கும் என்பதால் அன்றைய தினத்தில் முடிவு செய்துள்ளோம். ராகுவை கட்டுப்படுத்த புதனால் மட்டுமே இயலும். புதனுக்கு அதிபதி பெருமாள் ஆகும். வராக அவதாரம் எடுத்துள்ள பெருமாளை இத்தினத்தில் அதுவும் புதனும் துவாதசியும் இணைந்த தினத்தில் பூஜிப்பது மிக மிக அதிக பலனை கொடுக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ராகு சார்ந்த பிரச்சினைகளுக்காக இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு சங்கல்பம் செய்து கொள்வோருக்கு ராகுவிற்கான விசேஷ ரக்ஷை வழங்க இருக்கிறோம் இந்த ரக்ஷையின் வீரியமானது 3 வருடங்கள் வரை உங்களை காபந்து செய்யும். பொதுவாக வராக எந்திரத்தை தென்மேற்கில் வைத்து வழிபடுவது அல்லது புதைத்து வைப்பது, மனை சார்ந்த வழக்குகள், வாஸ்து கோளாறுகள், கட்டிடம் வாங்க முடியாமல் இருப்பது, கட்டிடம் விற்க முடியாமல் இருப்பது, மனை வாங்க முடியாமல் தவிப்பது, வீடு பேறு இல்லாமல் இருப்பது, ரியல் எஸ்டேட் தொழிலில் நலிவடைந்து இருப்பது போன்ற பிரச்சனைகளிலிருந்து காபந்து செய்யும். ஆகையினாலே வராக எந்திரம் மனை சார்ந்த பிரச்சனைகளில் உள்ளவர்களுக்கு இந்த ஹோமத்தில் வழங்கப்படுகிறது. மேலும் ராஹுவினால் சொல்ல முடியாத துன்பங்களை சந்தித்து வருவோருக்காக கலச அபிஷேகமும் (3 நபர்களுக்கு மட்டும்) செய்யப்படுகிறது. இந்த சங்கல்பங்களின் மேல் விவரங்களை தொலைபேசியில் அணுகி தெரிந்து கொள்ளவும். வருகிற புதன்கிழமை வராக ஜெயந்தியை முன்னிட்டு வராக மூர்த்திக்கு மேற்கண்ட ரக்ஷை யந்திரங்களை வைத்து உருவேற்றம் ஆரம்பிக்க இருக்கிறோம். ஆகையினால் சங்கல்பம் செய்து கொள்ள விழைவோர் வரும் புதன் கிழமைக்குள் செய்து கொண்டால் அவர்களுக்கு இதன் பலன் மேலும் அதிகமாகும்.
மேல் விவரங்கள் : +919840130156 / +918754402857