kula deivam aadi month 2021
ஆடி மாதம் 2021 ஆடி மாதத்தில் குலதெய்வத்தை வீட்டிற்கு வரவழைப்பது எவ்வாறு என்பதைக் காண்போம்.

பொதுவாகவே ஏதாவது கஷ்டங்கள்‌ பிரச்சினைகள் ஏற்படும் போது தான் எதாவது பரிகாரம் உள்ளதா?  என்று தேடுவோம்.

அவ்வாறு செய்யும் பரிகாரம் பலிதமாக வேண்டுமெனில் 3 முக்கியமான விஷயங்களை நாம் கடைபிடிக்க வேண்டும்.அவை:

1.குலதெய்வ வழிபாடு

குலதெய்வத்தை கவனிக்காமல் வேறு எந்த தெய்வத்தை கும்பிட்டும் முழுமை அடையாது. ஆகவே குலதெய்வ வழிபாடு மிக முக்கியம்.

2.முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய தர்பணம், சிரார்த்தம்

முன்னோர்களுக்கு வருடம் ஒரு முறை சிரார்த்தம் செய்வது (சிரத்தையுடன் செய்ய வேண்டிய விஷயம் என்பதால் சிரார்த்தம் என பெயர்) மற்றும் ஒவ்வொரு மாத அமாவாசை தினங்களில் செய்ய வேண்டிய தர்ப்பணம் மிக முக்கியம். மேலும் முன்னோர் வழிபாட்டிற்கு அவர்களே நம் இருப்பிடம் தேடி வரும் மஹாளய அம்மாவாசை தினங்களை விட்டு விட கூடாது. உங்கள் கஷ்டங்கள் தீர,பரிகாரங்கள் பலிதம் தர இது மிக முக்கியம்.அம்மாவாசை அன்று ஆண் பெண் இருவரும் சனாதன தர்மத்தின் படி தர்ப்பணம் கொடுக்கலாம்.மேலும், இதை பலர் மந்திரம் கூற தெரியாத நிலை, தவறாக மந்திரத்தை உச்சரித்து விடுவோமோ என பயம் மற்றும் நேரம் காரணம் கொண்டு செய்வதில்லை. ஸ்ரீகுரு.வாமனன் சேஷாத்ரி, அம்மாவாசை தினங்களில் எளிதாக 10 நிமிடத்தில் முன்னோர்கள் மனம் குளிர தர்ப்பணம் செய்யும் முறை பற்றி விளக்கியுள்ளார். அதை காண : 

https://youtu.be/ml2_l-Ao_RY

3. நம் பெற்றோர்களின் க்ஷேமங்களை பேணிக் காப்பது 

பெற்றோர்களை கவனிக்காமல் வேறு எவ்வித தான தர்மங்களை செய்தாலும் பலன் இல்லை. இது ஏதோ தத்துவம் என நினைத்து விட வேண்டாம். ஜோதிட விதிகளின் படி சந்திரன் தாயையும் சூரியன் தந்தையையும் குறிப்பன ஆகும். இவர்களை எவர் ஒருவர் கவனிக்காமல் மரியாதையை இல்லாமல் நடத்துகின்றனரோ அவர்களுக்கு சூரியன் மற்றும் சந்திரனின் அருட்பார்வை கிடைப்பதில்லை. உயிர் சக்தியை அளிக்கும் வீரிய சக்தியை அளிக்கும் சூரியன் மற்றும் மனோகரகனான சந்திரன் பலமிழந்தால் வாழ்க்கையில்லை. ஆகவே பெற்றோர்கள் எவ்வித நிலையில் இருப்பினும் அவர்கள் குணம் எப்படி இருப்பினும் நமக்கு உயிர் கொடுத்த அவர்களை பேணி காப்பது மிக முக்கியம்.

இவற்றுள் முதலாவதான குலதெய்வ வழிபாடு பற்றிய விபரங்களை அறிந்து கொள்ளலாம்.அவரவர் குலவழக்கப்படி இதற்கு குறிப்பிட்ட மாதங்கள் போன்றவை இருப்பினும், தமிழ் மாதங்களில் தை,மாசி, ஆடி,மார்கழி,கார்த்திகை மாதங்கள் சிறப்பான பலன்களை தரக்கூடியது என்பது பெரியோர் வாக்கு.அந்த வகையில் இந்த ஆடி மாதம் 2021 ல் செய்யக்கூடிய ஒரு பிரத்யேக வழிபாட்டு முறையை தாந்த்ரீக ஜோதிட ஸ்ரீகுரு.வாமனன் சேஷாத்ரி வழங்கியுள்ளார். இது ஆண் தெய்வமாயினும் பெண் தெய்வமாயினும் பொதுவாக ஒரே வழிமுறைதான்.

இதற்கு என்னென்ன தேவை என்று தெரிந்து கொள்ளலாம்

1.சிகப்பு நிற ஹோமத்தில் போடப்படும் பட்டுத் துண்டு(பூர்ணாஸுதி பட்டு)இது ஜரிகையுடன் இருக்கும். பார்த்து வாங்கவேண்டும்.

2.சுத்தமான சந்தனம்

3.குங்குமம்

4.சிறிது மஞ்சள் தூள், மஞ்சள் கட்டை-1

5.விபூதி

6.கட்டி சாம்பிராணி

7.கையளவு உதிரி மல்லிகை பூக்கள்

8.21எண்ணிக்கையில் முனை முறியாத பச்சரிசியுடன் சிறிது மஞ்சள் தூள் பிசிறி  தயாரித்த அட்சதை

9.அஷ்டகந்தம் சிறிது

10.சிறிய தேவதாரு கட்டை 1

11.கரித்துண்டு 1(கரி கடையில் வாங்கவேண்டும்)

இவை யாவற்றையும் ஒரு நல்ல நாள் பார்த்து பட்டுத் துணியில் நம் பூஜை அறையில் வைத்து முடிப்பு போன்று கட்டி ஒரு தட்டில் வைத்து, குலதெய்வ படம் இருப்பின் அதன் முன்பு வைத்து குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மனமாற வேண்டி, குலதெய்வம் இதில் வாசம் செய்யவேண்டும் என்று தொட்டு வணங்கி,தூப தீபம் காட்டி,கற்கண்டு அல்லது திராட்சை அல்லது உங்கள் குலதெய்வத்திற்கு பிடித்தமான சைவ உணவு படைத்து, ‌பின்பு குடும்பத்தில் மூத்தவர் கையில் கொடுத்து அதை வீட்டின் உள் வடகிழக்கு பகுதியில் சுவற்றில் பொறுத்தி(மாட்டி) வைத்து தினசரி தூபம் காட்டி வழிபட்டு வரவேண்டும்.குலதெய்வம் தெரியாதவர்கள், எங்கள் குலதெய்வமே எங்கள் வேண்டுதலை ஏற்று எங்களுக்கு உங்களை வெளிப்படுத்த வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய  வேண்டும்.இவ்வாறு செய்யப்படும் பூஜையால் நம் குலதெய்வம் மனம் குளிர்ந்து நிரந்தரமாக நம் வீட்டில் வாசம் செய்வது உறுதி. மேற்கண்ட குலதெய்வ முடிச்சை ஆடிமாதம் 2021 ல் செய்வது சிறப்பு .தவற விட்டவர்கள் வளர்பிறை திங்கள்,புதன், வியாழன்வெள்ளி நாட்களில் செய்து பலன் பெறலாம் .மேலும் இது பற்றி அறிந்து கொள்ள :

 https://youtu.be/5lGWfEGRfjI

தமிழாக்கம் உதவி-நன்றி : ஸ்ரீமதி. நிர்மலா 


Post a Comment

Previous Post Next Post

Get in touch!