Varahi Mantra Varahi Amman

ஆடி மாதம் 2021 புத பஞ்சமி வராஹி அம்மன் வழிபாடு வராஹி வீரிய மந்திரம் 


வராஹி அம்மனை அஷ்டமி அம்மாவாசை பஞ்சமி மற்றும் செவ்வாய் கிழமைகளில் வழிபடுவது சிறப்பு. அதிலும் ஆடி மாதத்தில் வரும் பஞ்சமி தினம் மிக அதீத சக்தி வாய்ந்த ஒன்றாகும். பொதுவாக வராஹி அம்மனை எதிரிகள் அழிய, அவமானங்கள் அழிய,துரோகங்கள் அழிய, கடன் கரைய, கடன் நீங்க, நோய்கள் நீங்க இரவு நேரத்தில் வழிபடுவது மிக சிறப்பு. வராஹி அம்மனை வழிபாடு செய்யும் நேரம் சிகப்பு வண்ண ஆடை உடுத்தியிருந்தால் வராஹி அம்மன் அகம் மகிழும். சிகப்பு திரியிட்டு இலுப்பெண்ணெய் தீபம் ஏற்றுவது, வராஹி அம்மனுக்கு சிறப்பு. கீழ்கண்ட சக்தி வாய்ந்த வாராஹி மந்திரத்தை கூறும் முறையை பற்றியும் வராஹி வழிபாடு செய்யும் முறைகளை பற்றியும் பல்வேறு விதங்களில் தாந்த்ரீக ஜோதிட ஸ்ரீகுரு.வாமனன் சேஷாத்ரி விளக்கியுள்ளார். மேலும் வராஹி அம்மனின் 12 திருநாமங்களை கூறி அவளை அர்ச்சிப்பது குறித்தும் கீழ்கண்ட காணொளியில் காணலாம்.


ஆடி பஞ்சமியில் வராஹி அம்மனை வழிபடும் முறை 


வந்தே வாராக வக்த்ராம் வரமணி மகுடாம் வித்ரும ஸ்ரோத்ர பூஷாம்  

ஹார க்ரைவேய துங்க ஸ்தனபர நமிதாம் பீத கௌஸேய வஸ்த்ராம்  |  

தேவீம் தட்ஸ்சோத்ரவ ஹஸ்தே முஸல மத வரம் லாங்கலம் வா கபாலம் 

வாமாப்யாம் தாராயந்தீம் குவலய கலிதாம் ஸ்யாமளாம் ஸுப்ரசன்னாம்||   


வராஹி அம்மனின் பன்னிரண்டு திருப்பெயர்கள் 


ஓம் பஞ்சம்யை நம: ஓம்

ஓம் தண்ட நாதாயை நம: ஓம்

ஓம் ஸங்கேதாயை நம: ஓம்

ஓம் சமயேஸ்வர்யை நம: ஓம்

ஓம் ஸமய ஸங்கேதாயை நம: ஓம்

ஓம் வாரஹ்யை நம: ஓம்

ஓம் போத்ரிண்யை நம: ஓம்

ஓம் ஸி வாயை நம: ஓம்

ஓம் வார்த்தாள்யை  நம: ஓம்

ஓம் மஹாஸேனாயை நம: ஓம்

ஓம் ஆக்ஞா சக்ரேஸ்வர்யை நம: ஓம்

ஓம் அரிக் ன்யை நம: ஓம்

Post a Comment

Previous Post Next Post

Get in touch!